For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணம் பற்றி குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 4 விஷயங்கள்!!!

By Super
|

குழந்தைகளுக்கு பணம் பற்றி சொல்லிக் கொடுக்கும் போது, அதற்கான முறையான அடித்தளத்தை அவர்களுக்கு நீங்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அநாவசியமாக செலவு செய்யும் பழக்கம் அவர்களுடைய வாழ்க்கையை பாழாக்கிவிடும்.

சுகபோகங்களும், வசதிகளும் நம்மை ஆட்டுவிக்கும் இந்த உலகத்தில், பணம் தொடர்பான விஷயங்களில சுய கட்டுப்பாடு மிகவும் அவசியமல்லவா? இதே விஷயத்தை உங்களுடைய குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், அது காலம் கடந்த செயலாகி விடும்.

ஆடம்பரமான பொருளின் மீதும் ஆசையை வளர்த்துக் கொண்டு, அதற்கு அடிமையாகி விடும் பழக்கம், எந்தவொரு மனிதனையும் சீரழித்து விடும். உங்களுடைய குழந்தைகள் வளர்ந்த பின்னர், கணக்கு வழக்கில்லாமல் பணத்தை செலவு செய்தார்கள் என்றால், அதுவும் அவர்கள் சம்பாதித்த பணமாக இருந்தாலும் கூட, நீங்கள் தான் அதற்காக வருத்தப்படுவீர்கள்.

உறுதியான நிதி நிலையைக் கொண்ட எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமானால், செலவு செய்யும் வழக்கங்கள் முறையாக கவனிக்கப்பட வேண்டும் மற்றும் சேமிக்கும் பழக்கம் ஊக்குவிக்கப்பட வேண்டும். இதே விஷயத்தை உங்களுடைய குழந்தைகளிடம் எப்படி சொல்லலாம் என்று தெரிந்து கொள்வோமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காத்திரு மகனே!

காத்திரு மகனே!

உங்களுடைய குழந்தைகளுக்கு காத்திருக்கும் படி பயிற்சி அளிக்கவும். முறையான நிதி முன்னேற்றத்திற்கு, காத்திருக்கும் படி தாமதப்படுத்துவது ஒரு முக்கியமான பாடமாகும். ஒருவர் பணத்தை செலவு செய்ய விரும்பினால், அவர் பணத்தைச் சம்பாதிக்க காத்திருக்க வேண்டும் மற்றும் பின்னர் செலவு செய்ய வேண்டும் என்ற நிலை வரை காத்திருக்க வேண்டும்.

சம்பாதித்தல், பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் சேமித்தல்

சம்பாதித்தல், பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் சேமித்தல்

அனைத்து வளங்களும் கடும் உழைப்பினால் சம்பாதிக்கப்படுகின்றன, குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன மற்றும் மீதமுள்ளவை சேமிக்கப்படுகின்றன. இந்த முக்கியமான பாடத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும்.

செலவு என்பது பெரும்பாலும் நல்ல தேர்வுகளைப் பற்றியதே!

செலவு என்பது பெரும்பாலும் நல்ல தேர்வுகளைப் பற்றியதே!

ஒவ்வொரு பைசாவை செலவு செய்யும் போதும் சரியான முடிவுகளை எடுக்க குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும். இது உங்களை நிதிச் சிக்கல்களில் இருந்து காப்பாற்றும்.

குழந்தைகளை கலந்துரையாடலில் ஈடுபடுத்துங்கள்

குழந்தைகளை கலந்துரையாடலில் ஈடுபடுத்துங்கள்

நிதி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, குழந்தைகளிடம் அதைப் பற்றி பேசவும் மற்றும் செலவு செய்யும் முடிவை நீங்கள் எப்படி முறையாக தீர்மானிக்கிறீர்கள் என்றும் எடுத்துக்காட்டவும் செய்யுங்கள். இது உங்களுடைய குழந்தைக்கு பணம் பற்றி நீங்கள் கற்றுக் கொடுக்கும் வழிகளில் ஒன்றாகும்.

குறிப்பு

குறிப்பு

இந்த வழிமுறைகளில் உங்களுடைய குழந்தைகள் பணத்தை சம்பாதிக்கவும் மற்றும் சேமிக்கவும் கற்றுக் கொள்ள நீங்கள் உதவ முடியும். குழந்தைகளுக்கு பணம் பற்றி சொல்லிக் கொடுப்பது, நீண்டகால நோக்கில் அவர்கள் வளரும் போது உதவியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Four Money Lessons For Kids

Teaching kids about money goes a long way in helping them when they grow up.
Desktop Bottom Promotion