பெற்றோர்கள் ஏன் குழந்தைகளிடம் மிகுந்த கண்டிப்புடன் நடக்கக் கூடாது?

By: Ashok CR
Subscribe to Boldsky

நீங்கள் கண்டிப்பான பெற்றோரா? 'பிரம்பை எடுக்காத பிள்ளை கெட்டு போகும்' என்ற கொள்கையை கண்டிப்புடன் பின்பற்றும் பெற்றோரா? இப்படி கண்டிப்புடன் நீங்கள் நடந்து கொண்டால், உங்கள் குழந்தைகள் மூர்கத்தனமாக நடந்து கொள்வார்கள் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் தங்கள் பெற்றோரின் குணங்களையும் குழந்தைகள் கவனித்து, அதையும் பின்பற்றுவார்கள் என்றும் சொல்கின்றனர்.

கண்டிப்பான பெற்றோர்கள் இருக்கும் வீட்டில் வாழும் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கும். மேலும் குழந்தைகளின் சுய மரியாதையையும் அது குறைத்துவிடும். மேலும் இது குழந்தையின் மன வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும்.

குழந்தைகளிடம் பெற்றோர்கள் கண்டிப்புடன் நடந்தால், பயம் மற்றும் பதற்றத்துடன் அவர்கள் வளர்வார்கள். இதன் விளைவாக அவர்கள் பாதுகாப்பின்மை உணர்வுடன் கூடிய மனிதர்களாக மாறுவார்கள். ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகளுக்கு விருப்பம் உள்ள காரியங்களை அவர்களை செய்ய வையுங்கள். அதற்கு போதிய வழிமுறையையும் அக்கறையும் செலுத்துங்கள்.

பெற்றோர்கள் ஏன் கண்டிப்புடன் நடக்கக்கூடாது என்பதற்கான சில காரணங்களை இப்போது பார்க்கலாம். கண்டிப்புடன் நடப்பதற்கும், ஒழுக்கத்துடன் வளர்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. கண்டிப்பு என்பது குழந்தைகளுக்கு மத்தியில் பயத்தை உருவாக்கும். இதுவே ஒழுக்கம் என்பது நல்ல மனிதனாக வாழ தேவைப்படும் நல்ல குணங்களைப் பின்பற்ற வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் குழந்தை பயத்தில் வாழும்

உங்கள் குழந்தை பயத்தில் வாழும்

நீங்கள் கண்டிப்பான பெற்றோராக இருந்தால், உங்கள் குழந்தை எப்போதும் பயத்தில் வாழும். தங்கள் சொந்த வீட்டிலேயே எந்த குழந்தையும் பயத்துடன் வாழ கூடாது. உங்கள் கண்டிப்பின் அளவை கட்டுப்படுத்துங்கள். தங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், உங்களை எப்போது வேண்டுமானாலும் அணுக முடியும் என்ற எண்ணம் உங்கள் குழந்தைக்கு ஏற்பட வேண்டும்.

மோசமடைவதற்கான மாற்றம்

மோசமடைவதற்கான மாற்றம்

கண்டிப்பான வீட்டில் வளர்ந்த குழந்தைகள் காற்று நிரப்பப்பட்ட பலூன்களை போலே, எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும். பலூன் வெடிக்கும் போது அவர்கள் முழுமையாக ஒரு புது மனிதனாக மாறுவார்கள். வாழ்க்கையில் அவர்கள் ஈடுபடும் காரியங்களும் சுருங்கி போவதால், இந்த மாற்றம் இன்னும் மோசமடைய தான் செய்யும்.

உங்கள் குழந்தைக்கு எப்போதும் சந்தோஷம் கிடைக்காது

உங்கள் குழந்தைக்கு எப்போதும் சந்தோஷம் கிடைக்காது

நீங்கள் கண்டிப்பான பெற்றோராக இருந்தால், பயத்துடனான சூழ்நிலையில், உங்கள் குழந்தை எப்போதும் சந்தோஷமாகவே இருக்க மாட்டார்கள். பெற்றோராக, உங்கள் குழந்தைக்கு நிபந்தனையற்ற அன்பையும் சந்தோஷத்தையும் வழங்கிடுங்கள். மாறாக அவர்களுக்குள் பயத்தை விதைக்காதீர்கள்.

உங்கள் குழந்தையின் மனப்பாங்கை மாற்றும்

உங்கள் குழந்தையின் மனப்பாங்கை மாற்றும்

கண்டிப்பான பெற்றோராக இருந்தால், அது குழந்தையின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக உங்கள் குழந்தைக்கு உடன் பிறந்தவர்கள் இல்லையென்றால், அதன் பாதிப்பு இன்னும் அதிகமாகும். உங்கள் குழந்தையை மன ரீதியாக ஆரோக்கியமாக வளர்க்க நீங்கள் அன்பான, அதே சமயம் ஒழுக்கமான பெற்றோராக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Parents Shouldn't Be Strict?

Why a parent shouldn't be strict with their little kids. Here is why you should not be the Hitler dad or mum. Take a look.
Subscribe Newsletter