குழந்தைகள் கேட்கும் 6 எடக்குமடக்கான கேள்விகள்! எப்படி பதில் சொல்லலாம்?

Written By: Lakshmi
Subscribe to Boldsky

குழந்தைகள் என்றாலே அது என்ன? இது என்ன? என்று பல கேள்விகளை பெற்றோர்களிடம் அடுக்கிக்கொண்டே போவார்கள். அவர்களுக்கு அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் இருக்கும். ஆனால் நம்மால் அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க முடியாது. எதையாவது சொல்லி தப்பித்து விடலாம் என பார்த்தால், அதிலிருந்து வேறு சில கேள்விகளை கேட்பார்கள். அவ்வாறு குழந்தைகள் கேட்கும் சில விபரீதமான கேள்விகளுக்கு பெற்றோர்கள் எப்படி பதிலளிக்கலாம் என்பதை காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேள்வி 1:

கேள்வி 1:

ஏன் அப்பாவுடன் சண்டை போடுகிறீர்கள்? நீங்கள் இருவரும் காதலிக்கவில்லையா?

குழந்தைகள் பெற்றோர்களின் சண்டைகளால் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். சில சமயம் அதை அவமானமாக நினைக்கிறார்கள். எனவே நீங்கள் இது குழந்தையின் தவறல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்களிடம் சில இருவருக்கும் கருத்து வேறுபாடு வரும் போது அதை பற்றி பேசுவார்கள். அதற்காக இருவரும் காதலிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது. நீ வளரும் போது ஏதாவது தவறு செய்தாலும் நாங்கள் உன்னை கண்டிப்போம். அதற்காக உன் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று அர்த்தம் அல்ல என்று கூறுங்கள்.

கேள்வி 2:

கேள்வி 2:

ஏன் மனிதர்கள் இறந்து போகிறார்கள்?

இறப்பை பற்றி குழந்தைகளிடம் பொய் சொல்லாதீர்கள். நாய் மனிதர்களை விட சீக்கிரமாக இறந்துவிடும். பூ நாயை விட சீக்கிரமாக இறந்து விடும். அனைத்து உயிரனங்களுக்கும் குறிப்பிட்ட கால அளவு இருக்கிறது அதுவரை தான் வாழும். மனிதன் வாழ்க்கையில் பல நல்ல நினைவுகளையும் பல சாதனைகளையும் அடைந்த உடன் அவனுக்கு வயதாகிவிடுகிறது. அதனால் இறந்துவிடுகிறான் என்று கூறுங்கள்.

கேள்வி 3:

கேள்வி 3:

ஏன் என்னை விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறீர்கள்?

வேலை மிகவும் முக்கியமானது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். உன்னை பிரிந்து போவது எனக்கு பிடிக்காத ஒன்று தான் ஆனால் வேலைக்கு போக வேண்டியது அவசியம். நான் வேலை முடிந்து மாலையில் வீடு வந்துவிடுவேன். அப்போது நாம் இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக ஒன்றாக இருக்கலாம்.

கேள்வி 4:

கேள்வி 4:

பேயை நினைத்து பயமா இருக்கு!

உங்கள் குழந்தையின் பயத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். எதற்காக அவர்கள் பயப்படுகிறார்கள் என்பதை ஆராய வேண்டும். இருட்டில் தெரியும் நிழல்களையா? அல்லது ஏதேனும் சத்தங்களை கேட்டா என்பதை அறிந்து அதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஒரு பொம்மையை எடுத்து இதற்கு பேயை விரட்டும் சக்தி உள்ளது, இதை காட்டினால் பேய் பயந்து ஓடிவிடும் என கூற வேண்டும். அடுத்த முறை பயமாக இருந்தால் குழந்தை அந்த பொம்மையை பயன்படுத்தும். மனரீதியான குழப்பங்கள் இதனால் தீரும்.

கேள்வி 5:

கேள்வி 5:

ஏன் அவர் குண்டாக இருக்கிறார்?

பொது இடங்களில் இது போன்று கேட்பது உங்களையும் மற்றவரையும் சங்கடப்படுத்தும் கேள்வியாகும். அவர்களிடம் மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள். நிறம், அளவு என ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது என கூறுங்கள். மற்றவர்கள் முன்னால் இது போல கேட்க கூடாது நீ எதுவானாலும் அவர்கள் இல்லாத போது என்னிடம் கேள் என்று சொல்லிக் கொடுங்கள்.

கேள்வி 6:

கேள்வி 6:

நான் டாக்டர்கிட்ட வர மாட்ட..!

உன் உடலில் கிருமிகள் இருக்கிறது. டாக்டர் கிட்ட போன அவர் ஊசி போடுவார் அது அப்போது வலித்தாலும், உன் உடல் சரியாகிவிடும். நீ அதற்காக டாக்டரை பார்த்து பயப்பட வேண்டாம் என கூறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How answer kids tricky questions

Here are the kids tricky questions and their answers
Story first published: Wednesday, June 21, 2017, 12:30 [IST]