இரண்டாவது குழந்தை கர்ப்பம் அடைந்திருக்கும் பெண்களும் அவர்களின் குடும்பத்தினரும் கண்டிப்பாக படியுங்கள

Posted By:
Subscribe to Boldsky

வீட்டில் முதல் குழந்தையின் வருகையை விட இரண்டாவது குழந்தையின் வருகை தான் கலேபரமாக இருக்கும். மூத்த குழந்தையின் தவிப்பு எந்த குழந்தையை இப்போது சமாதானப்படுத்துவது என்று முழிப்பது என அம்மாக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எல்லாம் சொன்னால் புரியாது.

மூத்த குழந்தையை விட இரண்டாவதாக பிறந்த குழந்தைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்போம். தனக்கான இடத்தை இந்த குழந்தை பிடுங்கிக் கொண்டது என்ற கோபம் அப்போதிருந்தே மூத்த குழந்தையின் மனதில் துளிர்விட ஆரம்பித்து விடும். இதனை தவிர்க்க சில யோசனைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிவிப்பு :

அறிவிப்பு :

இரண்டாவதாக நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை முதல் குழந்தைக்கும் சொல்லி புரியவைத்திடுங்கள். பிறருக்கு குறிப்பாக உறவினர்களுக்கு நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை சொல்வதற்கான வேலையை முதல் குழந்தையிடம் சொல்லி மற்றவரக்ளிடம் சொல்லச் சொல்லலாம்.

தனக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டதாகவே அந்த குழந்தை உணரும். புதிய குழந்தையை வரவேற்கும்.

பரிசுகள் :

பரிசுகள் :

குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்கச் செல்லும் போதோ அல்லது வீட்டிலேயே நீங்கள் தயாரிக்கும் போதோ உங்களது பெரிய குழந்தையையும் உடன் வைத்துக் கொள்ளுங்கள். மூத்த குழந்தையும் அதில் பங்கேற்று தன்னுடை தம்பி அல்லது தங்கைக்காக இதெல்லாம் செய்திருக்கிறான் என்று பாராட்டுங்கள்.

பொறுப்புகள் :

பொறுப்புகள் :

குழந்தை பிறப்புக்கு முன்னரே புதிதாக வரவிருக்கும் குழந்தையை பற்றிய அறிமுகத்தை கொடுத்திடுங்கள். மூத்த குழந்தைக்கு ஏற்ப அவர்களுக்கான பொறுப்புகளை கொடுத்திடுங்கள்.

உன் குழந்தை :

உன் குழந்தை :

பிறக்கப்போகும் இந்தக் குழந்தை உன்னுடையது. உன் தங்கை,உன் தம்பி உனக்கான பொருள் என்றால் எப்படி கவனமாக பார்த்துக் கொள்வாய் அதே போலத் தான் இந்த குழந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.

குழந்தைக்குத் தேவை :

குழந்தைக்குத் தேவை :

தன்னை விட இரண்டாவதாக பிறந்த குழந்தைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று குழந்தை உணரும் போது, நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள் குழந்தைக்கு தாயின் அணைப்பு தேவை என்பதை புரியவைத்திடுங்கள்.

ஒப்பீடு :

ஒப்பீடு :

ஒரு போதும் இரு குழந்தைகளையும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மையான குணநலன்களை கொண்டது. அதனை மாற்றியமைக்க நீங்கள் முயலாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips for preparing siblings for new baby

Tips for preparing siblings for new baby
Story first published: Monday, August 28, 2017, 17:52 [IST]
Subscribe Newsletter