For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளிடம் ஸ்மார்ட் போனை கொடுப்பவரா நீங்கள்? அதனால் உண்டாகும் ஆபத்துகள் பற்றி தெரியுமா?

குழந்தைகள் ஸ்மார்ட் போன் உபயோகிப்பதால் உண்டாகும் பிரச்சனைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன

By Lakshmi
|

தற்போது ஸ்மார்ட் போன் நமது வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. முன்னர் எல்லாம் ஒரு குழந்தை அழுதால் தாய் தாலாட்டு பாடி தூங்க வைப்பார். ஆனால் இப்போது தங்களது ஸ்மார்ட் போனை கையில் கொடுத்து குழந்தையின் அழுகையை நிறுத்திவிடுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்மார்ட் போன் குழந்தைகள்

ஸ்மார்ட் போன் குழந்தைகள்

இன்றைய காலகட்டத்தில் பலரும் தனிக்குடும்பமாக இருக்கிறார்கள். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிடுகின்றனர். குழந்தையை சமாளிக்க பெரும்பாலும் தங்களது ஸ்மார்ட் போனை கையில் கொடுத்து ஒரு வீடியோ அல்லது விளையாட்டுகளை ஆன் செய்து கையில் கொடுத்துவிடுகின்றனர். இதனால் குழந்தைகளே பல மணி நேரங்கள் ஸ்மார்ட் போன்களை உபயோகப்படுத்த தொடங்கவிட்டன.

அடிமையாகும் குழந்தைகள்

அடிமையாகும் குழந்தைகள்

பெரியவர்கள் தான் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் இன்று குழந்தைகளும் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கின்றன. ஒரு வயது குழந்தைக்கு கூட ஸ்மார்ட் போனை பயன்படுத்த தெரிந்து இருக்கிறது.

இது சரியான முறையா?

இது சரியான முறையா?

உங்களது குழந்தைகள் எப்படி ஸ்மார்ட் போனை உபயோகப்படுத்துகின்றனர்? கைகளில் போனை வைத்து கொண்டு குனிந்து, தலையை கீழ் நோக்கி வைத்துக்கொண்டு தானே உபயோகப்படுத்துகின்றனர். இது சரியான முறையில்லை. நீண்ட நேரம் இதே நிலையில் குழந்தைகள் விளையாட்டுகள் அல்லது வீடியோக்களை பார்க்கும் போது அவர்களது கழுத்து பகுதியில் அதிகமான வலி ஏற்படுகிறது.

ஆபத்து!

ஆபத்து!

தொடர்ந்து குனிந்து உட்கார்ந்து போனை பார்த்து கொண்டு இருந்தால் கழுத்து வலி அதிகமாகும். இது முதுகு மற்றும் கழுத்து வலியாக மட்டுமே இருந்துவிடாது. பின்னாளில் இது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கலாம். இது தோல் பட்டை வலி மற்றும் விரல்களில் வலியை உண்டாக்கும். இதனால் குழந்தைகளின் கையால் எழுதும் திறன் பாதிக்கக்கூடும். தசைப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும்.

குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போனால் வரும் இந்த ஆபத்துகளில் இருந்து எவ்வாறு விடுபடலாம் என்பதை காணலாம்.

1. நேராக அமர்தல்

1. நேராக அமர்தல்

குழந்தைகள் ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் போது நேராக உட்கார்ந்து உபயோகிக்க கற்றுக்கொடுங்கள். தலையை குனிந்து போனை பார்ப்பதை தவிர்க்க சொல்லுங்கள்.

குழந்தைகள் ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் போது நேராக உட்கார்ந்து உபயோகிக்க கற்றுக்கொடுங்கள். தலையை குனிந்து போனை பார்ப்பதை தவிர்க்க சொல்லுங்கள்.

2. ஸ்மார்ட் போன் உபயோகத்தை குறைக்கவும்

2. ஸ்மார்ட் போன் உபயோகத்தை குறைக்கவும்

உங்களால் குழந்தைகள் ஸ்மார்ட் போன் உபயோகிப்பதை தடுக்க முடியவில்லை என்றால், குறைவாக பயன்படுத்த சொல்லுங்கள். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் இடைவெளி எடுக்க சொல்லுங்கள். வெளியில் சென்று விளையாட சொல்லுங்கள். அல்லது வேறு செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள்.

3. ஓய்வு எடுக்க சொல்லுங்கள்

3. ஓய்வு எடுக்க சொல்லுங்கள்

குழந்தைகள் அதிகமான ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் முதுகு தண்டு மற்றும் கழுத்து வலி என்று கூறினால் அவர்களை நன்றாக ஓய்வெடுக்க சொல்லுங்கள். எந்த வலியாக இருந்தாலும் நன்றாக ஓவ்வெடுப்பது சிறந்த தீர்வாக அமையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Smartphone Addiction can Lead to Neck and Back Problems to Kids

Smartphone Addiction can Lead to Neck and Back Problems to Kids
Story first published: Thursday, June 15, 2017, 11:50 [IST]
Desktop Bottom Promotion