For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறந்த அப்பாக்கள் கொண்டுள்ள 12 குணங்கள்

|

"ஒரு தந்தையின் தரம் அவர் தனக்காக மட்டுமல்ல, அவருடைய குடும்பத்துக்காகவும் நிர்ணயிக்கும் குறிக்கோள்கள், கனவுகள் மற்றும் அபிலாஷைகளில் காணப்படுகிறது." - ரீட் மார்க்கம்

தந்தையர் தினத்தில், உலகின் பெரும்பகுதி மக்கள் நல்ல பிதாக்களின் வேலையைப் பாராட்ட நேரம் எடுதுத்துக்கொள்கிறார்கள். அவர் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் எல்லா வித்தியாசங்களையும் செய்கிறார். அவர் வலிமை, ஆதரவு மற்றும் ஒழுக்கத்தின் தூண். அவரது பணி முடிவற்றது மற்றும் பெரும்பாலும், நன்றி எதிர்பாராதது. ஆனால் இறுதியில், அவர் சிறப்பாக வளர்த்த குழந்தையின் செயல்பாடுகளில், நடத்தையில் அது பிரதிபலிக்கிறது.

Qualities

உங்கள் சொந்த அப்பா மீதான உங்கள் அபிமானத்தை நீங்கள் காட்டும் வேளையில் , ஒரு சிறந்த தந்தையாக இருப்பதற்கு என்ன தகுதிகள் தேவையாக இருக்கிறது என்று பார்க்க நேரம் ஒதுக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒழுக்கமானவர்

ஒழுக்கமானவர்

ஒரு நல்ல தந்தை தனது குழந்தைகளை நேசிக்கிறார், ஆனால் அவர் குழந்தைகளை மோசமான நிகழ்வுகளிலிருந்து தள்ளியிருக்க விடமாட்டார். அவர் தனது குழந்தைகளின் தவறான செயல்களை கடுமையாக மறுக்கிறார் மற்றும் ஒரு விஷயத்தை நிரூபிக்க கடுமையான அன்பைப் பயன்படுத்துகிறார். அவர் இதை கைமுட்டிகளால் இல்லாமல் தனது வார்த்தைகளின் சக்தியால் செய்கிறார். வீட்டைச் சுற்றி உதவி செய்வது அல்லது பள்ளியில் சிறப்பாக செயல்படுவது போன்ற செயல்களுக்காக அவர் தனது குழந்தைகளுக்கு வெகுமதி அளிக்க மாட்டார்.

MOST READ: குருவின் ராஜயோகம் உங்க ராசிக்கு இருக்கா?... தெரிஞ்சிக்கங்க...

தவறு செய்ய அனுமதிக்கிறார்

தவறு செய்ய அனுமதிக்கிறார்

ஒரு நல்ல தந்தை தனது பிள்ளைகள் மனிதர்கள் மற்றும் தவறு செய்வது என்பது அவர்கள் வளர்ச்சியின் ஒரு பகுதி என்பதை உணர்கிறார். பொறுப்பற்ற முறையில் பணத்தை செலவிடுவது, சிறிய கார் விபத்துக்களில் சிக்குவது, முதல் முறையாக குடிப்பது மற்றும் அதனால் நோய்வாய்ப்படுவது, கேள்விக்குரிய நபர்களுடன் டேட்டிங் செல்வது போன்றவற்றை ஒரு நல்ல தந்தை அங்கீகரிக்கிறார். இருப்பினும், மீண்டும் மீண்டும் பொறுப்பற்ற தன்மையாகச் செயல்படுவது பொறுத்துக்கொள்ளப்படாது என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார்.

திறந்த மனதுடையவர்

திறந்த மனதுடையவர்

ஒரு நல்ல தந்தையானவர் நேரம் , மக்கள் மற்றும் அவர்களின் சுவை காலத்திற்கேற்ப மாறுகிறது என்பதை புரிந்துகொள்கிறார். அதனால் அவர் தனது குழந்தைகளை கடந்த காலத்தில் சிக்கிக்கொள்ளாமல் காலங்களுடன் நகர அனுமதிக்கிறார்.

விஷயங்களை பாராட்ட கற்றுக்கொடுக்கிறார்:

விஷயங்களை பாராட்ட கற்றுக்கொடுக்கிறார்:

ஒரு நல்ல தந்தை ஒருபோதும் தன் பிள்ளைகளுக்கு தன் மூலம் கிடைக்கும் அனைத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. அவர்களுக்கு கிடைக்கும் உணவு முதல் அவர் செலுத்தும் நல்ல கல்வி வரை, ஒரு நல்ல தந்தை தனது குழந்தைகளுக்கு அவர்கள் பெரும் எல்லாவற்றின் மதிப்பையும் அதன் பின்னால் செய்யப்பட்ட உழைப்பையும் காண்பிப்பார். தனது முதல் காரின் முதலீட்டில் ஒரு பகுதியை செலுத்த உதவ ஒரு வேலையைப் பெற அவர் தனது குழந்தையை கேட்பார், மேலும் அதன் வழியே ஒரு நல்ல கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்குவார். அவர் தனது குழந்தைகள் தன்னை ஒரு ஏடிஎம் போல நடத்த என்றும் அனுமதிக்க மாட்டார்.

ஏற்றுக்கொள்கிறார்:

ஏற்றுக்கொள்கிறார்:

எல்லோரும் வித்தியாசமாக இருக்கிறார்கள், ஒரு தந்தை இதை நன்கு அறிவார். அவர் செய்யும் அதே மாதிரியான வாழ்க்கையை தனது குழந்தைகள் வாழ்வார்கள் என்றும், அதே மாதிரியான வேலைகளைச் செய்வார் என்றும் அவர் எதிர்பார்க்க மாட்டார். அவர்கள் குடும்பத்தினருக்கோ அல்லது வேறு யாருக்கோ தனது குழந்தை தீங்கு விளைவிக்காதவரை, அவர்களின் மதிப்புகள் மற்றும் கருத்துக்களை அவர் மதிக்கிறார்.

அவர் தனது குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிடுகிறார்:

அவர் தனது குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிடுகிறார்:

விளையாட்டுகள், திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வது, முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளில் கலந்துகொள்வது என தனது குழந்தைகளுடன் எப்படி வேடிக்கையாக இருப்பது என்று ஒரு சிறந்த தந்தைக்குத் தெரியும்.அவர் தனது குழந்தைகள் பேசுவதை கேட்பதற்கும் அவர்களுடன் நல்ல, எளிதான அரட்டையடிக்கவும் நேரம் எடுத்துக்கொள்கிறார். தேவைப்பட்டால், ஒவ்வொரு இரவும் அவர்களின் வீட்டுப்பாடங்களுக்கு உதவ அவர் நேரம் ஒதுக்குகிறார்.

MOST READ: உலக மனநல தினம் 2019: மனநல பாதிப்புக்குக் காரணமான கிரகங்கள் - பரிகாரங்கள்

வழிநடத்துகிறார்:

வழிநடத்துகிறார்:

ஒரு நல்ல தந்தை "நான் சொல்வது போல் செய்யுங்கள், நான் செய்வது போல் அல்ல" என்று சொல்பவர்களின் குழுவில் சேர்வதில்லை. தனது குழந்தைகள் செய்யக் கூடாது என அவர் விரும்பினால் புகைபிடிக்க மாட்டார், நிச்சயமாக அதிகமாக குடிக்க மாட்டார். ஒரே நேரத்தில் உறுதியான ஆனால் நியாயமானவராக இருப்பதன் மூலம் ஒரு குடும்ப உறுப்பினருடனும் மற்றவர்களுடனும் மோதலைச் சமாளிக்க அவர் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். ஒரு நல்ல தந்தை பாசத்தின் முக்கியத்துவத்தையும் தங்கள் தாயின் மீதுள்ள அன்பை அவர்களுக்கு முன்னால் நிரூபிப்பதன் மூலம் விளக்குகிறார். அவர் அவர்கள் முன்னிலையில் அவளுடன் சண்டையிட மாட்டார். மொத்தத்தில், அவர் தனது பிள்ளைகள் பின்பற்ற விரும்பும் மதிப்புகளின்படி வாழ்கிறார்.

ஆதரவானவர் மற்றும் விசுவாசமானவர்:

ஆதரவானவர் மற்றும் விசுவாசமானவர்:

அவர் ஒரு கால்பந்து வெறியராக இருக்கலாம் என்றாலும், அவரது மகன் அந்த விளையாட்டின் மீதான தனது அன்பைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால், அவர் அதை ஏற்றுக்கொள்கிறார். அவர் தனது Alma matter-க்கு விசுவாசமாக இருக்கக்கூடும், மேலும் தனது குழந்தை தனது பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும் என்ற கனவு காணலாம். இருப்பினும் அவரது மகள் வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அவர் அவளது முடிவை ஆதரிப்பார். விஷயங்கள் தவறாக நடக்கும்போது எப்பொழுதும் தனது குழந்தைகளை காத்திடும் அவர் ஒரு பாதுகாப்பு வலையாகும்.

சவால் விடுகிறார்

சவால் விடுகிறார்

ஒரு தந்தை தனது பிள்ளைகள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார், மேலும் அவர்களுக்கு வளர உதவும் சவால்களை அவர்களுக்கு அளிக்கிறார். இதன் பொருள் பின்னடைவுகளை எதிர்கொள்வதற்கும், மோதல்களைத் தாங்களே தீர்ப்பதற்கும் அவர்களுக்கு சிறிது சுதந்திரம் அளிப்பதாகும்.

குழந்தைகளுக்கு வாழ்க்கை பாடம் கற்பிக்கிறார்:

குழந்தைகளுக்கு வாழ்க்கை பாடம் கற்பிக்கிறார்:

ஒரு நல்ல தந்தை, தனது குழந்தைகளை சமூகத்தின் நல்ல உறுப்பினர்களாக வடிவமைக்கிறார். அவர் குறிப்பாக சரியான ஆசாரம், நேர்மையாக இருப்பது மற்றும் அவர்களின் வார்த்தையை கடைப்பிடிப்பது, நன்றி செலுத்துவது போன்றவற்றை அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். தனது தந்தையின் கடமைகளுக்காக தனது சொந்த சுகங்களை தியாகம் செய்ய வேண்டுமென்று ஒரு சிறந்த தந்தைக்குத் தெரியும். உதாரணமாக, அவர் ஒரு கடினமான நாளிலிருந்து வீட்டிற்கு வந்து தனது குழந்தைகள் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால், அவர் சோர்வாக இருந்தாலும் நிலைமையை நிவர்த்தி செய்ய நேரம் ஒதுக்குவார்.

என்னவானாலும் பாதுகாக்கிறார்:

என்னவானாலும் பாதுகாக்கிறார்:

பாதுகாப்பு மற்றும் தேவைகளின் முக்கிய வழங்குநராக, ஒரு தந்தை தனது குடும்பத்திற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். அவர் அவர்களுக்கு வழங்குவதை தனது இரண்டாவது வேலையாக மேற்கொள்வார், மேலும் குடும்பத்திற்கு எந்தவித தீங்கு விளைவிக்கும் நிலையில்லாமல் இருக்க அவர் தனது சொந்த பாதுகாப்பை பணயம் வைப்பார். தனிப்பட்ட தியாகத்தின் முக்கியத்துவத்தை ஒரு தந்தை தனது குழந்தைகளில் இவ்வாறு உணர்த்துகிறார்.

MOST READ: பிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா?... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...

அவர் நிபந்தனையற்ற அன்பைக் காட்டுகிறார்:

அவர் நிபந்தனையற்ற அன்பைக் காட்டுகிறார்:

இது ஒரு நல்ல தந்தையின் மிகப் பெரிய குணம். அவர் தனது குழந்தைகளின் தவறுகளில் வருத்தப்பட்டாலும், அவர் எதிர்பார்த்ததை அவர்கள் அடையவில்லை என்று புலம்பினாலும், ஒரு தந்தை தனது குழந்தைகளை எப்பொழுதும் குறைவாக நேசிப்பதில்லை. எப்பொழுதும் போல முழு அன்பையே வெளிப்படுத்துகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: pregnancy
English summary

12 Qualities Great Fathers Have

much of the world takes the time to appreciate the work of good fathers. He makes all the difference in a child’s life. He’s a pillar of strength, support and discipline. His work is endless and, oftentimes, thankless. But in the end, it shows in the sound, well-adjusted children he raises.
Desktop Bottom Promotion