யூ.கே.ஜி படிக்கும் குழந்தை‘Penis’பற்றி கேட்ட கேள்வியால் அதிர்ந்த குடும்பம்! #SexEducation_01

By: Volga
Subscribe to Boldsky

'செக்ஸ்' என்ற வார்த்தையை கேட்டாலே காதை மூடிக்கொள்ளும் மக்களிடையே எப்படி செக்ஸ் குறித்த சரியான புரிதலை அவர்களின் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்த முடியும்.

இன்றைய சூழலில் பாலியல் குறித்த விழிப்புணர்வு குழந்தைகளுக்கு மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கிறது. இப்போதேவா சொல்லிக் கொடுப்பது... இதெல்லாம் குழந்தைகளுக்கு தேவையில்லாத விஷயம்... என்று நாமாக எதையும் தீர்மானிக்க வேண்டாம்.

சரி சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் அது அவர்களின் கவனத்தை திசை திருப்பாதா? ஆர்வத்தை தூண்டாதா? என்ற உங்களது அடிப்படைக்கேள்வி மிகவும் நியாயமானது தான்.

what is Penis?

ஆனால் செக்ஸ் பற்றி நீங்கள் சொல்லாமல் தவிர்க்கும் போதோ அல்லது, அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு ஓவர் ரியாக்‌ஷன் காட்டும் போதோ தான் அவர்களுக்கு செக்ஸ் குறித்த தவறான அபிப்ராயம் ஏற்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் சொல்ல வேண்டும்?

ஏன் சொல்ல வேண்டும்?

வளர்ந்த பிறகு தானாக தேடித் தெரிந்து கொள்ளட்டுமே... என்று நினைப்பவர்கள் பாலியல் வன்கொடுமைகளை சந்திக்க வயதும், பாலினமும் ஓர் தடையாக இருப்பது கிடையாது என்ற அடிப்படையை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

நம்முடைய குழந்தையின் பாதுகாப்பு நமக்கு முக்கியம் தானே அப்போ இதைத் தொடருங்கள்.

குழந்தைகளுக்கு நீங்கள் எப்படி பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று உங்களிடமும் உங்களின் குழந்தைகளிடமும் பேச வருகிறேன்.

மிரட்டல் :

மிரட்டல் :

சொல்லு யார் சொன்னா? இப்பச் சொல்லப்போறியா இல்லையா என்று அம்முவின் இரண்டு கைகளையும் இருக்கப்பிடித்து மிரட்டிக் கொண்டிருந்தார் தாத்தா.

அவள் மிரண்டு அழுது கையை விடச்சொல்லி அடம்பிடித்துக் கொண்டிருந்தாள்.

எவ்ளோ தைரியம்... இப்போ சொல்லப்போறியா இல்லையா இந்த வயசுலேயே இதெல்லாம் பேசுறியே என்று கத்த

விடுங்க தாத்தா நான் அம்மாகிட்ட போணும் என்று அவள் காலை உதறி அழுது கொண்டிருந்தாள்.

விடுதலை :

விடுதலை :

விடுங்க சும்மா குழந்தைய.... என்று பாட்டி குழந்தையை தாத்தாவிடமிருந்து விடுவித்தார்.

அவ அம்மா வேற சாய்ந்தரம் தான் வருவா.. அப்பறம் அம்மா வேணும்னு அழ ஆரம்பிச்சா யாரால முடியும் இவ வேற நாள் பூரா அழுதுட்டே இருப்பா...

என்னடா அம்முக்குட்டி தாத்தாவ நம்ம அடிச்சிருவோம் சரியா வா உனக்கு லேப்டாப்ல ரைம்ஸ் போட்டுவிடுறேன் உக்காந்து பாரு நீ தாத்தாட்ட போகாத என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றாள்.

பப்பூக்கு ஒரு உம்மா :

பப்பூக்கு ஒரு உம்மா :

உம்ம்ம்ம்மா..... என்று சொல்லி தொட்டிலில் படுத்துக் கொண்டிருந்த தம்பி பாப்பாவுக்கு பாட்டியின் இடுப்பில் உட்கார்ந்த படி ஃப்ளையிங் கிஸ் பறக்க விட்டாள்.

ஸ்ஸூ.... பப்பூ முழிச்சிடுவான் வா நம்ம ஹால்ல போய் உக்காரலாம் என்று சொல்லி வெளியே வந்து அறையின் கதவை மெல்லமாக சாத்தினாள் பாட்டி. ஹாலில் உட்கார வைத்து ரைம்ஸ் போட அவள் சிறிது நேரத்தில் அம்மு அதில் மூழ்கினாள்.

பாட்டியிடமும் அதே கேள்வி :

பாட்டியிடமும் அதே கேள்வி :

அம்மு கொஞ்ச நேரம் தூங்குறீயா வந்ததுல இருந்து லேப்டாப் பாத்துட்டு இருந்தா கண்ணு என்ன ஆகுறது அப்பறம் கண்ணு வலிக்கும் ஊசி போடுவாங்க வா இங்க என்று சொல்லி வலுக்கட்டாயமாக லேப்டாப்பை ஆஃப் செய்து அழைத்துச் சென்றாள்.

பாட்டியின் மடியில் சமத்தாக உட்கார்ந்து கொண்டு மீண்டும் அதே கேள்வியை கேட்டாள் அம்மு..

பாட்டி Penisனா என்ன?

சாமி கண்ண குத்தும் :

சாமி கண்ண குத்தும் :

பாட்டிக்கு முதலில் புரியவில்லை.... அதன் பிறகு அவள் எதேதோ ஏடாகூடாமானதைக் கேட்கிறாள் என்பதை யூகித்துக் கொண்டார்.

ஸ்ஸூ.... இதெல்லாம் சத்தமா சொல்லக்கூடாது. தப்பு

தப்பா?

ஆமாம் தப்பு இதத்தான தாத்தா கிட்ட கேட்ட தாத்தா திட்டினாருல்ல அப்போ தப்பு தான.... வெளிய சொன்னா சாமி கண்ண குத்தும் சரியா... அம்மு. என்று கண்களை உருட்டி மிரட்ட

ம்ம்ம்... வேணாம் நான் சொல்லமாட்டேன் என் கண்ண குத்த வேணாம்னு சாமிகிட்ட சொல்லு என்று அழ ஆரம்பித்தாள்.

பள்ளியில் சண்டை :

பள்ளியில் சண்டை :

காலையில் அம்முவை பள்ளிக்கு கிளப்பிக் கொண்டிருக்கும் போது அவள் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது.

யார் சொல்லிக் கொடுத்தா இது... இன்னக்கி நிச்சயமா போய் அவங்க டீச்சர பாத்து கேட்டுட்டு வரப்போறேன். சின்ன குழந்தைக்கு எப்டி அது தெரியும்... அங்கயிருக்குறவங்க யாராவது சொல்லியிருப்பாங்க, சொல்லாம எப்டி கரெக்டா அந்தப் பேரச் சொல்றா என்று மனதில் பொருமிக் கொண்டு

பள்ளியில் ஆசிரியரிடம் அதே கோபத்துடன் கேட்டார்.

முதலில் புரியாமல் விழித்த அந்த ஆசிரியர் பிறகு நிலைமையை யூகித்து இங்க ஒரு பேரண்ட் வந்து ஸ்டூடண்ட் ஒரு பையனுக்கு பென்னிஸ்ல இன்ஃபெக்‌ஷன்னு சொல்லி லாங் லீவ் வேணும்னு பேசிட்டு இருந்தாங்க ஒரு வேல உங்கப் பேத்தி அதக்கேட்ருப்பான்னு நினைக்கிறேன் என்றார்.

மேற்கொண்டு எதுவும் தாத்தாவல் சொல்ல முடியவில்லை.

இனிமே இந்த மாதிரி விஷயங்கள எல்லாம் பேசும் போது பக்கத்துல யார் இருக்கான்னு பாத்துப் பேசுங்க என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

அம்மாவிடம் புகார் :

அம்மாவிடம் புகார் :

மாலையில் எல்லாரும் உட்கார்ந்திருக்க முந்தைய நாள் நடந்த அம்முவின் கேள்வியைப் பற்றியும் இன்று காலை ஆசிரியரிடம் நடந்த உரையாடலும் பேசப்பட்டது.

ஒழுங்கா கண்டிச்சு வை... சும்மா சின்னக் குழந்தைன்னு விட்டா இது தப்பா போய்டும் நம்மகிட்ட கேட்டா சரி... இதே மத்தவங்க முன்னாடி கேட்டிருந்தா என்னாகியிருக்கும் என்று தாத்தா புலம்ப...

சின்னக் குழந்தப்பா விடுங்க நீங்க சும்மா டென்ஷனாகதீங்க என்று அம்முவின் அப்பா எழுந்து கொண்டான். அவன் எல்லாத்தையும் சாதரணமாவே எடுத்துட்டு இருக்கான் நீ கொஞ்சம் பாத்துக்கோ என்று மருமகளிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

தாத்தாட்ட என்ன கேட்ட? :

தாத்தாட்ட என்ன கேட்ட? :

இதைப்பற்றி மகளிடம் சொல்லவா வேண்டாமா? என்ற சந்தேகம் முதலில் எழ... இதை எப்படி அணுகுவது என்ற சங்கடமும் அவளிடம் இருந்தது. நான்கு வயது குழந்தைக்கு என்னவென்று சொல்லி புரியவைப்பது என்று அவளுக்குப் புரியவில்லை.

அதைப் புரிந்து கொள்கிற மனப்பக்குவம் அவளுக்கு இருக்காதே, என்ன செய்ய என்ன செய்ய என்று மண்டையை பிய்த்துக் கொள்ளாத குறை தான். சரி முயற்சித்துப் பார்ப்போம் என்று அம்முவை அழைத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டால்.

பாப்பா ஸ்கூல்ல என்ன பண்ணீங்க.... மிஸ் என்ன சொன்னாங்க ஸ்நாக்ஸ் எல்லாம் சாப்டியா? என்று மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்....

சேரி நேத்து தாத்தாட்ட என்ன கேட்ட நீ என்று கேட்டதும்

முகத்தை தொங்கப்போட்டு அவள் அம்மாவின் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

சாமி கண்ணக்குத்திரும் என்று அழ ஆரம்பிக்க.... இது யாருடைய வேலையாக இருக்கும் என்பதை யூகித்துக் கொண்டாள்.

அம்மா சொல்லவா? :

அம்மா சொல்லவா? :

சரி சரி அழாத.... அம்மா பக்கத்துல இருக்கேன்ல சாமி வராது.... வந்தா அம்முக்குட்டி குட் கேர்ள்ன்னு நான் சொல்றேன் சரியா

நிஜமா?

நிஜமா.... நான் சொன்னா சாமி கேக்கும்...

கண்ண குத்தாதுல.

குத்தாது... சரி அம்மாகிட்ட சொல்லு தாத்தாட்ட என்ன கேட்ட?

பென்..பென்னி...ம்ம்ம் என்று யோசித்து மென்று முழுங்கி பென்னிஸ்னா என்னன்னு கேட்டேன் ஆனா தாத்தா கையபிடுச்சு அடிச்சு.... என்று விவரிக்க ஆரம்பித்தாள் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

சரி பென்னீஸ்னா என்னன்னு அம்மா சொல்லவா?

தவறு செய்கிறோமா? :

தவறு செய்கிறோமா? :

ம்ம்ம்.. சொல்லுங்க என்று முகம் பார்த்து திரும்பி உட்கார்ந்து கொண்டாள். இவளுக்கு ஒரு பக்கம் கூச்சமாகவும், இன்னொரு பக்கம் தயக்கமாகவும் இருந்தது. நம்ம எதாவது தப்பு பண்றோமா என்ற பயமும் அவளுக்கு இருந்தது .

நான் மகளிடம் அம்மாவாக இருக்கிற பொறுப்புகளிலிருந்து என் கடமையைச் செய்கிறேன் அந்த கடமையை ஒரு தோழியாக அவளிடம் பகிரப்போகிறேன். ஒரு பெண்ணாக நிச்சயம் அவளுக்கு தெரிந்திருக்க வேண்டும்.அது அவசியமானதும் கூட இதுவும் அவளுக்கு ஓர் பாதுகாப்பு தான் என்று தன்னை சமாதானம் செய்து கொண்டாள்.

எழுந்து அறையின் கதவை சாத்தினாள்.

சரி கவனி....

சரி கவனி....

அம்மூ இப்போ அம்மா சொல்றத கவனமா கேளு என்று ஆரம்பித்தால்

பாப்பா உச்சா போனியா?

ம்ம்ம்... போய்ட்டேன் சாப்ட்டு கை கழுவிட்டு பாத்ரூம் போய்ட்டேன். பாட்டி தான் லைட் போட்டு விட்டாங்க

நல்லா வாஷ் பண்ணிட்டியா?

ம்ம்ம்... வாஷ் பண்ணிட்டேனே... எந்த தயக்கமும் இல்லாமல் பதில்கள் வந்து விழுந்தன அம்முவிடமிருந்து இவளுக்குத் தான் சொல்ல இன்னும் தயக்கமாய் இருந்தது. சரி இவ்வளவு தூரம் வந்து விட்டோம் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு ..

சரி அம்மு எங்கயிருந்து உச்சாப்போன...

இங்கயிருந்து..... என்று குனிந்து தன் பிறப்புறுப்பைச் சுட்டிக்காட்டினாள்.

அப்டியெல்லாம் காமிக்க கூடாது :

அப்டியெல்லாம் காமிக்க கூடாது :

அவள் கையை மடக்கி.... இப்டியெல்லாம் கைகாட்டக்கூடாது உஷ்ஷ்.... என்று லேசாக மிரட்டி கைகளை விலக்கிவிட்டாள்.

சரி அம்மு பார்ட்ஸ் ஆஃப் த பாடி சொல்லு என்று எழுந்து நிற்க வைக்க... அவள் ஹெட்... ஐஸ்.. நோஸ்.. என்று ஆரம்பித்து டோஸ்...லிட்டில் ஃபிங்கர் என்று மளமளவென ஒப்பித்தாள்.

ஹ்ம்ம்... வெர்ரீ குட் சூப்பரா சொல்லிடுச்சு என் செல்லக்குட்டி என்று அழுத்த ஒரு முத்தம் பதித்து கை தட்டினாள். ம்ம்ம்.. இப்போ பாப்பா உச்சா போகும்ல அது பேரு என்ன தெரியுமா?

ம்ம்.... உச்சா போற இடம் .

இது தான் பென்னீஸ் :

இது தான் பென்னீஸ் :

சிரித்துக் கொண்டாள்... இல்லல்ல உச்சா போற இடம் பேரு ‘வெஜைனா' எங்க சொல்லு வெ-ஜை-னா.... என்று உச்சரிக்க அவளும் பின் பாட்டு பாடினாள். இது பேரென்ன வெஜைனா.

இருவரும் உச்சரித்தார்கள்.

இதே போல பப்புவும் உச்சா போவான்ல.

ம்ம்....

அதுக்கு பேரு பென்னீஸ்

பேரென்ன??

பென்னீஸ்...

ப்ரைவேட் பார்ட்ஸ் :

ப்ரைவேட் பார்ட்ஸ் :

அர்த்தம் தெரிந்ததன் மகிழ்ச்சியில் மீண்டும் மீண்டும் அப்பெயர்களை சொல்லிக் கொண்டிருந்தாள்.

இங்க வா அப்டியெல்லாம் சத்தமா சொல்லாத...

கையை பிடித்து இதுக்கு பேருதான் செஸ்ட்... என்று அவளின் மார்பைத் தொட்டு காண்பித்தாள்.

சொல்லு.... செஸ்ட்

செஸ்ட்....

இது தான் அம்முவோட ப்ரைவேட் பார்ட் . புரிஞ்சதா?

ப்ரைவேட் பார்ட்னா? :

ப்ரைவேட் பார்ட்னா? :

அப்டினா என்று கேள்வியை கேட்டு நிறுத்தினாள்.

அப்டினா.... இது அம்முவோடதுல்ல.... யாரும் அம்முவோட செஸ்ட்டையும் வெஜைனாவையும் தொடக் கூடாது.

தொட்டா என்னாகும்?

இது அம்முவோட ப்ரைவேட் பார்ட்ல மத்தவங்க எப்டி தொடலாம்... உன் டாய்ஸ எப்டி பத்ரமா வச்சுக்குற அது மாதிரி அம்முவோட ப்ரைவேட் பார்ட்ஸ் யாரும் தொடாம பாத்துக்கணும்.

முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு அம்மா சொல்வதை கவனிக்க ஆரம்பித்தாள்.

குட் கேர்ள் :

குட் கேர்ள் :

சரி யாராவது தொட்டா என்ன பண்ணுவ?

கடிச்சிடுவேன்....

சிரித்துக் கொண்டே... வெரீ குட் அப்பறம் நேரா அம்மாக்கிட்ட வந்து சொல்லணும்.... மொத்தல்ல நல்லா கத்தணும் . அம்முக்குட்டி சூப்பரா கத்துவல்ல என்று சொல்ல கத்தி காண்பித்தாள்...

ஹ்ம்ம்ம்ம் இதே போல கத்தணும். அப்பறம் அந்த இடத்துல இருந்து அம்மு வேகமா வெளிய ஓடி வந்திரணும் சரியா....

ம்ம்ம்... யாராவது என் ப்ரைவேட் பார்ட்ஸ்ல தொட்டா கத்தணும், ஓடணும் அம்மாக்கிட்ட சொல்லணும்...

வெர்ரீ.... குட் .

அவளுக்கு புரிய வைத்து மன நிறைவைக் கொடுத்தது. அதோடு குழந்தைக்கு பாலியல் கல்வியை தொடர்ந்து சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்தது.

- தொடர்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: parenting, sex, kids, child, children
English summary

what is Penis?

Starting early with age-appropriate information about sex is a good idea.
Story first published: Friday, December 8, 2017, 10:00 [IST]
Subscribe Newsletter