உங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டுமா? அப்ப தினமும் இத ஒரு டம்ளர் கொடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் நன்கு உயரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். எப்போது ஒரு குழந்தை வயதிற்கு ஏற்ற உயரத்தில் இல்லாமல் இருக்கிறதோ, அப்போது அவர்களுக்கு விருப்பமான விளையாட்டுக்களில் ஈடுபடுத்தினால், நல்ல உயரத்தைப் பெறுவார்கள்.

ஒருவரின் உயரம் மரபணுக்களைப் பொறுத்தது. பெற்றோர்கள் உயரமாக இருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் உயரமாக வளரும். ஆனால் உயரம் அவ்வளவு இல்லாத பெற்றோர்கள், தங்கள் குழந்தை நன்கு உயரமாக வளர வேண்டுமென்று நினைத்தால், ஆரம்ப காலத்தில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைக் கொடுத்து வர வேண்டும்.

இங்கு குழந்தை உயரமாக வளர உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அந்த பானத்தை தினமும் கொடுத்து வந்தால், உங்கள் குழந்தை நன்கு உயரமாக வளரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

எலும்புகளுக்கு புரோட்டீன் மற்றும் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. இந்த சத்துக்களானது பாலில் வளமான அளவில் நிறைந்துள்ளது. மேலும் பால் எலும்புகளை வலிமையாக்கும் மற்றும் எலும்புகள் வளர உதவி புரியும்.

முட்டை

முட்டை

முட்டையில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளது. தினமும் வளரும் குழந்தைக்கு முட்டையைக் கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

தேன்

தேன்

தேன் வெறும் சுவையூட்டி மட்டுமல்ல, மருத்துவ குணம் அதிகம் கொண்ட ஓர் உணவுப் பொருளும் கூட. குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே உணவுகளில் சர்க்கரையை சேர்த்துக் கொடுப்பதைத் தவிர்த்து, தேன் சேர்த்து கொடுத்து வந்தால், அவர்களுக்கு உடலில் பல பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

வெதுவெதுப்பான பால் - 1 கப்
வேக வைத்த முட்டை - 1
தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்யும் முறை

செய்யும் முறை

பிளண்டர் அல்லது மிக்ஸியில் வேக வைத்த முட்டையைப் போட்டு, வெதுவெதுப்பான பால் சேர்த்து நன்கு அரைத்து, அத்துடன் தேன் சேர்த்து நன்கு கலந்தால், உயரத்தை அதிகரிக்கும் அற்புத பானம் ரெடி!

எப்போது குடிக்க கொடுக்க வேண்டும்?

எப்போது குடிக்க கொடுக்க வேண்டும்?

இந்த பானத்தை தினமும் காலையில் உணவு உண்ட பின், வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தையின் வளர்ச்சியில் ஓர் நல்ல மாற்றம் தெரிவதைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Want To Make Your Kids Taller? Give Them This Homemade Drink!

Most parents would want their kids to grow healthy, strong and also have a good height! Having an ideal height can be beneficial in many ways...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter