Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
உங்க குட்டீஸ் எப்ப பார்த்தாலும் டிவி பார்க்கிறாங்களா?

வனவிலங்குகள் நிகழ்ச்சி
இயற்கையைப் பற்றியும், வனவிலங்குகளைப் பற்றியும் ஒளிபரப்புவதற்கு என்று தனி சேனல்கள் உள்ளன. அவற்றை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யலாம். இதன் மூலம் யானை, புலி, சிங்கம் மட்டுமல்லாது அறியாத பல விலங்குகளைப் பற்றியும் குழந்தைகள் அறிந்து கொள்ளலாம்.
கார்ட்டூன் சேனல்
இன்றைக்கு பெரும்பாலான குழந்தைகளின் நெருக்கமான நண்பர்கள் கார்டூன்கள்தான். அடிதடியில் இறங்கும் சேனல்களை ஒதுக்கிவிட்டு கதைகளை கூறும் கார்ட்டூன் சேனல்களை அறிமுகம் செய்யுங்கள். சிறுவயதில் இருந்தே இதிகாச, புராணத் தொடர்களை கார்ட்டூன்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
அனிமேஷன் நிகழ்ச்சிகள்
பெரும்பாலான கார்ட்டூன் சேனல்களில் அனிமேசன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இவை குழந்தைகளின் விருப்பத்திற்குரியவை. எழுத்துக்களாக தெரிந்து கொள்வதை விட விஷுவலாக நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளலாம். இதிகாச, புராண தொடர்கள் எல்லாம் இன்றைக்கு டிவியில் அனிமேஷன் வடிவத்தில் வருகின்றன. குழந்தைகள் மனதில் அவை எளிதில் புரியும்.
டி.வி.டியில் படங்கள்
குழந்தைகளுக்கு கற்றுக்கொள்ளும் திறன் அதிகம் என்பதால் அவர்களுக்கு சி.டிக்களை வாங்கிவந்து டி.வி.டியில் போட்டு பழக்கலாம். பழங்கள், காய்கறிகள், விலங்குகள் போன்றவைகளை படங்களாக டிவிடியில் தெரிந்து கொள்வதன் மூலம் அவை குழந்தைகளின் மனதில் நன்கு பதியும்.
என்னதான் நல்ல நல்ல சேனல்களை அறிமுகம் செய்தாலும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் கவனித்து கொண்டுதான் இருக்கவேண்டும். விளம்பரங்களிலோ, இல்லை சேனல்களிலோ தேவையற்ற நிகழ்ச்சிகள் வரும்போது எளிதில் சுவிட்ச் ஆஃப் செய்து விடலாம். டிவியில் எது தேவை எது தேவையில்லை என்பதை குழந்தைகளுக்கு புரியவைத்து குறிப்பிட்ட நேரம் வரை பார்க்கச் செய்தால் அதுவும் அறிவை வளர்க்கும் பெட்டிதான் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications
