For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் முன் இந்த 5 விஷயம் கவனத்துல வெச்சுக்குங்க!

இங்கே இரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன

By Lakshmi
|

இரண்டு குழந்தைகள் பெற வேண்டும் என்பதே பெற்றோர்கள் பலரது எண்ணமாக இருக்கிறது. முதல் குழந்தைக்கு பிறகு இரண்டாவது குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளி தேவை. மேலும் ஒரு சில விஷயங்களையும் சிந்திக்க வேண்டியதும் அவசியம். இரண்டாவது குழந்தை பெறும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் குழந்தையின் வயது

முதல் குழந்தையின் வயது

முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே குறிப்பிட்ட இடைவெளி என்பது மிகவும் அவசியம். இரண்டாவது குழந்தை பிறந்து விட்டால், முதல் குழந்தையை முன்பு போல் உங்களால் கவனிக்க முடியாது. இதனை முதல் குழந்தை புரிந்து கொள்ளும் திறன் முதல் குழந்தைக்கு இருப்பது அவசியம்.

முதல் குழந்தையின் ஏக்கம்

முதல் குழந்தையின் ஏக்கம்

இரண்டாவது குழந்தை பிறந்து விட்டால், முதல் குழந்தை தன் மீது பெற்றோருக்கு சற்று பாசம் குறைந்துவிட்டதாக நினைக்கும். இதை பற்றி கவலைப்பட வேண்டாம். இது அனைத்து உறவுகளுக்கும் இடையே நடப்பது தான். இரண்டாவது குழந்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடந்துகொள்ளுங்கள். உங்களது முதல் குழந்தை தனது முழு நாளையும் பள்ளியில் செலவழிப்பதாக இருப்பது நல்லது.

இத எல்லாம் செய்யாதீங்க

இத எல்லாம் செய்யாதீங்க

இப்ப பிறந்த இந்த குழந்தை மீது அம்மா, அப்பா அதிகமாக பாசம் வைத்துள்ளனர் என இரண்டாம் குழந்தை ஒதுங்க தான் செய்யும். அதை வலுப்படுத்தும் விதமாக பெற்றோர்கள் நடந்துகொள்ள கூடாது.

அதற்காக அந்த குழந்தை மீது எங்களுக்கு பாசமே இல்லை. உன்னை மட்டும் தான் எங்களுக்கு பிடிக்கும் என்ற பொய்யான நம்பிக்கையையும் கொடுக்க கூடாது.

பொறுப்பு

பொறுப்பு

இரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பல பெற்றோர்கள் முதல் குழந்தையிடம் இரண்டாவது குழந்தையை பற்றி பேச தொடங்கிவிடுகிறார்கள். இந்த பாப்பாவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அம்மா, அப்பா மற்றும் உன் பொறுப்பு நாம் மூவரும் தான் உன் தம்பி அல்லது தங்கையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி பொறுப்பு உணர்வை வர வையுங்கள்.

பிடுங்கி தர வேண்டாம்

பிடுங்கி தர வேண்டாம்

முதல் குழந்தையின் விளையாட்டு பொருட்கள், முதல் குழந்தை பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை அனுமதி இன்றி இரண்டாவது குழந்தைக்கு கொடுக்காதீர்கள். முதல் குழந்தையின் அனுமதி அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

five things need remember preparing baby again

here are the some tips for preparing for a second baby
Desktop Bottom Promotion