For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க குழந்தை சாதனையாளர் ஆகனுமா? அப்போ நீங்க இத பண்ணுங்க!

உங்க குழந்தை சாதனையாளர் ஆகனுமா? அப்போ நீங்க இத பண்ணுங்க!

By Lakshmi
|

வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தாலும் எல்லா குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாகும் போது சாதனையாளர்களாக உருவாவதில்லை. பண வசதியும் பிற வசதிகளும் கொண்ட பல குழந்தைகள் பிற்காலத்தில் எந்த சாதனைகளும் செய்யாமல் சாதாரணமானவர்களாகவே இருந்து விடுகின்றனர். அதே சமயத்தில் ஒன்றுமே இல்லாத சூழ்நிலையில் வளர்ந்தாலும் சில குழந்தைகள் தன் முயற்சியால் ஏதேனும் சாதித்து இந்த உலகில் தங்கள் இருப்பை பதிவு செய்து விடுகின்றனர். குழந்தை வளர்ப்பு முறையும், ஆளுமைப் பண்புகளுமே குழந்தைகளை சாதனையாளர்களாக உருவாக்குகின்றன.

குழந்தைகளை சாதனையாளர்களாக உருவாக்க பெற்றோர்கள் அதிக சிரமம் எல்லாம் பட வேண்டிய அவசியம் இல்லை.. சாதாரண விஷயங்களில் இருந்தே சாதனைகள் தொடங்குகின்றன. சிறு வயதிலிருந்தே சரியான குழந்தை வளர்ப்பு முறையை பெற்றோர் கடைபிடித்து வந்தால் குழந்தைகளை சாதனையாளர்களாக உருவாக்க முடியும் என்று சாதனை ஊக்கம் பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்ட உளவியல் அறிஞர் மெக்லிலேண்ட் கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுதந்திரம்

சுதந்திரம்

சரியான குழந்தை வளர்ப்பு முறைகளில் முதன்மையானது குழந்தைகளிடத்தில் சுதந்திரமாக செயல்படும் ஆற்றலை உருவாக்குவதாகும். குழந்தையை தானாக சாப்பிடுமாறு ஊக்குவிப்பது, தானாக உடையணிந்து கொள்வதை மகிழ்ச்சியுடன் ஆதரிப்பது போன்றவை சாதனை ஊக்கத்தை குழந்தைகளிடத்தில் வளர்க்கும் பெற்றோர் நடத்தைகளாகும்.

கழிவறை பயிற்சிகள்

கழிவறை பயிற்சிகள்

குழந்தைகளுக்கு கழிவறை பயிற்சிகளை இளம் வயதிலேயே கற்பிப்பதும் அவர்களிடத்தில் சுதந்திரமாக செயல்படும் உணர்வை தூண்டி வளர்க்கும். நீண்ட வருடங்களாக நடத்தப்பட்ட உளவியல் ஆய்வு ஒன்றில் மிக இளம் வயதிலேயே கழிவறை பயிற்சி பெற்ற குழந்தைகள் இருபத்தியாறு வருடங்கள் கழித்து அதிக சாதனை ஊக்கம் கொண்டவர்களாக மாறி இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் இவர்கள் எல்லா செயல்களையும் தன்னால் முடியும் என்ற மனப்பாங்குடனும் தன்னம்பிக்கையுடனும் அணுகியது ஆய்வில் கண்டறியப்பட்டது.

ஊக்கம்

ஊக்கம்

குழந்தைகளின் ஆற்றல்களைத் தெரிந்து கொண்டு அந்த ஆற்றல்களுக்கு உட்பட்ட எல்லைவரை சவாலான இலக்குகளை பெற்றோர் குழந்தைகளுக்கு நிர்ணயிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் எதார்த்தத்திற்கு புறம்பான இலக்குகளை நோக்கி குழந்தைகளை ஊக்குவிக்கக் கூடாது. குழந்தைகளால் சாதிக்கக் கூடிய இலக்குகளை நிர்ணயித்த பெற்றோர், அந்த இலக்கை அடையும் வண்ணம் அமையும் குழந்தைகளின் நடத்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.

இப்படியும் செய்யலாமே..!

இப்படியும் செய்யலாமே..!

உதாரணமாக, அ, ஆ, இ, ஈ அல்லது A, B, C, D எழுத்துக்களை இரண்டு வயது குழந்தை சொல்ல இயலாத நிலையிலும் தொடர்ந்து அவ்வெழுத்துக்களை கற்று ஒப்பிக்குமாறு ஊக்கப்படுத்தி வரவேண்டும். அக்குழந்தை பல முயற்சிக்குப் பின் முதன்முறையாக எழுத்துக்களை ஒப்பிக்கும்போது கட்டிப்பிடித்தோ, ஓர் முத்தம் கொடுத்தோ அல்லது ஓர் சாக்லேட் கொடுத்தோ மகிழ்ச்சியுடன் ஊக்கப்படுத்த வேண்டும்.

விளையாட உதவுங்கள்

விளையாட உதவுங்கள்

முதல் இரண்டு வயது வரை குழந்தைகள் விளையாடும் போது அல்லது ஏதாவது செயல்களை செய்யும்போது பெற்றோர் அவர்களுடனே அருகில் இருந்து தேவையான உதவிகளை செய்து வருவது பிற்காலத்தில் குழந்தைகளை மாபெரும் சாதனையாளர்களாக உருவாக்கும். இவ்வாறு தன் பெற்றோர் அருகில் இருக்கும்போது முயற்சி மேற்கொண்ட குழந்தைகள் பிற்காலத்தில் மிகுந்த நம்பிக்கையுடனும் ஆவலுடனும் அனைத்து விஷயங்களையும் அணுக வேண்டும்.

வெற்றி என்பது என்ன?

வெற்றி என்பது என்ன?

வாழ்க்கையில் இறுதியாக ஒருவர் அடையும் வெற்றி அவரின் தொடர்முயற்சியின் பலனாக விளைவதாகும். இதை உணராத பல அறிவாளிகள் கூட தற்காலிக தோல்விகளால் மனம் துவண்டு நிரந்தர தோல்வியாளர்களாக மாறி விடுகின்றனர். எனவே திறமைகள் முயற்சிகள் மூலம் வளர்ச்சியடையும் என்னும் நல்ல நம்பிக்கையை குழந்தைகளிடத்தில் பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்.

ஊக்கம்

ஊக்கம்

சற்றே கடினமான ஆனால் நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைய குழந்தைகளை ஊக்கப்படுத்துதல்.

பாராட்டு

பாராட்டு

குழந்தைகளின் சிறுசிறு வெற்றிகளை பாராட்டிக் கொண்டாடுங்கள். சின்ன சின்ன பரிசுகளை கொடுக்கலாம். ஆனால் பரிசாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்க கூடாது.

தோல்விகள்

தோல்விகள்

தோல்விகளும் கற்றுக் கொள்வதின் ஒரு பரிமாணமே என குழந்தைகளை உணரச் செய்து தோல்விகளை ஏற்றுக் கொள்ளச் செய்தல்.

பயம்

பயம்

குழந்தைகளின் மனதில் தோல்வி பயத்தைப் போக்கி வெற்றி அடைய வேண்டும் என்னும் ஊக்கத்தினை உருவாக்குதல். தவறான பயங்களை குழந்தைகளின் மனதில் தவறான பயம், மூட நம்பிக்கைகளை வளர்க்க வேண்டாம்.

முயற்சி

முயற்சி

முயற்சி திருவினையாக்கும் என்னும் நம்பிக்கையினை குழந்தைகளின் மனதில் விதைக்க வேண்டும். நீ முயற்சி செய்தால் தான் ஒரு விஷயத்தை அடைய முடியும். அந்த முயற்சி நேர் வழியில் இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள்.

பொய் வேண்டாம்

பொய் வேண்டாம்

குழந்தைகளுக்கு சின்ன வயதில் எதுவுமே தெரியாது.. அவர்களிடமோ அல்லது அவர்களது முன்போ பொய் கூற கூடாது. அப்படி நீங்கள் பேசினால் அதுவே குழந்தைக்கும் பழக்காமாகிவிடும். உதாரணமாக, யாராவது வந்தால் அப்பா வீட்டில் இல்லை என்று சொல் என்பது போன்ற பொய்களை குழந்தைக்கு கற்றுக் கொடுக்க கூடாது.

புத்தகங்கள்

புத்தகங்கள்

குழந்தைகளுக்கு பரிசாக சின்ன சின்ன காமிக்ஸ் புத்தகங்கள், சிந்தைகளை வளர்க்கும் புத்தகங்கள் போன்றவற்றை பரிசாக கொடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to make your children to achieve

how to make your children to achieve
Story first published: Wednesday, November 29, 2017, 18:21 [IST]
Desktop Bottom Promotion