For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கும் சமைக்க கத்துக்கொடுங்க!

By Mayura Akilan
|

How To Manage Your Kids In The Kitchen
குழந்தைகள் சமையல் கற்றுக்கொள்ள ஆசைப்படுவது இயல்பு. அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் சமையல் கற்றுத்தரவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். பதின் பருவத்தில் இருந்தே அவர்களுக்கு சமையலறை பாடங்களையும் கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களாகவே சத்தான உணவுகளை சமைக்க தெரிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

சமையலறையில் வரவேற்பு

ஒரு சில குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனாலும் அவர்களுக்கு சமையலறையில் என்னென்ன இருக்கிறது என்று கூட தெரியாது. உங்களுடைய குழந்தையும் அவ்வாறு வளரவேண்டாம். அவர்களுக்கு சமைக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். சமையலறைக்கு வந்து கற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றனரா அவர்களுக்கு வரவேற்பு கொடுங்கள்.

அடிப்படை பாடங்கள்

முதலில் குழந்தைகளுக்கு சமையலறையின் அடிப்படை பாடங்களை கற்றுக்கொடுங்கள். காய்கறிகளை கழுவுதல். பாதுகாப்பாக வெட்டுதல் முட்டையை உடைத்து நன்றாக கலக்குதல் போன்றவைகளை சொல்லித்தரலாம். கூர்மையான பொருட்களை கவனமாக கையாள கற்றுக்கொடுக்க வேண்டும்.

உதவி வேலைகள்

சமையலறையில் உதவிகரமான வேலைகளை செய்ய அவர்களை வைத்துக்கொள்ளுங்கள். சமைப்பதற்கு என்ன பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்பதை அவர்கள் கற்றுக்கொள்ள உதவும்.

சமையல் குறிப்புகள்

சுவையான சமையல் குறிப்புகளை அவர்களுக்கு கற்றுக்கொடுங்க இதனால் அவர்களுக்கு சமைக்கும் ஆர்வம் அதிகரிக்கும். சமையல் குறிப்புகளை எழுதிவைத்துக் கொள்ள சொல்லுங்கள். அப்பொழுதுதான் அவசரத்தில் மறந்து போனாலும் நினைவு படுத்திக்கொள்ள உதவும்.

பாதுகாப்பும் சுகாதாரமும்

சமையலறையில் முக்கியமானது பாதுகாப்பும் சுகாதாரமும்தான். சமைக்கப்பயன்படுத்தும் பொருட்களை நன்றாக கழுவி சுத்தமாக பயன்படுத்தவேண்டும் என்று கற்றுக்கொடுங்கள். அதேபோல் கத்தி, கேஸ், மின்சார அடுப்புகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவற்றை நன்றாக கற்றுக்கொண்டாலே போதும் உங்கள் குழந்தைகளைப் பற்றிய பயம் வேண்டாம். அவர்கள் கிச்சன் கிங், குயின் ஆகிவிடுவார்கள். இன்றைய தலைமுறையினருக்கு படிப்போடு சமையல் பாடமும் அவசியம்தானே என்கின்றனர் நிபுணர்கள்.

English summary

How To Manage Your Kids In The Kitchen | குழந்தைகளுக்கும் சமைக்க கத்துக்கொடுங்க!

It is important to teach your children the importance of using the kitchen and cooking, it helps them to understand the value of food and the effort that goes into making a good meal. Teaching your child cooking will also give you an opportunity to explain what a healthy diet consists of and of the issues that crop up with excess intake of junk food.
Story first published: Thursday, April 5, 2012, 11:15 [IST]
Desktop Bottom Promotion