குழந்தைகளுக்கு வரும் வயிற்று வலிக்கான சில வீட்டு வைத்தியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

குழந்தைகள் அடிக்கடி வயிற்று வலியால் அவஸ்தைப்படுவார்கள். குறிப்பாக 4-8 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தான் வயிற்று வலியால் கஷ்டப்படுவார்கள். வயிற்று வலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஃபுட் பாய்சன், மலச்சிக்கல், வயிற்றில் நோய்த்தொற்றுக்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

Remedies For Stomach Pain In Kids

குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்தால், நாம் பலரும் நம் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சரிசெய்ய முயலுவோம். ஏனெனில் இது ஆரோக்கியமானதும், எவ்வித பக்கவிளைவு இல்லாததும் கூட. இங்கு குழந்தைகளுக்கு வரும் வயிற்று வலிக்கான சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி

இஞ்சி

இஞ்சியில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான ஜின்ஜெரால் உள்ளது. இது அசௌகரியம் மற்றும் குமட்டல் உணர்வைத் தடுக்கும். மேலும் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. இது செரிமானத்தை அதிகரித்து, வயிற்றில் அமிலத்தை சரிகட்டும். அதற்கு இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்துக் கொடுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சுடுநீர் ஒத்தடம்

சுடுநீர் ஒத்தடம்

உங்கள் குழந்தை வயிற்று வலி தாங்க முடியாமல் அவஸ்தைப்பட்டால், சுடுநீர் பேக் கொண்டு ஒத்தடம் கொடுங்கள். இப்படி செய்யும் போது, சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, வலி குறையும்.

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீயில் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. இது அடிவயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தை உடனடியாக சரிசெய்யும். எனவே உங்கள் குழந்தை வயிற்று வலியால் அவஸ்தைப்படும் போது, சீமைச்சாமந்தி டீ தயாரித்துக் கொடுங்கள். இது செரிமான பாதை தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, வலியைக் குறைக்கும்.

தயிர்

தயிர்

தயிரை உங்கள் குழந்தையின் அன்றாட உணவில் சேர்த்து வந்தால், அவர்களுக்கு வயிற்று வலி வருவது தடுக்கப்படும். ஏனெனில் தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்திற்கு உதவி, வயிற்று வலி ஏற்படுவதைத் தடுக்கும்.

புதினா டீ

புதினா டீ

புதினா வயிற்று வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். ஆய்வுகளில் புதினா, அடிவயிற்று தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்வதாக தெரிய வந்துள்ளது. எனவே வயிற்று வலியின் போது புதினா டீயைக் குடிக்க, வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Remedies For Stomach Pain In Kids

How to cure stomach kids pain? Well, here are some remedies for stomach pain in kids.
Story first published: Saturday, November 19, 2016, 14:30 [IST]
Subscribe Newsletter