Latest Updates
-
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்..
குழந்தைங்க நீச்சல் கத்துக்கிறாங்களா? பெற்றோர்களே இதைப்படிங்க!

அமெரிக்காவில் பெரும்பாலான குழந்தைகள் நீச்சல் குளத்தில் மரணமடைவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. எனவே குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவுறுத்த வேண்டும். நீச்சல் பயிற்சியாளர் நீச்சல் குளத்தின் சுற்றுப்புறத்திற்குள்தான் இருக்கிறாரா என்பதை கண்காணிக்கவேண்டும்.
நீச்சல் பயிற்சி அளிக்கும்போது அவசர காலத்தில் எப்படி நடந்து கொள்வது மற்றும் முதலுதவி குறித்து பயிற்சியாளர் குழந்தைகளுக்கு விளக்கி கூறவேண்டும். அவசர காலத்துக்கு உதவும் வகையில் செல்போனை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும்.
நீச்சல் குளத்தில் பாதுகாப்பாக குளிப்பது குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும். நீச்சல் குளத்தில் அலாரம் இருக்க வேண்டும். அவசர காலத்தில் இது உதவும்.
நீச்சல் குளத்தின் அருகில் குழந்தைகள் நின்றிருக்கும் போதோ அல்லது நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் போதோ அவர்களை தனியாக விட்டு செல்ல கூடாது. நீச்சல் குளத்தில் தண்ணீர் வந்து செல்லும் குழாய் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளை அனுமதிக்க கூடாது.
நீச்சல் குளம் போதுமான அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதாரமான சூழலில் உள்ளதா என கவனிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். நீச்சல் குளத்தில் தண்ணீரை அடிக்கடி மாற்றுகிறார்களா மற்றும் சுத்தமாக பராமரிக்கிறார்களா என கட்டாயம் கவனிக்க வேண்டும்.
நீச்சல் கற்றுக் கொள்ள செல்லும்போது தூய்மையான மற்றும் நீச்சலுக்கென உள்ள உடைகளை அணிய வேண்டும். நீச்சல் குளத்தில் பயிற்சியின்போது இயற்கை உபாதைகளை கழிக்க கூடாது என பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். கண்கள் சிவப்பாக மாறும் வகையில் அதிக நேரம் குளிக்க அனுமதிக்க கூடாது. டைவ் அடித்து குளிக்குபோது பாதுகாப்பாக குளிக்க வேண்டும்.
நீச்சல் அடிப்பதற்கு முன்பு, பின்பும் நன்கு சுத்தமாக குளிக்க வேண்டும். அப்பொழுதுதான் பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள் எதுவும் தாக்காது. உடல் நலக் கோளாறு இருந்தால் நீச்சல் கற்றுக் கொள்ள செல்ல கூடாது.



Click it and Unblock the Notifications
