For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனல் வரப்போகுது நிறைய தண்ணீர் குடிங்க!

By Mayura Akilan
|

Summer Safety
கோடை காலம் தொடங்கும் முன்னே சாலையில் அனல் கொதிக்கிறது. வெப்பத்தினால் பல்வேறு நோய் பாதிப்புகள் தோன்றுவது இயற்கை. குழந்தைகளுக்கு வேர்க்குரு, அம்மை, அக்கி போன்ற நோய்களும், உஷ்ணம் தொடர்பான நோய்களும் ஏற்படுவது இயற்கை. எனவே நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக

நுங்கு, சந்தனம்

வெப்பத்தினால் வேர்க்குரு தொல்லை அதிகம் இருக்கும். கோடையில் இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை பனை நுங்கு. இந்த நுங்கு கொண்டு வேர்க்குரு உள்ள இடத்தில் தேய்த்தால் பலன் கிடைக்கும். நுங்கு கிடைக்காதவர்கள் சந்தனத்தை பூசலாம்.

அக்கி, அம்மை நோய்

வெயில் காலம் என்றாலே குழந்தைகளுக்கு கட்டி, அம்மை, அக்கி போன்ற நோய்கள் ஏற்படும். அம்மை நோய் கண்டவர்களுக்கு செந்தாழம்பூ சிறந்த மருந்து. இந்த பூக்களின் மடல்களை இடித்து நீரில்போட்டு நன்றாக சுண்டும்படி காய்ச்ச வேண்டும். ஆறியபின்னர் காலை,மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர நோய் கட்டுப்படும்.

அக்கி நோய் உஷ்ணத்தினால் ஏற்படுவது. இதற்கு வெண்தாமரைப்பூவை கஷாயமாக போட்டு இருவேளைக்கு ஒரு ஸ்பூன் சாப்பிட உஷ்ணம் நீங்கும். பசலைக்கீரையை அரைத்து பசும் வெண்ணையில் குழைத்து அக்கியின் மேல் தடவி வர குணமாகும்.

வில்வ இலை மருந்து

உடலிலும், தலையிலும் ஏற்படும் கட்டிகளை குணப்படுத்த சீதாப்பழமர இலையையும், உப்பையும் சேர்த்து அரைத்து கட்டிமீது வைத்த கட்டவேண்டும். கட்டிகளின் மேல் எருக்கம்பாலை தடவிவர அவை விரைவில் பழுத்து உடைந்துவிடும். கண் எரிச்சலை போக்க வில்வம் பழம் சிறந்த மருந்து. வில்வம் பழத்தை நெருப்பில் இட்டு சுட்டபின், அதனை உடைத்து அதனுள் இருக்கும் விழுதை தலையில் தேய்த்துக்குளித்தால் எரிச்சல் நீங்கும்.

தண்ணீர் தண்ணீர்

கோடையில் தண்ணீர் மூலமாக நோய்கள் விரைவில் பரவும் என்பதால் எப்போதும் கையுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்வதே பாதுகாப்பானது. சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். மிக முக்கியமாய் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் பாட்டில் குளிர்சாதனங்கள், மற்றும் தற்போது புற்றீசலாய் கிளம்பியிருக்கும் “எனர்ஜி டிரிங்" சமாச்சாரங்கள்.

கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் காத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வெறும் தண்ணீர் இந்த பணியைச் செய்து விட முடியாது. காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது மிகவும் சிறந்தது. அதிகமாய் வேகவைத்தோ, பொரித்தோ உண்பதில் எந்த விதமான பயன்களும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

உஷ்ணம் தணியும்

உடல் உஷ்ணத்தில் அவதிப்படுகிறவர்கள் உணவில் வெந்தயத்தை அதிகம் சேர்த்தக்கொள்ளலாம். மணல்தக்காளி கீரை, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொண்டாலும் உஷ்ணம் தணியும். திராட்சைப்பழத்திற்கு உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு. எனவே குழந்தைகளுக்கு திராட்சை கொடுத்தால் அது உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கி மலச்சிக்கலையும் போக்கும்.

தர்பூசணி, வெள்ளரிக்காய்

உடலின் வெப்பம் வெளியேற வேண்டியதும், உடல் குளிர வேண்டியதும் கோடை காலத்தின் தேவைகளில் ஒன்று. அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்ணும் கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுப் பொருட்கள் உதவும். குறிப்பாக வேக வைத்த உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்டா ரொட்டி, அரிசி இவற்றை அதிகம் உண்ணலாம். வெங்காயம் நிறைய சாப்பிடுங்கள். வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் வெப்ப அரிப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்க வெங்காயத்திலுள்ள குவர்சடின் எனும் வேதியல் பொருள் உதவும்.
தர்பூசணி சாப்பிடுங்கள். தர்பூசணியில் 90 விழுக்காடு தண்ணீரே இருப்பதால், உடலின் தண்ணீர் தேவைக்கு சிறந்தது தர்பூசணி. தர்பூசணியை விட அதிக தண்ணீர் சத்துள்ள வெள்ளரிக்காயை உட்கொள்ளுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் ஏற்றது.

English summary

Summer Safety Tips for Kids | அனல் வரப்போகுது நிறைய தண்ணீர் குடிங்க!

Keep your kids safe and healthy this summer season by learning about sun safety, fireworks, water safety, and avoiding insect bites.
Story first published: Thursday, February 9, 2012, 18:15 [IST]
Desktop Bottom Promotion