For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் லெமன் ஜூஸ் குடிக்கலாமா?... எவ்வளவு குடிக்கலாம்?

லெமன் சாற்றில் கர்ப்ப காலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த லெமன் ஜூஸ் கருவில் வளரும் குழந்தைக்கும் தாயுக்கும் மிகவும் நல்லது.

|

கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமான காலகட்டம் ஆகும். இந்த காலகட்டத்தில் கருவில் வளரும் குழந்தையை கவனமாக கவனித்து கொள்ள வேண்டும்.

Lemonade health benefits in tamil

இந்த மாதிரியான கால கட்டத்தில் பெண்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லெமன் ஜூஸ்

லெமன் ஜூஸ்

லெமன் சாற்றில் கர்ப்ப காலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த லெமன் ஜூஸ் கருவில் வளரும் குழந்தைக்கும் தாயுக்கும் மிகவும் நல்லது. கண்டிப்பாக கர்ப்ப காலத்தில் பழங்கள், உணவுகள், ஜூஸ்கள், காய்கறிகள் என்று சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது அவசியம். அப்படிப்பட்ட உணவுகளில் லெமன் ஜூஸ் என்பது கர்ப்ப கால பெண்களுக்கு மிகவும் சிறந்தது அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் காண உள்ளோம்.

மலச்சிக்கல் மற்றும் சீரண சக்தி

மலச்சிக்கல் மற்றும் சீரண சக்தி

லெமன் வாட்டர் கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலை போதிய நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையான மலச்சிக்கல், சீரணமின்மை போன்றவற்றை போக்குகிறது.

நச்சுக்களை வெளியேற்றுதல்

நச்சுக்களை வெளியேற்றுதல்

லெமன் ஜூஸில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது. இதனால் கர்ப்ப காலத்தில் தாய்மார்களை நோய் தொற்றுகள் தாக்காத வண்ணம் காக்கிறது.

குழந்தையின் வளர்ச்சி

குழந்தையின் வளர்ச்சி

லெமன் வாட்டரில் பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது.

நீர் வீக்கம்

நீர் வீக்கம்

கர்ப்ப காலத்தில் பாதங்களில் ஏற்படும் நீர் தேக்கத்தை தடுக்கிறது. லெமனில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நீர் தேக்கத்தை குறைக்கிறது.

காலை உடல் உபாதைகள்

காலை உடல் உபாதைகள்

பொதுவாக கர்ப்ப கால பெண்கள் காலையில் எழுந்ததும் குமட்டல், வாந்தி போன்ற பிரச்சினைகளை சந்திப்பார்கள். இதற்கு லெமனிலில் உள்ள விட்டமின் சி மற்றும் பொட்டாசியம் இந்த உடல் உபாதைகளை தள்ளி வைக்கிறது. எனவே ஏகப்பட்ட நன்மைகளை அள்ளித் தருகின்ற லெமன் ஜூஸ் உங்களுக்கும் உங்கள் சேயுக்கும் நன்மை அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lemonade during pregnancy: What are the benefits of drinking lemonade during pregnancy

Lemonade is a refreshing drink that can soothe morning sickness during pregnancy and provide lots of vitamin C, but drinking too much sugary lemonade could cause unnecessary weight gain.
Story first published: Monday, July 16, 2018, 15:15 [IST]
Desktop Bottom Promotion