உங்க வீட்டு குழந்தைகள் அடிக்கடி சண்டை போடறாங்களா? அதை நிறுத்த இதோ சில வழிகள்

Written By: Lakshmi
Subscribe to Boldsky

ஒரே வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் வீடு கலகலப்பாக உற்சாகமாக தான் இருக்கும். ஆனால் அவர்களே ஒருவருக்கொருவர் அடித்து சண்டை போட்டு கொண்டு அழுது கொண்டு இருந்தால் நன்றாகவா இருக்கும்? குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் கோபத்தை வளத்துக்கொண்டால் பிற்காலத்திலும் இதே கோபம் நிலைக்க வாய்ப்புகள் உள்ளது. குழந்தைகளின் சண்டைகளை தடுக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. இருவருக்கும் நேரம் ஒதுக்குங்கள்

1. இருவருக்கும் நேரம் ஒதுக்குங்கள்

நீங்கள் இளைய பிள்ளை வந்த உடன் இளைய பிள்ளையை மட்டுமே அதிகமாக கவனித்துக்கொண்டு இருப்பீர்கள். அது உங்கள் மூத்த பிள்ளைக்கு வருத்தத்தை தரலாம். எனவே இரு பிள்ளைகளுடனும் நேரத்தை செலவிடுங்கள். மூத்த குழந்தை ஒரளவு வளர்ந்திருந்தால், அந்த குழந்தைக்கு என சில வேலைகள் இருக்கும். எனவே இளைய பிள்ளை அளவுக்கு நேரம் செலவிட வேண்டி வராது. ஆனாலும் குறிப்பிட்ட நேரத்தை மூத்த பிள்ளைக்காக செலவிடுவது நல்லது.

2. ஒப்பிட்டு பேச வேண்டாம்

2. ஒப்பிட்டு பேச வேண்டாம்

ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் விளையாட்டாக கூட ஒப்பிட்டு பேச வேண்டாம். இது ஒருவர் மீது ஒருவருக்கு கோபத்தை உண்டாக்கும்.

3. பாசத்தை அதிகப்படுத்துங்கள்

3. பாசத்தை அதிகப்படுத்துங்கள்

உங்களது இரு பிள்ளைகளுக்கு இடையே உள்ள பாசத்தை அதிகப்படுத்த வேண்டியது உங்களது கடமையாகும். எனவே உன் மீது அக்கா / அண்ணன் நிறைய பாசம் வைத்து இருக்கிறான். உன்னை நன்றாக பார்த்துக்கொள்வான். நீ எதுவானாலும் அவனிடம் கேள் என்பது போன்ற வார்த்தைகளை கூறி இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்க வேண்டியது உங்களது கடமை.

4. சரிசமமாக செய்யுங்கள்

4. சரிசமமாக செய்யுங்கள்

உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தால், அவர்கள் இருவருக்கும் எது செய்தாலும் சரிசமமாக செய்வது அவசியம். ஒருவருக்கு குறைவாகவும், ஒருவருக்கு அதிகமாகவும் செய்வது நீங்களே அவர்களுக்குள் சண்டையை உண்டாக்குவது போன்றதாகும்.

5. இன்னும் சண்டை போடுகிறார்களா?

5. இன்னும் சண்டை போடுகிறார்களா?

இதை எல்லாம் செய்தும் கூட இன்னும் சண்டை போடுகிறார்கள் என்றால், கட்டாயம் வேறு ஏதாவது முக்கியமான காரணம் இருக்கும். அது என்னவென்று தெரிந்து அதை சரி செய்ய தவறாதீர்கள்.

குழந்தைகளை ஒப்பிட்டு பேசுதல், ஒருவரை அதிகமாகவும் மற்றொருவரை குறைவாகவும் பார்ப்பது ஆகியவை பெற்றோர்கள் பொதுவாக செய்யும் சில தவறுகள் ஆகும். ஒரு ஆரோக்கியமான மனநிலையுடன் குழந்தை வளர இவற்றை எல்லாம் செய்யாதீர்கள். உங்கள் குழந்தையின் திறமையை ஊக்குவித்தல் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பது ஆகியவை தான் பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கிய கடமை ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Stop Siblings fight

Here are the some ideas to siblings fight
Story first published: Monday, June 19, 2017, 13:00 [IST]