குழந்தையை இரகசியமாக கண்காணிப்பாதல் எத்தனை தீமைகள் உண்டாகும் என தெரியுமா?

Written By: Lakshmi
Subscribe to Boldsky

பெற்றோர்களாக நீங்கள் உங்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். குழந்தைகள் பெற்றோர்களுக்கு கிடைத்த வரம் தான். அவர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல வேண்டியது அவசியமான ஒன்று தான்.

நீங்கள் செய்யும் இந்த காரியங்கள் உங்கள் குழந்தைகளை வெறுப்படைய செய்யும் என தெரியுமா?

அதற்காக அவர்களை எந்த நேரமும் கண்காணித்துக்கொண்டே இருக்க கூடாது. சதாசர்வ காலமும் பிள்ளைகளை ஸ்பைகளை போன்று இரகசியமாக கவனித்துக்கொண்டே இருப்பது அவர்களது மனநிலை மற்றும் செயல்பாடுகளில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என காண்போம்.

நீங்கள் செய்யும் இந்த தவறு உங்கள் குழந்தையை பாலியல் குழப்பத்திற்கு ஆளாக்கும் என தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. நம்பிக்கையின்மை

1. நம்பிக்கையின்மை

நீங்கள் உங்கள் குழந்தையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பது அவர்களுக்கு உங்கள் மீது ஓரு அவ நம்பிக்கையை உருவாக்கும். பின்னர் குழந்தைகள் உங்களிடம் இருந்து அனைத்து விஷயங்களையும் மறைக்க தொடங்கிவிடுவார்கள். செல்போன், லேப்டாப் போன்றவற்றை இரகசியமாக கண்காணிப்பது உங்கள் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும்.

2. மரியாதையை இழப்பீர்கள்

2. மரியாதையை இழப்பீர்கள்

குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் மீது மரியாதை வைத்திருப்பது அடிப்படையான நல்ல பண்பு ஆகும். மேலும் இது மிகவும் முக்கியமானதும் கூட. நீங்கள் அவர்களது தனிப்பட்ட விஷயங்களை இரகசியமாக கண்காணிப்பது அவர்களுக்கு தெரிந்தால், உங்கள் மீதுள்ள மரியாதையை இழப்பீர்கள்.

3. வன்முறையாக நடந்துகொள்ளலாம்

3. வன்முறையாக நடந்துகொள்ளலாம்

உங்கள் குழந்தையை பற்றி உங்களை விட வேறு யாராலும் சிறப்பாக அறிந்திருக்க முடியாது. அவர்களுக்கு எளிதில் கோபம் வந்துவிடுமா? நீங்கள் தொடர்ந்து அவர்களது தனிப்பட்ட விஷயங்களை இரகசியமாக கண்காணித்து வந்தால், அவர்கள் உங்கள் மீது வன்முறையில் கூட இறங்க வாய்ப்புகள் உண்டு.

4. அவர்களும் உங்கள் வழியில் நடப்பார்கள்

4. அவர்களும் உங்கள் வழியில் நடப்பார்கள்

நீங்கள் அவர்களது தனிப்பட்ட விஷயங்களில் தலையிட ஆரம்பித்தால், அவர்களும் உங்களது தனிப்பட்ட விஷயங்களில் தலையிட ஆரம்பித்துவிடுவார்கள். நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறாய் என்று கேட்டால் கூட இதை நான் உங்களிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன் என்று கூறுவார்கள்.

5. தன்நம்பிக்கையை இழப்பார்கள்

5. தன்நம்பிக்கையை இழப்பார்கள்

நீங்கள் தொடர்ந்து அவர்களது சமூக வலைதளங்கள் மற்றும் போன்களை கண்காணித்துக்கொண்டு இருந்தால் அவர்கள் சமூகத்தை எதிர்நோக்கும் தைரியம் இல்லாமல் போய்விடுவார்கள். அவர்கள் மனதளவில் மிகவும் உடைந்துவிடுவார்கள்.

6. அடம்பிடிப்பார்கள்

6. அடம்பிடிப்பார்கள்

உங்கள் குழந்தைகள் மிகந்த கோபத்தை இதனால் அடைவார்கள். இதன் காரணமாக எதற்கும் அடிபணியாமல் அவர்கள் செய்வது தான் சரி என்பது போல நடந்து கொள்வார்கள். உங்களை பற்றிய கவலையே அவர்களுக்கு இல்லாமல் போய் விடும்.

7. என்ன தான் செய்வது?

7. என்ன தான் செய்வது?

உங்கள் குழந்தைகள் தவறான வழிகளில் செல்கிறார்களா என்பதை கண்டறிய நீங்கள் அவர்களது தனிப்பட்ட விஷயங்களை இரகசியமாக கண்காணிக்க தேவையில்லை. முதலில் அவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் நம்பிக்கையை காப்பாற்ற நிச்சயம் அவர்கள் கடமைப்படுவார்கள். நல்ல விஷயங்களை அவர்களுக்கு கற்பியுங்கள். நண்பர்களை போல நடந்து கொண்டால் அவர்களே அனைத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

6 Reasons Why You Shouldn't Spy On Your Kid

here are the 6 Reasons Why You Shouldn't Spy On Your Kid
Story first published: Monday, June 12, 2017, 18:10 [IST]