குழந்தைங்க லீவ் முடிஞ்சு ஸ்கூல் போறாங்களா? இந்த 5 விஷயத்துல நீங்க கவனமா இருக்கணும்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

இரண்டு மாத விடுமுறையில் குழந்தைகள் பாட்டி வீடு, மாமா வீடு, சுற்றுலா, நண்பர்களுடன் விளையாட்டு என உற்சாகமாக இருந்திருப்பார்கள். இத்தனை நாள் விளையாடிவிட்டு மீண்டும் பள்ளிக்கு செல்ல குழந்தைகளுக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும்.

குழந்தையை இரகசியமாக கண்காணிப்பாதல் எத்தனை தீமைகள் உண்டாகும் என தெரியுமா?

அதிலும் புதிதாக பள்ளி செல்லும் குழந்தைகள் பள்ளியின் சூழலை பழகிக்கொள்ள சில நாட்கள் ஆகும். இந்த சூழ்நிலைகளை பெற்றோர்கள் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி காணலாம்.

பெற்றோர்களின் சண்டை குழந்தையின் உடல்நலத்தை பாதிக்கும் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேர்மறையாக பேசுங்கள்

நேர்மறையாக பேசுங்கள்

குழந்தைகள் மீண்டும் பள்ளி, ஹோம் ஒர்க், டியூசன் போக வேண்டும் என்று நினைத்து கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பெற்றோர்கள் நடந்துகொள்ள வேண்டும். பள்ளிக்கு போனால், உன் பிரண்ட்ஸை பார்க்கலாம், பேசலாம், விளையாடலாம், புது யூனிபார்ம், புது காலணி என நீ கலக்க போற என குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக பேச வேண்டும்.

பள்ளிகால நினைவுகள்

பள்ளிகால நினைவுகள்

நீங்கள் பள்ளியில் படிக்கும் போது குறும்புத்தனமான நிகழ்வுகள் நிறைய நடந்திருக்கும், உங்கள் நண்பர்களுடன் குஷியாக இருந்த நாட்கள் போன்ற நல்ல விஷயங்களை பிள்ளைகளிடம் கூறி அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

அம்மா சொல்வதே உண்மை

அம்மா சொல்வதே உண்மை

பொதுவாக எல்லா குழந்தைகளும் அம்மா என்ன சொன்னாலும் நம்புவார்கள். எனவே நீங்கள் உன் நண்பர்கள் உன்னிடம் நன்றாக விளையாடுவார்கள், டீச்சர் ரொம்ப நல்லவங்க. அவங்க சொல்லற படி நடந்துக்கணும். உனக்கு என்ன எல்லாம் வேணுமோ எல்லாமே பள்ளிக்கூடத்தில் இருக்கு என்று சொல்லி குழந்தைகளை பள்ளி வாழ்க்கைக்கு தயார்படுத்த வேண்டும்.

புதிய பள்ளி குழந்தைகள்

புதிய பள்ளி குழந்தைகள்

புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பள்ளி வாழ்க்கைக்கு பழக்கப்பட சில நாட்கள் ஆகும். அதுவரை நீங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்கள் ஏன் பள்ளிக்கு போகனும்? படிக்கனும் என எந்த கேள்வி கேட்டாலும் அதை அலச்சியம் செய்யாமல் நேர்மறையான மற்றும் அவர்களுக்கு பிடித்த விடையளியுங்கள்.

பள்ளி செல்லும் முன்பு

பள்ளி செல்லும் முன்பு

விடுமுறை நாட்களில் குழந்தைகள் நேரத்திற்கு தூங்குவது, எழுந்திருப்பது என அனைத்தையும் மறந்திருப்பார்கள். அவர்களை சீக்கிரமாக சாப்பிட வைத்து, நேரத்திற்கு தூங்க வையுங்கள். காலையில் நேரத்தில் எழுப்பி விட்டு அவர்களது வேலைகளை அவர்களையே செய்ய வையுங்கள். நீங்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அதை அவர்களுக்கும் பழக்கப்படுத்துங்கள்.

இதை செய்யலாமே..!

இதை செய்யலாமே..!

குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது முத்தம் கொடுத்து, கையசைத்து அனுப்பி வையுங்கள். அவர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவாக கொடுத்து அனுப்புங்கள். வீட்டிற்கு வரும் வேலையில் சத்தான மற்றும் சுவையான ஸ்நேக்ஸ்களை தயார் செய்து கொடுங்கள்.

இதை செய்ய வேண்டாமே..!

இதை செய்ய வேண்டாமே..!

குழந்தைகளுக்கு இத்தனை நாட்கள் தாயுடன் இருந்துவிட்டு இன்று தாயை பிரிந்து பள்ளிக்கு செல்கிறோமே என்ற சோகம் இருக்கும். நீங்கள் அதை அதிகரிக்கும் விதமாக அவர்களை பள்ளியில் விட்டுவிட்டு அவர்கள் உள்ளே செல்லும் வரை நின்று பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Boost Positive Energy to School Going Children

here are the some ways for boost positive energy to child to going school
Story first published: Tuesday, June 13, 2017, 15:00 [IST]
Subscribe Newsletter