குழந்தைகளின் உடல்நலனை மேம்படுத்தும் ஸ்பெஷல் ட்ரிங்க்ஸ்!!!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் குழந்தைகள் அவர்களாகவே கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையானதை வாங்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டனர். பெரும்பாலும் தற்போதைய குழந்தைகள் டிவியில் காண்பிக்கப்படும் விளம்பரங்களை கண்டு, கண்ட கண்ட குளிர் பானங்களை தான் வாங்கி பருகுகிறார்கள். இது அவர்களது உடல்நலத்தை வெகுவாக பாதிக்கின்றன.

குழந்தைகளின் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்துவதற்கான அருமையான சிகிச்சைகள்!!!

சிறு வயது முதலே உடல்நலனை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதிலும் முக்கியமாக குழந்தை பருவம். வீட்டிலேயே எளிதாக தயாரிக்க கூடிய பானங்கள் நிறைய இருக்கின்றன. இதில், இளநீர், மோர், காய்கறி சூப் போன்றவை குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் அளிக்கின்றன....

பருவமடைந்த பிள்ளைகளுக்கு ஏற்படும் அந்தரங்க பிரச்சனைகள் - பெற்றோர்களின் கவனத்திற்கும்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃப்ரெஷ் ஜூஸ்

ஃப்ரெஷ் ஜூஸ்

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் ஜூஸ்களை விட நீங்களே வீட்டில் தயாரிக்கக் கூடிய ஃப்ரெஷ் ஜூஸ்கள் குழந்தைகளின் நலத்தை மேம்படுத்த உதவும். முக்கியமாக ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசிப்பழம், மாதுளை, திராட்சை போன்றவை குழந்தைகளின் நலனை வெகுவாக ஊக்குவிக்கின்றன.

சுத்தமான நீர்

சுத்தமான நீர்

பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து வைக்கப்படாத சுத்தமான நீரை குழந்தைகளுக்கு கொடுங்கள். தண்ணீர் குடல் இயக்கத்தை மேம்படுத்த, உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க என பல வகைகளில் குழந்தைகளின் உடல்நலனுக்கு உதவுகிறது.

காய்ச்சிய பால்

காய்ச்சிய பால்

குழந்தைகளின் எலும்பின் வலுவினை அதிகரிக்க அதிகமாக உதவும் ஓர் உணவு பால் தான். இதுமட்டுமின்றி, தசைகள் வலுப் பெறவும், சருமம் பளபளப்பாக இருக்கவும் பால் பயனளிக்கிறது.

மேங்கோ ஷேக்

மேங்கோ ஷேக்

ஷேக் வகை பழரசங்களில் மாம்பழத்தை விட ருசி மிகுந்த ஒன்று இருக்க வாய்ப்புகள் இல்லை. குழந்தைகள் இதை விரும்பி பருகுவார்கள். இதில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு நல்ல பயன் தருகிறது.

எலுமிச்சை டீ

எலுமிச்சை டீ

இதில் இருக்கும் ஆன்டி-அக்ஸிடன்ட்ஸ், வைட்டமின் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் குழந்தைகளுக்கு மிகவும் தேவையானவை. இவை குழந்தைகளின் உடல்திறன் அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

இளநீர்

இளநீர்

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய பானம் இளநீர். இதில் எண்ணற்ற உடல்நல நன்மைகள் இருக்கின்றன. இதில் க்ளுகோஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் போன்ற சத்துகள் அதிகம் கிடைக்கின்றன. இது உடல் வறட்சி ஏற்படாமல் இருக்க மற்றும் உடல் சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

காய்கறி சூப்

காய்கறி சூப்

காய்கறிகளை நீரில் வேகவைத்து அதை சூப்பாக குழந்தைகளுக்கு ஊட்டுவது மிகவும் நன்மை விளைவிக்க கூடியது ஆகும். இதனால் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் மிக எளிதாக கிடைக்கும். கண்ட இரசாயனம் கலந்த பானங்களை கொடுப்பதற்கு பதிலாக குழந்தைகளுக்கு இவற்றை தருவது மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tasty And Healthy Drinks For Kids

Tasty And Healthy Drinks For Kids, take a look.
Story first published: Monday, October 5, 2015, 16:14 [IST]