ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெற்றோர்களிடம் மறைக்கும் 6 விஷயங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

தங்கள் குழந்தைகள் தங்களிடம் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர் என்று தான் பல பெற்றோர்களும் நினைத்து வருகின்றனர். ஆனால் அது உண்மைக்கு அப்பார்ப்பட்டவையாகும். சொல்லப்போனால், குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்லக்கூடாத சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கிறது.

அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் அதனை ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இங்கு ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோரிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் சிலவற்றை பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெற்றோர்கள் வாங்கிய ஆடைகளை நீங்கள் வெறுக்கலாம்

பெற்றோர்கள் வாங்கிய ஆடைகளை நீங்கள் வெறுக்கலாம்

உங்களின் நாகரீக விருப்பம் உங்கள் பெற்றோரின் விருப்பத்தோடு ஒத்துப்போகாமல் இருக்கலாம். ஆனால் 1980-களில் வந்துள்ள படங்களின் பாணியில் உங்கள் பெற்றோர் உங்களுக்கு பரிசளித்தால் தந்திரத்தோடு செயல்படுங்கள். பொருளுக்கான ரசீதை வாங்கி, அதனை ஜாக்கிரதையாக கடையில் மாற்றி விடுங்கள். உங்கள் ஆடையைப் பற்றி அவர்கள் கேட்டால், அது உங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதால், அதனை விசேஷ தினத்தில் போடப்போவதாக சொல்லுங்கள்.

அவ்வபோது வாங்கிய கடன்களை பற்றி மறைத்தல்

அவ்வபோது வாங்கிய கடன்களை பற்றி மறைத்தல்

உங்களுக்கு பண பற்றாக்குறை ஏற்படும் போது, நீங்கள் உங்கள் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கிருப்பீர்கள். இதனை உங்கள் பெற்றோரிடம் கூற மறந்திருப்பீர்கள். பரவாயில்லை! ஒருவேளை உங்கள் பெற்றோரிடம் கூறவில்லை என்றால், மீண்டும் அதனை செய்யமாட்டேன் என உங்களுக்கு நீங்களே சத்தியம் செய்து கொள்ளுங்கள்.

காபிக்காக 1000 கணக்கில் செலவு செய்தல்

காபிக்காக 1000 கணக்கில் செலவு செய்தல்

இம்மாதிரியான சூழ்நிலையில், பெரும்பாலான அம்மாக்கள் கூறுவது இதை தான், "காபியை வீட்டில் குடிக்க வேண்டியது தானே? எதுக்காக காபி கடைக்கு போற?". ஆனால் அத்தகைய காபி கடைகளுக்கு நீங்கள் போக வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். நீங்கள் காபி ஷாப்பில் காபி, சாண்ட்விச் மற்றும் நொறுக்குத் தீனிகளுக்காக செலவு செய்யும் தொகையை பற்றி உங்கள் பெற்றோர் அறிந்தால், அந்த காசில் காய்கறி, மளிகை சாமான்களை வாங்கியிருப்போமே என பெற்றோர்கள் கடுப்பாவார்கள்.

முத்தமிடுவதில் நீங்கள் ஸ்பெஷலிஸ்ட்

முத்தமிடுவதில் நீங்கள் ஸ்பெஷலிஸ்ட்

நீங்கள் செக்ஸைப் பற்றி உங்கள் பெற்றோரிடம் கலந்துரையாடும் அளவிற்கு பக்குவப்பட்டிருந்தால் நல்லதே. ஆனால் தேவையற்ற விஷயங்களைப் பற்றி பேசி அவர்களின் மீது சுமையை இறக்காதீர்கள். மாலை நேரத்திற்கு பிறகு உங்கள் பெற்றோர் உங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டுமானால், நீங்கள் டேட்டிங் செல்வதை பற்றியெல்லாம் உங்கள் பெற்றோரிடம் கூறாதீர்கள்.

அளவுக்கு அதிகமாக மது குடித்தல்

அளவுக்கு அதிகமாக மது குடித்தல்

தங்கள் குழந்தைகள் எந்த ஒரு விஷயத்திலும் அளவை மீற மாட்டார்கள் என்ற நம்பிக்கையை பெற்றோர்கள் கொண்டிருப்பார்கள், குறிப்பாக புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் மதுபானம் பருகும் பழக்கம். ஆனால் சொல்லப்போனால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இளைஞர்கள் அளவுக்கு அதிகமாக இவற்றை பயன்படுத்துவார்கள். ஒருவேளை நீங்கள் அளவுக்கு அதிகமாக குடிக்கிறீர்கள் என்றால் அதனை வீட்டில் சொல்லாதீர்கள்.

அவர்கள் இல்லாத போது பார்டிக்கு செல்லுதல்

அவர்கள் இல்லாத போது பார்டிக்கு செல்லுதல்

தங்கள் பெற்றோர்கள் சில காலம் தங்களை விட்டு செல்லும் போது, குழந்தைகளை கையில் பிடிக்க முடியாது. அப்போது தானே சுதந்திரமாக அவர்களால் கொண்டாட முடியும். ஆனால் அவர்கள் வெளியே செல்வதற்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்பது அவர்களுக்கு தெரிய வேண்டாம். அது தான் அவர்களுக்கும், உங்களுக்கும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Things Kids Never Tell Parents

Most parents believe that their children tell them everything. But thats far from the truth. In fact, there are certain things you should never tell your parents.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter