Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
3 வயது குழந்தைகளுக்கு எந்த மாதிரியான டயட்டை பின்பற்ற வேண்டும்?
குழந்தைகள் வளர ஆரம்பிக்கும் போது, அவர்களின் உணவுத் திட்டத்தில் மாற்றங்களுடன், ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சேர்த்து வர வேண்டும். அதிலும் தற்போது 3 வயதிலேயே பெற்றோர்கள் தங்கள குழந்தைகளை பள்ளியில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளின் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தையும் வலிமையையும் அதிகரிக்கும் வண்ணம் உணவுகளை போதிய நேரத்தில் கொடுத்து வரை வேண்டும்.
மேலும் தற்போது சிறு வயதிலேயே குழந்தைகள் உடல் பருமனால் அவஸ்தைப்படுகின்றனர். எனவே அந்த நிலையை தவிர்ப்பதற்கு, குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான டயட்டை மேற்கொண்டு வந்தால், அவர்களின் உடல் பருமன் அடைவதைத் தடுக்கலாம். இங்கு அப்படி 3 வயதில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான டயட்டை பின்பற்ற வேண்டும் என்பது பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

அதிகாலையில்...
குழந்தைகள் காலையில் எழுந்ததும், அவர்களுக்கு ஒரு டம்ளர் பாலுடன், தோல் நீக்கிய 4 பாதாம்களை சாப்பிட கொடுக்க வேண்டும். குறிப்பாக பாதாமானது நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்ததாக இருக்க வேண்டும்.

காலை உணவு
ஒவ்வொருவருக்கும் காலை உணவானது மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு மிகமிக முக்கியமானது. அதிலும் அவர்களுக்கு காலையில் கோதுமை பிரட்டில், வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து பின் அதில் தக்காளி வைத்து சாண்ட்விச் போல் செய்துமு கொடுப்பது மிகவும் சிறந்த உணவாக இருக்கும்.

சூப்
காலையில் உணவிற்கு பின் ஒரு பௌல் தக்காளி சூப் கொடுப்பது மிகவும் சிறந்தது. அதுமட்டுமின்றி, ஒரு பௌல் பழங்களை கொடுக்கவும் வேண்டும்.

மதிய உணவு
மதிய வேளையில் குழந்தைகளுக்கு ஒரு பௌல் சாதம், 1 சப்பாத்தி, 1/2 பௌல் தால் மற்றும் 1/2 பௌல் பன்னீர் சப்ஜி செய்து கொடுத்தால், அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஸ்நாக்ஸ்
மாலையில் அவர்களுக்கு சாக்லெட் மில்க் ஷேக் உடன், 2 பிஸ்கட் சாப்பிட கொடுக்க வேண்டும்.

இரவில்...
இரவில் குழந்தைகளுக்கு எப்போதுமே லைட்டான உணவுகளைக் கொடுக்க வேண்டும். அதிலும் 2 சப்பாத்தி, 1/2 கப் தால் மற்றும் 1/2 கப் தயிர் கொடுப்பது மிகவும் சிறந்தது.



Click it and Unblock the Notifications
