For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்களே செய்யும் 5 தவறுகள்!

பெற்றோர்கள் குழந்தைகளின் உணவு விஷயத்தில் செய்யும் தவறுகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

By Lakshmi
|

குழந்தைகளின் விஷயத்தில் பெற்றோர்களே சில தவறுகளை செய்கின்றார்கள். பெற்றோர்களை பொருத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே நிலவுகிறது. அதற்காக அவர்கள் போதும்.. போதும் என்று கூறினாலும் கூட அதிகப்படியான உணவினை குழந்தைக்கு திணிக்கின்றார்கள். இது உங்களது குழந்தையின் செயல் திறனை பிற்காலத்தில் பாதிக்கிறது. இந்த பகுதியில் நீங்கள் உங்களது குழந்தை விஷயத்தில் செய்யும் சில தவறுகளை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஸ்நேக்ஸ்..!

1. ஸ்நேக்ஸ்..!

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் அதிகமாக சாக்லேட், ஐஸ்க்ரீம் என கொடுத்துவிட்டால், அது அவர்களுக்கு இரவு உணவுக்கு முன்னர் எப்படி ஜீரணமாகும். அதற்காக மாலை நேர ஸ்நேக்ஸ் வேண்டாம் என்பதில்லை... உணவுகளுக்கு இடையில் இடைவெளி அவசியம். 10 வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு 1000 கலோரிகள் மட்டும் போதுமானது. 300 முதல் 400 கலோரிகள் வரை அவர்களது ஜங்க் உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகளின் மூலமாகவே பூர்த்தியடைந்துவிடும்.

 2. உணவு தேவை

2. உணவு தேவை

பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஒருவேளைக்கு தனது குழந்தைக்கு எவ்வளவு மட்டும் போதுமானது என்பதே தெரிவதில்லை. அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக உணவை கொடுப்பதால், உடல் எடை அதிகரிப்பு மற்றும் மெட்டபாலிசத்தில் பிரச்சனை உண்டாகிறது.

3. உணவு இடைவெளி

3. உணவு இடைவெளி

குழந்தைகளுக்கு தரவேண்டிய உணவை சரியான இடைவெளியில் கொடுக்க வேண்டியது அவசியம். அதன்படி அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் 2 முறை ஸ்நேக்ஸ் தருவதே சிறந்ததாகும்.

4. ஆரோக்கிய உணவுகள்

4. ஆரோக்கிய உணவுகள்

வீட்டில் சமைக்கப்படாத எந்த ஒரு உணவும் ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு வெளியில் இருந்து உணவுகள் அல்லது குளிர்பானங்களை வாங்கி கொடுத்தால் அவற்றில் உள்ள லேபிளை கவனமாக படிக்க வேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிமாக சர்க்கரை இருக்கும் எனவே கவனம் தேவை.

5. நேரத்திற்கு உணவு

5. நேரத்திற்கு உணவு

நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு தரும் உணவினை தினமும் சரியான நேரத்திற்கு தர வேண்டியது அவசியம். அந்த நேரத்திற்கு இடையில் நீங்கள் அதிக கலோரி உணவுகள் அல்லது செரிமானமாக தாமதமாகும் உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்திற்கு உணவு கொடுத்தால், அது குழ்ந்தையின் மெட்டபாலிசத்தை பாதிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

five parenting mistakes

five parenting mistakes
Story first published: Thursday, September 28, 2017, 11:35 [IST]
Desktop Bottom Promotion