Latest Updates
-
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம்
எகிப்தியர்கள் பெண்ணின் பிறப்புறுப்பிற்குள் வெங்காயத்தை வைத்து செய்த சோதனை... எதற்கு தெரியுமா?
கடந்த காலத்தில் கர்ப்ப சோதனைகள் வீட்டில் இருந்தபடிதான் செய்யப்பட்டது. ஆனால் இப்போது இருப்பது போல் எளிதானதாக இல்லை. இந்த கடந்த கால கர்ப்ப பரிசோதனைகள் மிகவும் வினோதமானதாக இருந்தது.
கர்ப்பமாக இருப்பதும் மற்றும் தாய்மை அடைவதும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிக அழகான காலகட்டங்களில் ஒன்றாகும். இப்போதெல்லாம் கர்ப்பமாக இருப்பதை பெண்கள் அறிந்து கொள்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது. சொல்லப்போனால் மருத்துவமனைக்கே செல்லாமல் வீட்டில் இருந்தபடியே கர்ப்பத்தை எளிதில் உறுதிசெய்யும் முறைகள் வந்துவிட்டது.

கடந்த காலத்திலும் கர்ப்ப சோதனைகள் வீட்டில் இருந்தபடிதான் செய்யப்பட்டது. ஆனால் இப்போது இருப்பது போல் எளிதானதாக இல்லை. இந்த கடந்த கால கர்ப்ப பரிசோதனைகள் மிகவும் வினோதமானதாக இருந்தது. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை தீர்மானிக்க மக்கள் உண்மையில் இத்தகைய வித்தியாசமான முறைகளைப் பயன்படுத்தினர் என்பதை நம்புவது மிகவும் கடினம். இந்த பதிவில் கடந்த காலத்தில் இருந்த வினோதமான கர்ப்ப பரிசோதனை முறைகளை பார்க்கலாம்.

பண்டைய எகிப்து சோதனை
இந்த பண்டைய எகிப்திய கர்ப்ப பரிசோதனை முறை இன்று வித்தியாசமாகத் தெரிந்தாலும், இது இன்றைய சோதனை முறையுடன் ஓரளவிற்கு ஒத்திருக்கிறது. பெண்கள் இரண்டு பைகளை நிரப்ப வேண்டும், ஒன்றில் பார்லியும், மற்றொன்றில் கோதுமையையும் நிரப்ப வேண்டும், இந்த பைகளில் தினமும் அவர்கள் சிறுநீர் கழிக்க வேண்டும். இரண்டு பைகளும் விரைவில் முளைத்தால் அந்த பெண் ஆரோக்கியமாகவும், கர்ப்பமாகவும் இருக்கிறார்கள் என்று அர்த்தம். ஒருவேளை இந்த பைகள் முளைக்காவிட்டால் கர்ப்பமாக இல்லை என்று அர்த்தம். அதேபோல கோதுமை வேகமாக வளர்ந்தால் கருவில் இருப்பது ஆண் குழந்தை எனவும், பார்லி வேகமாக வளர்ந்தால் பெண் குழந்தை எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.

விலங்குகளுக்குள் சிறுநீரை செலுத்துவது
இப்போதெல்லாம் பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்று கண்டுபிடிக்க ஒரு பட்டையில் சிறுநீர் கழிக்க வேண்டும், ஆனால் 1900 களில் விஷயங்கள் வித்தியாசமாக இருந்தன. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஒரு கர்ப்ப பரிசோதனையானது ஒரு பெண்ணின் சிறுநீரை உயிருள்ள விலங்குக்குள் செலுத்தி என்ன நடக்கும் என்று பார்ப்பதாகும். ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் சிறுநீர், விலங்குகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. சிறுநீரை செலுத்தியபின் விலங்குகளின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அந்த பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்று உறுதிசெய்யப்பட்டது. எந்த மாற்றமும் இல்லை என்றால் அந்த பெண் கர்ப்பமில்லை என்று கூறப்பட்டது. பெரும்பாலும் இந்த சோதனை தவளை மீது செய்யப்பட்டது.

கிரேக்க வெங்காய முறை
பண்டைய கிரேக்கர்கள் மற்றும் எகிப்தியர்கள் இருவரும் கர்ப்பத்தை தீர்மானிக்க ஒரே முறையைப் பயன்படுத்தினர் இதற்கு அவர்கள் பயன்படுத்திய ஒரே பொருள் வெங்காயம் ஆகும். அவர்கள் பெண்ணின் யோனிக்குள் வெங்காயத்தை வைத்து இரவு முழுவதும் தூங்கவைத்து விடுவார்கள். மறுநாள் காலை எழும்போது அவர்களின் மூச்சில் வெங்காய வாசனை இருந்தால் அவர்கள் கர்ப்பமாக இல்லை, மாறாக வெங்காய வாசனை இல்லாமல் இருந்தால் அவர்கள் கர்ப்பமாக இருப்பது உறுதிசெய்யப்படும்.

மதுவில் சிறுநீரை கலப்பது
நடுத்தர காலங்களில் வாழ்ந்தவர்கள் இப்போது இருக்கும் அளவிற்கு விஞ்ஞானத்தை புரிந்து கொள்ளவில்லை. மருத்துவம் இன்னும் வலுவாக இல்லை மற்றும் சோதனைகள் விசித்திரமாக இருந்தன. ஒரு நபரின் ஆரோக்கியத்தை தீர்மானிக்க சிறுநீர் உதவுகிறது என்று அக்கால ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் நம்பினர், ஆனால் தற்போது நம்மிடம் உள்ள பகுப்பாய்வு அவர்களிடம் இல்லை. அவர்கள் சிறுநீரைப் பார்த்து சுகாதார நிலைகளை தீர்மானிப்பார்கள். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா என்பதைக் கண்டறிய ஒரு பொதுவான முறை, ஒரு பெண்ணின் சிறுநீரை சில சிவப்பு ஒயின் உடன் கலப்பது. ஒயினின் நிறம் மாறினால் அவர்கள் கர்ப்பமாக இருப்பது உறுதிசெய்யப்படும்.

சிறுநீர் சுவை சோதனை
இப்போதெல்லாம் நம் ஆரோக்கியத்தில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்று சொல்ல இரத்த பரிசோதனை செய்யப்படுகிறது, மேலும் நமக்கு ஏதேனும் மருத்துவ குறைபாடுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய சிறுநீர் பரிசோதனை செய்யப்படுகிறது. பெண்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யவும் சிறுநீர் சோதனை உதவுகிறது. நீண்ட காலமாக மருத்துவர்கள் சிறுநீரின் நிலையை சரிபார்த்து, ஒரு நபரின் உடல்நலம் பற்றி எல்லாவற்றையும் சொல்வார்கள். அவர்கள் சிறுநீரை ஒரு குடுவைக்குள் வைத்து கர்ப்பம் மற்றும் பிற பொது சுகாதார நிலைகளை பகுப்பாய்வு செய்வார்கள். பண்டைய காலங்களில் மருத்துவர்கள் பெண்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்ய சிறுநீரின் சுவையையும் சோதனை செய்தனர். உண்மைதான் சிறுநீரின் சுவையை வைத்தே பெண்கள் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்து விடலாம்.

படிக சர்க்கரை மீது சிறுநீர்
இந்த சோதனை வித்தியாசமானது என்றாலும் பாதிப்பை ஏற்படுத்தாத சோதனை ஆகும். இந்த சோதனையில் பெண்கள் படிக சர்க்கரையை எடுத்துக்கொண்டு காலை நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்ணின் ஹார்மோனில் உள்ள சிறுநீர் சர்க்கரையைத் தணிக்கும் என்றும் அது கரைந்து விடாது என்றும் அவர்கள் நம்பினர், இது உண்மையில் ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை நிரூபிக்கும். சர்க்கரை கரைந்தால் அந்தப் பெண் கர்ப்பமாக இல்லை.

டேன்டேலியன் கர்ப்ப பரிசோதனை
இந்த சோதனையில், ஒரு பெண் டேன்டேலியன் இலைகளை மட்டும் சேகரித்து, மறுநாள் காலையில் சிறுநீர் கழிக்க வேண்டும். இலைகள் பெரிய மாற்றங்களைக் காட்டவில்லை என்றால், அவள் கர்ப்பமாக இல்லை. இருப்பினும், இலைகளில் சிவப்பு கொப்புளங்கள் இருந்தால் அவர்கள் பெரும்பாலும் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

கண் சோதனை
16 ஆம் நூற்றாண்டில், ஜாக் கில்லெமியோ என்ற மருத்துவர் சிறுநீர் பரிசோதனையை பைத்தியம் என்று கருதினார். மேலும், ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா என்பதைக் கண்டறிய சிறந்த சோதனை இருப்பதாக அவர் நினைத்தார். ஒரு பெண் தன் கண்களைப் பார்த்து கர்ப்பமாக இருக்கிறாரா என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்று அவர் கூறினார். இரண்டாவது மாதத்தில், மருத்துவரின் கூற்றுப்படி, ஒரு பெண்ணின் கண்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். கண்கள் அவர்களின் எதிர்பார்ப்பை காட்டும், மேலும், கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் பார்வை மாறுகிறது, இதனால் அவர்கள் ஒரு குழந்தையை சுமக்கிறார்கள் என்று சொல்வது எளிது.



Click it and Unblock the Notifications