Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
உங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க!
உயரம் என்பது சாதாரணமான ஒன்று தான். ஆனால், உயரம் குறைவாக இருந்தால் குட்டை என கூறி கேலி கிண்டல் செய்தே வாழ்விலும் வளர விடாமல் தடுப்பார்கள். என்ன தான் இருந்தாலும் பெற்றோருக்கு தங்கள் குழந்தை அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று தான் விரும்புவர்கள்.
படிப்பில், அறிவாற்றலில், விளையாட்டில் என அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என விருப்பும் பெற்றோர். தங்கள் குழந்தைகள் உயரத்திலும் கூட அதிகமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். அப்படி ஆசைப்படும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவர் என்றால், பின் கூறியுள்ளதை பின்பற்றுங்கள்.

பின்பற்ற வேண்டியவை : #1
பால் உணவுகள்! தினசரி உங்கள் குழந்தையின் உணவுமுறையில் பால் உணவுகளை சேர்க்க மறக்க வேண்டாம். அது, பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதிலிருக்கும் கால்சியம் மற்றும் உயர்ரக புரதச்சத்து எலும்புகள் மற்றும் தசைகளின் வலிமையை அதிகரித்து நன்கு வளர உதவுகிறது.

பின்பற்ற வேண்டியவை : #2
முட்டை! முறையில் புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி2, ரிபோப்லாவின் போன்ற ஏனைய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இவை குழந்தைகளின் எலும்புகள் நன்கு ஆரோக்கியமாக வளர பயனளிக்கின்றன.

பின்பற்ற வேண்டியவை : #3
சிக்கன்! மற்றுமொரு சிறந்த உணவு சிக்கன். இதில் புரதச்சத்து நிறைய இருக்கிறது. இது பருவமடைந்த பிறகும் நன்கு வளர உதவும் உணவாகும். இதுவும், எலும்பு மற்றும் தசைகளின் வலிமையை அதிகரிக்கும் உணவாக தான் திகழ்கிறது.

பின்பற்ற வேண்டியவை : #4
வாழைப்பழம்! விலையில் மலிவாகவும், ஊட்டச்சத்தில் மிகையாகவும் இருக்கும் பழம், வாழைப்பழம். மேலும், இது இதில் இருக்கும் பட்டாசியம் மற்றும் கால்சியம் எலும்புகளுக்கு பலம் சேர்க்கிறது. இதனால், குழந்தைகள் நன்கு வளர்வார்கள்.

பின்பற்ற வேண்டியவை : #5
ஓட்ஸ்! மற்றுமொரு சிறந்த இயற்கை உணவு ஓட்ஸ். இது குழந்தைகள் வேகமாக வளரவும், உடல்பருமன் அதிகரிக்காமல் இருக்கவும் உதவுகிறது. இதில் புரதச்சத்து மிகையாக இருக்கிறது. மேலும், இது திசு வளர்ச்சி வேகமாகவும் பயனளிக்கிறது.

பின்பற்ற வேண்டியவை : #6
சோயாபீன்! இதில் ஃபோலேட், வைட்டமின்ஸ், புரதச் சத்துக்கள், கார்ப்ஸ் இருக்கின்றன. இவை குழந்தைகளின் தசை, மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் ஊக்கமளித்து நன்கு வளரவும் உதவுகின்றன.

பின்பற்ற வேண்டியவை : #7
மீன்! சால்மன், சூரை போன்ற மீன்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்தவை ஆகும். இவை, குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆகும்.

பின்பற்ற வேண்டியவை : #8
நீச்சல்! உணவுகளை போலவே, நீச்சலும் நன்கு வளர உதவும் பயிற்சி ஆகும். உங்கள் குழந்தைக்கு 5-6வயதில் இருந்தே நீச்சல் பயிற்சி அளிப்பதன் மூலம், இயற்கையாகவே உங்கள் குழந்தை நன்கு வளர நிறைய வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பு!
குறிப்பு: வளர்ச்சி என்பது மரபணு சார்ந்ததும் ஆகும். உணவுகள், ஊட்டச்சத்துக்கள், பயிற்சிகள் அனைத்தும் உயரும் செயற்பாட்டை விரைவுப்படுத்த ஊக்குவிக்குமே தவிர, அளவுக்கு அதிகமாக வளர பயனளிக்காது.



Click it and Unblock the Notifications
