Latest Updates
-
அக்டோபர் 12 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சினைகள் விடாமல் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navratri 2026: யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரங்க இவங்க தான்! -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. -
குரு அதிசார பெயர்ச்சி பலன் 2026 - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் என்ன? - ஜோதிடர் கணிப்பு! -
புரட்டாசி ஸ்பெஷல் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது? -
அக்டோபர் 19-ல் சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. -
கல்யாண வீட்டு பூரி மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
செல்லங்களுக்கு சளி பிடிச்சிருக்கா? வீட்ல மருந்திருக்கு!

வைட்டமின் சி சத்து குறைவாக இருப்பவர்களுக்கு சளித் தொந்தரவு அதிகம் இருக்கும். ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் கொடுத்தால் சளி நீங்கும். அதேபோல் மிளகு சேர்த்த சிக்கன் சூப் சளித் தொந்தரவை கட்டுப்படுத்தும். சிக்கனுடன் பூண்டு, மிளகு சேர்த்து வறுவல் செய்து கொடுக்கலாம். சளித்தொந்தரவு நீங்குவதோடு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சளித்தொந்தரவினை நீக்குவதில் வெள்ளைப்பூண்டு சிறந்த மருந்துப்பொருளாக செயல்படுகிறது. வெள்ளைப் பூண்டின் சில பற்களை பாலில் போட்டு வேகவைக்க வேண்டும். பின்னர், பாலில் மஞ்சள் தூள் சேர்த்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்களுக்கு இது போன்று கொடுத்துவர சளித்தொந்தரவு நீங்கிவிடும். இதேபோல் பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து உணவோடு கலந்து கொடுத்தாலும் சளித்தொந்தரவு நீங்கிவிடும்.
சளி பிடித்த குழந்தைகளுக்கு இஞ்சி ரசம் வைத்துக் கொடுக்கலாம். ரசப் பொடியில் மிளகு, சீரகம், துவரம் பருப்பு, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்துடன் ஒரு துண்டு இஞ்சியையும் வைத்து அரைத்துப்போட்டு ரசம் வைத்துக் சாப்பிட்டால் சளி அகலும். பிரசவித்த தாய்மார்களுக்கும் இஞ்சி ரசம் வைத்து சாப்பிடக்கொடுக்கலாம் மிகவும் நல்லது.



Click it and Unblock the Notifications
