உங்கள் பிள்ளைகள் அறிவாளியாக இருக்க ஒமேகா-3 சத்தை பரிசோதனை செய்திருக்கீங்களா?

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

மனிதர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக குறிப்பிட்ட பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்வது நன்மை பயக்கும். அந்த வகையில் ஒமேகா 3 பரிசோதனையை வருடத்திற்கு ஒரு முறை செய்வது நமது உடல் நலத்தை பாதுகாக்க உதவும். ஒமேகா 3 யின் குறைபாடு பல வியாதிகளை தோற்றுவிக்கும். அடிப்படை உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது ஒமேகா 3 .

ஒமேகா 3 கொழுப்புகள் தாவரங்களில் இருந்தும் கிடைக்கப்படுகின்றன. கடல் வாழ் உயிரினங்களில் இருந்தும் கிடைக்க படுகின்றன. ALA , DHA மற்றும் EPA போன்றவை ஒமேகா 3 கொழுப்புகளாகும். இவற்றில் DHA மற்றும் EPA , சால்மன், சர்டைன் , அன்கோவி போன்ற மீன் வகைகள், மற்றும் கடல் உணவுகளில் அதிகம் கிடைக்க படுகின்றன.

Omega 3 level test for the kid's mental and intelligence development

இவை இரண்டும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய கொழுப்புகளாக அறிய படுகிறது, அல்பா லினோலெனிக் அமிலம்(Alpha Linolenic Acid -AHA ) என்பது 18-கார்பன் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகும். இது தாவர உணவாகிய ஆளி விதைகளில் அதிகமாக உள்ளன. ALA ஒமேகா 3 கொழுப்புகள் பொதுவாக எங்கும் கிடைக்க கூடிய கொழுப்புகளாகும். இந்த AHA வில் 1-3% தான் DHA வாக மாற்ற முடியும்.

DHA என்பது ஒவ்வொரு அணுவிலும் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான கூறாகும் . கடல் வாழ் உயிரினங்களில் இருந்து கிடைக்கப்படும் DHA ஒமேகா 3 இதய ஆரோக்கியத்தை கீழ் கண்டவாறு பாதுகாக்கின்றன .

Omega 3 level test for the kid's mental and intelligence development

இரத்த அழுத்தத்தை குறைத்து சீரற்ற இதய துடிப்பை தடுக்கிறது.

புதிய இரத்த நாளங்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது .

தமனிகளின் உள்சுவர்களில் கொழுப்புகள் படிவதை கட்டுப்படுத்தி ட்ரிகிளிசெரைடுகள் உருவாக்கத்தை குறைக்கிறது.

இரத்த நாளங்களில் இரத்தம் உறைவதை தடுக்கிறது.

வீக்கத்தை குறைக்கிறது.

செரிமானம், தசைகளின் செயலாற்றல், பார்வை திறன், கவனம் மற்றும் படிப்பு , அடிப்படை செல் பிரிவு போன்றவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.

செல்களுக்கு இடையே தொடர்பை சீராக்க இவை உதவுகின்றன.

சூரிய ஓளியை சரியான முறைகள் உடல் உறிஞ்ச உதவுகின்றன.

ஒமேகா 3 இன்டெக்ஸ் டெஸ்ட் :

உடலில் உள்ள ஒமேகா 3 யின் அளவை பரிசோதிக்க ஒமேகா 3 இன்டெக்ஸ் டெஸ்ட் எடுத்து பார்க்க வேண்டும். பொதுவாக உடலில் ஒமேகா 3, 8% இருக்க வேண்டும். இதைவிட குறைவாக இருந்தால் ஒமேகா 3 யை அதிகரிக்க உண்டான வழிகளை மேற்கொண்டு மறுபடியும் பரிசோதனை செய்ய வேண்டும். ஒவ்வொரு டெஸ்டிற்கும் இடையில் 3 முதல் 6 மதம் இடைவெளி வேண்டும்.

Omega 3 level test for the kid's mental and intelligence development

ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை , உணவு முறை , உடல் செயல்பாடு இவற்றை பொறுத்து அவர்களின் ஒமேகா 3 தேவை மாறுபடும். ஓட்ட பந்தய வீரர்களுக்கு அதிக அளவு ஒமேகா 3 தேவைப்படும். அவர்கள் சராசரியான அளவு ஒமேகா 3 உட்கொள்ளும்போது அவை தசை சவ்வுகளுக்கு செல்லாமல் , எரிபொருளாக மாறிவிடும். இதற்கு காரணம் அவர்களின் அதிகமான உடல் செயல்பாடு.

தினசரி உட்கொள்ளல் :

ஒமேகா 3 தினசரி உட்கொள்ளல் அளவு பெரியவர்களுக்கு , 200மிகி முதல் 500 மிகி அளவு என்று பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பமாக உள்ளவர்கள், தாய் பால் கொடுப்பவர்கள் குறிப்பிட்ட அளவை விட அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

DHA குறைபாடு:

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு DHA பெரிதும் துணை புரிகிறது. ஒமேகா 3 குறையும் போது படிப்பதில் கோளாறு, டிஸ்லெக்சியா, ஆட்டிசம் , நடத்தை கோளாறு போன்றவை ஏற்படுகின்றன. கண் பார்வை வளர்ச்சிக்கு ஒமேகா 3 அதிகம் தேவை படுகிறது. குறை பிரசவத்தை தடுக்கிறது . DHA குறைபாட்டால் அறிவாற்றல் குறைகிறது.

ஒமேகா 3 பரிசோதனை மூலம் உங்கள் உடலில் ஒமேகா 3 ன் அளவை அறிந்து , அதனை மேம்படுத்தி அறிவாற்றலுடன் இருங்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Omega 3 level test for the kid's mental and intelligence development

    Omega 3 level test for the kid's mental and intelligence development
    Story first published: Friday, September 22, 2017, 10:30 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more