27 பிரசவங்கள் 69 குழந்தைகள் என அசத்தும் 5 சூப்பர் ஜோடிகள்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

நமது தாத்தா பாட்டிக்கு பத்து அல்லது பதினைந்து குழந்தைகள் இருந்தது என்பதை கேட்டாலே நமக்கு தலையே சுற்றிவிடும். நமக்கு இந்த காலத்தில் இருக்கும் ஒரே ஒரு அண்ணன், தம்பி, அக்கா, தம்பியை சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கிறதே அவர்கள் எல்லாம் எப்படி தான் ஒரே வீட்டில் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்கள் என நினைக்க தோன்றும்.

Amazing people with the most children

அதுமட்டுமட்டுமின்றி, இன்றைய காலகட்டத்தில் இருக்கும் ஒரு குழந்தையை ஆளாக்குவதே பெரும்பாடாக இருக்கிறது. ஆனால் அவர்களை எல்லாம் எப்படி தான் நமது தாத்தா, பாட்டிகள் சமாளித்தார்களோ என தோன்றும்.

இதோ இந்த பகுதியிம் நம்மை ஆச்சரியமூட்டும் சில தம்பதிகளின் குழந்தைகளின் எண்ணிக்கைகளை பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
87 குழந்தைகளுக்கு தந்தை

87 குழந்தைகளுக்கு தந்தை

வசில்யேவ் (Vassilyev) என்பவரது முதல் மனைவிக்கு மொத்தம் 69 குழந்தைகள். அதில் 16 ஜோடிகள் இரட்டை குழந்தைகள், 7 பிரசவத்தில் மூன்று, மூன்று குழந்தைகள் மற்றும் நான்கு பிரசவத்தில் நான்கு, நான்கு குழந்தைகளாகும். 1725 ஆம் ஆண்டிலிருந்து 1765 ஆம் ஆண்டு வரை மொத்தம் 27 பிரசவங்களாகும்.

அதுமட்டுமின்றி இவரது இரண்டாம் மனைவிக்கு,6 ஜோடி இரட்டை குழந்தைகள், இரண்டு இணை மூன்று குழந்தைகள் என 8 பிரசவத்தில் மொத்தம் 18 குழந்தைகள். ஆக மொத்தம் இவர் 87 குழந்தைகளுக்கு தந்தை!

62 குழந்தைகள்

62 குழந்தைகள்

க்ரவடா என்ற பெண்ணுக்கும் மொத்தம் 62 குழந்தைகள் பிறந்துள்ளன. இவர் தான் அதிக குழந்தைகளை பெற்றவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

57 குழந்தைகள்

57 குழந்தைகள்

யாகோவ் கிரிலோவ் என்பவருக்கு மொத்தம் 57 குழந்தைகள், நான்கு தடவைகளில் நான்கு நான்கு குழந்தைகள், 7 முறை மூன்று, மூன்று குழந்தைகள், 10 ஜோடி இரட்டை குழந்தைகள், மொத்தம் 21 பிரசவத்தில் 57 குழந்தைகள்

53 குழந்தைகள்

53 குழந்தைகள்

பர்பாரா என்பவருக்கு 1448 - 1503 வரை 29 பிரசவங்கள் நடந்தது. அவருக்கு மொத்தம் 53 குழந்தைகள், அதில் 15 பெண் குழந்தைகள், 38 ஆண் குழந்தைகள்.

52 குழந்தைகள்

52 குழந்தைகள்

மடாலீனா என்பவர் 1839 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு 28 வயதில் திருமணமானது. மொத்தம் இவருக்கு 52 குழந்தைகள். அதில் 49 ஆண் குழந்தைகள். அதுமட்டுமின்றி 15 தடவைகள் மூன்று குழந்தைகள் ஒன்றாக பிறந்தன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing people with the most children

Amazing people with the most children
Subscribe Newsletter