ஒவ்வொரு தந்தையும், தன் மகளிடம் தினமும் கூற வேண்டிய மூன்று விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

மகன்கள் அம்மாவுக்கும், மகள்கள் அப்பாவுக்கும் தான் அதிகமாக வக்காளத்து வாங்குவார்கள். எந்த ஓர் வீட்டில் அப்பா, அம்மா, மகன், மகள் என நால்வர் இருக்கிறார்களோ, அந்த வீட்டில் சண்டைக்கும், குதூகலத்திற்கும் பஞ்சமே இருக்காது.

கிட்டத்தட்ட, டேக் டீம் சாம்பியன்ஷிப் போட்டி போல தான் இருக்கும். இதில் சந்தோஷம் கலந்த ஓர் சுவாரஸ்யம் இருக்கும். எப்போதுமே மகள்கள் மீது வீட்டில் அனைவருக்கும் அதிக அக்கறை இருக்கும். வீட்டின் குல தெய்வத்தின் மீது யாருக்கு தான் அக்கறை இருக்காது.

ஆனால், அக்கறை மட்டும் போதாது. உங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் எனில், ஓர் தகப்பனாக உங்கள் மகளிடம் தினமும் இந்த மூன்று விஷயங்கள் பற்றி நீங்கள் கூற வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதலாவது!

முதலாவது!

நீ ஒரு தேவதை! ஆம், எல்லா அப்பாக்களின் குட்டி தேவதை அவர்களது மகள் தான். ஆனால், இதை நீங்கள் வெளியேவும் வாயை திறந்து சொல்ல வேண்டும். இயல்பாகவே பெண் குழந்தைகள் அப்பா செல்லமாக தான் இருப்பார்கள். மேலும், ஆண் குழந்தைகளை விட தங்கள் தந்தையை பற்றி பெருமிதமாய் பேசுவதும் பெண் குழந்தைகள் தான்.

முதலாவது!

முதலாவது!

எனவே, உங்களிடம் இருந்து சில ஆசை வார்த்தைகள், உத்வேகப்படுத்தும் பொன் மொழிகளை பெண் குழந்தைகள் எப்போதும் எதிர்பார்பார்கள். மேலும், அம்மாவை விட, அப்பாவின் சொல்லுக்கு தான் பெண் குழந்தைகள் அதிகமாக கட்டுப்படுவார்கள். இதற்காகவாவது நீங்கள், அவர்களை செல்லம் கொஞ்சுவதற்கு மேலாக ஓரிரு உத்வேக வார்த்தைகள் சொல்லி ஊக்கமளிக்க வேண்டும்.

இரண்டாவது!

இரண்டாவது!

தைரியம்! இந்நாட்களில் அனைத்து பெண்களிடமும் வளர்ந்து வருகிறது என நாம் மார்தட்டி கூறினாலும். அந்த சதவீதம் குறைவாக தான் இருக்கிறது. முகநூலில் முகப்பு படம் வைப்பதில் இருந்து, பேருந்தின் நடுவில் கம்பியை பிடித்து நிற்கும் வரை பல இடங்களில் பெண்கள் இன்றளவும் அஞ்சி தான் நடந்து வருகிறார்கள்.

இரண்டாவது!

இரண்டாவது!

எனவே, ஓர் தகப்பனாக உங்கள் மகளுக்கு நீங்கள் தினமும் தைரியத்தை ஊட்ட வேண்டும். இந்த தைரியம் தான் பின்னாளில் உங்கள் பெண் எங்கு சென்றாலும் வெற்றியுடன் திரும்ப முக்கிய காரணியாக இருக்கும். எத்தனையோ பெண்கள் தைரியம் குறைவாக இருப்பதால் தான் தங்கள் திறமையை வெளிப்படுத்தாமலேயே இருக்கிறார்கள்.

மூன்றாவது!

மூன்றாவது!

கலாச்சாரமும், செயல் முறை அறிவும்! ஆண்கள் பல இடங்களுக்கு தைரியமாக சென்று வருவதற்கு காரணம். அவர்டளிடம் இருக்கும் செயல் முறை அறிவு. எங்கு சென்றால் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். இந்த சூழலில் இதை செய்தால் நாளை என்ன நடக்கும் என ஆண்கள் சற்று செயல் முறையாக சிந்திப்பார்கள்.

மூன்றாவது!

மூன்றாவது!

இந்த செயல் முறை அறிவும், கலாச்சாரமும் கற்றுக் கொண்டாலே, இவ்வுலகின் எந்த மூலை, இடுக்கிலும் சென்று சாதித்து வரலாம். பட்டறிவு மட்டுமின்று செயல் முறை அறிவையும், மனிதர்களை படிக்கவும் உங்கள் மகளுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஹீரோ!

ஹீரோ!

எல்லா மகள்களும் தங்கள் அப்பா ஓர் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஆக்ஷன் ஹீரோ, மாஸ் ஹீரோவாக அல்ல. ஆர்ட் ஃபிலிம்களில் வரும் நேர்மையான, உன்னதமான, மற்றவர்களுடைய உணர்வை புரிந்துக் கொள்ள தெரிந்த நல்ல ஹீரோவாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Three Things Dads Should Tell Their Daughter Everyday

Three Things Dads Should Tell Their Daughter Everyday
Story first published: Tuesday, June 7, 2016, 15:46 [IST]