For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கிற்கான 7 சிறந்த வீட்டு சிகிச்சைகள்!!!

By Ashok CR
|

குழந்தைகள் என்றாலே அவர்களை மிகவும் பக்குவமாக பார்த்துக் கொள்ள வேண்டும். என்ன தான் கவனித்துக் கொண்டே இருந்தாலும் ஒரு நோடி பொழுதில் எதையாவது எடுத்து வாயில் வைத்து விடுவார்கள். இதனால் சில நேரம் அவர்களுக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டுவிடும். குழந்தைகள் என்பதால் அவர்களால் என்னவென்று சொல்லவும் முடியாது. அதனால் அவர்களுக்கு என்ன பிரச்சனை என கண்டுபிடிக்கவே சில நேரங்களில் நமக்கு தாமதமாகும். அப்படியே கண்டுபிடித்தாலும் அவர்களை குணப்படுத்தி மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்குள் போதும் போதுமென ஆகிவிடும்.

குறிப்பாக, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் கஷ்டம் குழந்தைக்கு மட்டுமல்லாது அவர்களை பராமரிக்கும் நமக்கும் சேர்த்து தான். உங்கள் குழந்தைக்கு அப்படி அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா? இதனால் உங்கள் குழந்தை பெரிதும் கஷ்டத்திற்கு ஆளாகலாம் அல்லவா? வீட்டிலேயே அளிக்கப்படும் சிகிச்சையால் உங்கள் குழந்தைக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கில் இருந்து சில நிவாரணங்கள் கிடைத்தால் எப்படி இருக்கும்? கண்டிப்பாக உங்கள் சிரமம் குறையும் தானே?

ஆம், வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான சில வீட்டு சிகிச்சை முறைகளைத் தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். ஆச்சரியம் அளிக்கும் விதமாக அவைகள் சிறந்த நிவாரணத்தை அளிக்கும். தொடர்ந்து படித்து அவைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெந்தயம்

வெந்தயம்

வயிற்றுப்போக்கிற்கு சிறந்த வீட்டு சிகிச்சைகளில் ஒன்றாக விளங்குகிறது வெந்தய விதைகள். அதில் கோந்து தன்மை வளமையாக உள்ளதால், அது வயிற்றுப்போக்கை குணப்படுத்த இயற்கையான சிகிச்சை வழிமுறையாகும். வெந்தய விதைகள் மலத்தை இறுகச் செய்யும். நீராக செல்லும் மலத்தினால் ஏற்படும் அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். சிறந்த பலனை பெற, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தயிருடன் கலந்து, ஒரு நாளைக்கு 2-3 முறை கொடுக்கவும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சி என்பது செரிமானத்திற்கும், ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்கவும் மிகவும் நல்லதாகும். வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சை அளித்திட இது மிகவும் ஆரோக்கியமான மற்றும் சிறந்த தேர்வாகும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரில் பல உடல் நல பயன்கள் அடங்கியுள்ளது. இதில் பல ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அடங்கியுள்ளது. இது வயிற்றுப்போக்கை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும். மேலும் இதிலுள்ள பெக்டின் என்ற ரசாயனம், குடலில் ஏற்படும் பிடிப்பை அமைதிப்படுத்தி, பாதுகாப்பு பூச்சு ஒன்றை அளிக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

நீராக செல்லும் மலத்தை இறுகச் செய்வதற்கு வாழைப்பழம் உதவிடும். ஆப்பிள் சீடர் வினிகரில் இருப்பதை போல் வாழைப்பழத்திலும் பெக்டின் இருக்கிறது. பாதுகாப்பான பூச்சை பெக்டின் வழங்குவதால், குடலில் ஏற்படும் பிடிப்பை அமைதிப்படுத்தி, குடலில் இருந்து அதிகப்படியான நீரை உறிஞ்சும். இதனால் மலத்தில் உள்ள நீரின் அளவு குறையும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் வளமையாக உள்ளதால், எலெக்ட்ரோலைட்ஸை மாற்றவும் உதவும்.

தயிர்

தயிர்

தயிரில் நன்மையை அளிக்கும் பாக்டீரியாவான 'லைவ்-கல்ச்சர்ஸ்' உள்ளது. இவ்வகையான பாக்டீரியா குடலில் பாதுகாப்பு பூச்சை அளிக்கும். மேலும் பாக்டீரியக்களை நீக்க லாக்டிக் அமிலத்தை சுரக்க உதவும்.

வெள்ளை சாதம்

வெள்ளை சாதம்

வயிற்றுப்போக்கை நிறுத்த ஸ்டார்ச்சும் பெரிதும் உதவுகிறது. உருளைக்கிழங்கு தவிர, சாதத்திலும் ஸ்டார்ச் வளமையாக உள்ளது. மேலும் வெள்ளை சாதம் சுலபமாக செரிமானமாகிவிடும். வயிற்றுப்போக்கால் அவதிப்படும் போது, மசாலா சேர்த்த சாதத்தை சாப்பிடுவது உகந்தது அல்ல தான் என்றாலும் கூட, வயிற்றுப்போக்கை நிறுத்த வெள்ளை சாதம் உதவவே செய்யும். குறைந்த அளவிலான சாதத்தில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அளவை உயர்த்திடுங்கள்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

வயிற்றுப்போக்கிற்கு ஸ்டார்ச் நிறைந்த உணவுகள் நல்ல பலனை தரும். ஸ்டார்ச் என்றாலே உருளைக்கிழங்கு தான். அதனால் வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சை அளிக்கும் சிறந்த உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது உருளைக்கிழங்கு. வேக வைத்த உருளைக்கிழங்கை உட்கொண்டால், வயிற்றுக்கு இதமாக இருக்கும். ஆனால் பிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற வறுத்த வகையிலான உருளைக்கிழங்கு அல்லது மசாலா சேர்க்கப்பட்ட உருளைக்கிழங்கு குழம்புகளை உட்கொண்டால், வயிற்றுப்போக்கு மோசமடையத் தான் செய்யும். உங்கள் வயிற்று போக்கை நிறுத்த ஸ்டார்ச் தேவையான ஒன்று தான். ஆனால் அதனை கூடுதல் எண்ணெய் மற்றும் மசாலா இல்லாமல் உட்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

குறிப்பு

குறிப்பு

இதுப்போக இளநீர், சாதம் வடிகட்டிய நீர், பழங்கள் அல்லது காய்கறி ஜூஸ்கள் போன்ற பானங்களையும் வயிற்றுப்போக்கை நீக்க உட்கொள்ளலாம். ஸ்டார்ச் அதிகமாக உள்ள எந்த ஒரு பானமும் இதற்கு உதவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Effective Home Remedies To Treat Diarrhea In Children

Does your child have frequent bouts of diarrhoea? This post talks about 7 simple home remedies which can give your child a surprisingly huge relief from diarrhoea.
Desktop Bottom Promotion