For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிரியர் பெற்றோர்களுக்கு எழுதிய மனதை உருக்கும் கடிதம்!

ஆசிரியர் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதம்

By Lakshmi
|

குழந்தைகள் போட்டிகள் நிறைந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதே போல பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை போட்டிக்கு தயார்படுத்துவதில் தீவிரமாக உள்ளனர். பள்ளிக்குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எவ்வாறு ஊக்கமளிக்க வேண்டும் என்று ஒரு ஆசிரியர் தனது மாணவர்களின் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதம் இதோ உங்களுக்காக...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெற்றோர்களின் பாடு

பெற்றோர்களின் பாடு

வணக்கம்! உங்கள் குழந்தைக்கு பாடம் கற்றுத்தந்த ஒரு ஆசிரியராகவும், உங்களுக்கு சில விஷயங்களை கூற விரும்பும் ஒரு நபராகவும் இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

குழந்தையை முதல் நாள் பள்ளிக்கு அனுப்பும் போது பெற்றோர்களின் திகைப்பை நான் அறிந்திருக்கிறேன். அவர்களுக்கு மதிய உணவு பேக் செய்து தருவது, காலை 7 மணிக்கு பள்ளி பேருந்தை பிடிக்க நீங்கள் மூச்சுவாங்க ஓடுவது, வார இறுதி நாட்களில் வீட்டுப்பாடம் இல்லை என்று தெரிந்ததும் பெற்றோரின் முகத்தில் ஒரு வித நிம்மதி தெரிவது போன்றவற்றை உங்கள் இடத்தில் இருந்து என்னால் உணர முடிகிறது.

டீன் ஏஜ் பருவம் வரை...

டீன் ஏஜ் பருவம் வரை...

உங்கள் செல்ல குழந்தைகளை டீன் ஏஜ் பருவம் வரை வளர்க்க நீங்கள் படும் பாடு எனக்கும் கொஞ்சம் புரிகிறது. இந்த சமூதாயத்தில் குழந்தைகளை வளர்ப்பதில் திட்டமிடாத ஒரு போட்டி நடந்து கொண்டிருப்பதையும் என்னால் உணர முடிகிறது.

முகநூல்

முகநூல்

இந்த திட்டமிடாத போட்டி தான் நான் இந்த கடிதத்தை எழுத காரணமாகும். உங்கள் குழந்தைகளை குறிப்பிட்ட எழுத விருப்பமில்லாத காரணத்தால், கீதா என்ற மாணவியை பற்றி இங்கு எழுதுகிறேன். கீதா நன்றாக படிக்க கூடிய பெண். பேஸ் புக் மூலம் என்னுடைய பிரண்ட் ஆக இருக்கிறாள். பேஸ் புக் குழந்தைகள் தங்களது நண்பர்களுடன் தங்களது மகிழ்ச்சியை, சோகத்தை, உணர்வுகளை மற்ற பிரண்ட்ஸ் உடல் பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான சூழலை வழங்குகிறது. உங்களுக்கு தெரியுமா? உங்கள் குழந்தைகள் அவர்களது விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளும் போது அவர்களது மனம் லேசாகிறது.

ரிசல்ட் கவலை

ரிசல்ட் கவலை

கீதாவிற்கு பேஸ் புக்கில் ஏராளமான நண்பர்கள் இருக்கின்றார்கள். இருப்பினும் அவள் 12 ஆம் வகுப்பில் 89.5% மதிப்பெண் எடுத்தாள். அறிவியல் பாடத்தில் பள்ளியில் முதல் மாணவியாக வந்தாள். இருப்பினும் அவளது கவலை என்ன தெரியுமா? 90% மதிப்பெண்களை நம்மால் எடுக்க முடியவில்லையே என்பது தான். தனது மதிப்பெண்ணை பார்த்ததும் அவள் கூறிய முதல் வார்த்தை இது தான்.

தோல்வி ஏக்கம்

தோல்வி ஏக்கம்

என்னால் எனது செவிகளையே நம்ப முடியவில்லை. அறிவியல் பாடங்களில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி, தான் தோல்வி அடைந்துவிட்டது போல உணருகிறாள். இதற்கு காரணம் என்ன தெரியுமா? அவளது வகுப்பு மாணவி 90% மதிப்பெண் எடுத்துவிட்டாள். அதை பெருமையாக பேஸ் புக்கில் போட்டு கொண்டது தான்.

ஏன் இந்த நிலை

ஏன் இந்த நிலை

தான் எடுத்த 90% மதிப்பெண்னை பேஸ் புக்கில் பெருமையாக போட்டது அந்த பெண்ணின் தவறா? இல்லை 89.5% மதிப்பெண் எடுத்ததையே தோல்வியாக நினைப்பது இந்த பெண்ணின் தவறா? இந்த மதிப்பெண்கள் தான் அவர்களது திறமையை வெளிப்படுத்தும் ஒரே கருவியா? கட்டாயம் இல்லை...! படிப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் கூட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதிக மதிப்பெண் எடுத்த சிலர் வேலை இல்லாமல் இருப்பதை கூட நம்மால் இங்கு காணமுடிகிறது.

வெற்றியை கொண்டாட முடியாத நிலை

வெற்றியை கொண்டாட முடியாத நிலை

மதிப்பெண்கள் குறைவாக எடுப்பது ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால் இதை மாணவர்கள் பெரும் தோல்வியாக நினைத்துக்கொண்டு இடிந்து போய் விடுகிறார்கள். பெற்றோர்களாகிய நீங்கள் இதற்காக என்ன செய்ய வேண்டும்?

ஊக்கப்படுத்துங்கள்

ஊக்கப்படுத்துங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு ஊக்கமளியுங்கள். அவர்களின் கைகளை பற்றிக்கொண்டு ஆறுதல் கூறுங்கள். அவர்களின் மனதில் நம்பிக்கையை விதையுங்கள். மதிப்பெண்களால் ஒருவரது திறமையை முழுமையாக கணக்கிட முடியாது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல

இது கடினமான நேரமாக இருக்கலாம் ஆனால் எப்போதும் அப்படியே இருந்து விட போவதில்லை. கடினமான நேரங்களில் உங்களது பிள்ளைகளுடன் நீங்கள் இருப்பது மிகவும் அவசியம்.

நீங்கள் இதனை உங்கள் குழந்தைகளுக்காக செய்வீர்கள் என நான் நம்புகிறேன்.

வழிகாட்டியாக இருங்கள்

வழிகாட்டியாக இருங்கள்

இவ்வாறு அவர் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. என்ன பெற்றோர்களே ஆசிரியர் கூறிய அறிவுரை உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம். உங்கள் குழந்தைகளின் வழிகாட்டியாக நீங்கள் இருங்கள். அவர்களது மதிப்பெண்களை நினைத்து நீங்களே கவலைப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

teacher wrote letter to parents

teacher wrote letter to parents
Story first published: Thursday, June 29, 2017, 12:09 [IST]
Desktop Bottom Promotion