For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவத்திற்கு முந்தைய கவனத்திற்கான அவசியம் என்ன?

By Maha
|

"குழந்தை பிறப்பிற்கு முந்தைய கவனம்" என்பது கருவுற்றிருக்கும் தாய்க்கும், பிறக்கப் போகும் குழந்தைக்கும் கர்ப்ப காலத்தில் வழங்கப்படும் சுகாதாரம், கல்வி, ஆலோசனை மற்றும் தேவையான ஆதாரங்களை குறிக்கின்றது. குழந்தை பிறப்பிற்கு முந்தைய கவனமானது தாய் மற்றும் குழந்தையின் உடல் நலத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே கர்ப்பம் அடைந்தவுடன், உடல் நல ஆலோசகருடன் உடனடியாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து, குழந்தை பிறப்பிற்கு முந்தைய கவனத்திற்கான ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.

ஏனெனில் இவ்வாறு ஆரம்பத்திலேயே சரியான முறையில் கவனமாக இருந்து வந்தால், கர்ப்பம் தொடர்பான சிக்கல்களை எளிதில் கண்டுபிடித்து, அதற்கான தீர்வை கண்டுபிடிக்க முடியும்.

What Is Prenatal Care?
* குழந்தை பிறப்பிற்கு முந்தைய கவனத்தின் நோக்கம், தாய் மற்றும் சேயின் வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை கண்காணிப்பதாகும். மேலும் முக்கிய அம்சங்களான பிறப்பிற்கு முந்திய ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வது, முக்கியமாக ஃபோலிக் அமிலம் - 400 மி.கி தினமும் உட்கொள்வது போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால், குழந்தை பிறந்த பின் ஏற்படும் மூளை மற்றும் முதுகு தண்டுவட குறைபாடுகள் வராமல் தடுக்கும். மேலும் குழந்தை பிறப்பிற்கு முந்தைய கவனத்தின் மற்ற முக்கிய அம்சங்களில், குழந்தையின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய மருந்துகளை தவிர்ப்பது, எக்ஸ்ரே எடுப்பதைத் தவிர்ப்பது, மது மற்றும் புகைப்பிடிப்பதை தவிர்ப்பது முதலானவையும் அடங்கும்.

* கர்ப்பத்திற்கு முந்தைய வருகைக்கான அட்டவணையை, மருத்துவரிடம் பெற்றுக் கொண்டு, அதற்கேற்றாற் போல் மருத்துவரை அணுக வேண்டும். அதற்கு நிபுணர்களின் பரிந்துரைகள் பின்வருமாறு : கர்ப்பம் தரித்து 28 வாரம் வரை, மாதம் ஒரு முறை வருதல் வேண்டும். 28ல் இருந்து 36வது வாரம் வரை மாதத்திற்கு இரண்டு முறை வருகை தர வேண்டும். 36 வது வாரம் முதல் குழந்தை பிறக்கும் வரை வாரந்தோறும் வருதல் வேண்டும். ஆபத்தை எதிர் நோக்கும் கர்ப்பிணிகளான 35 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயுடையோர், நாள்பட்ட வியாதியுடையோர் முதலானோர், தங்களுடைய பிரசவத்திற்கு முந்தைய மருத்துவர் ஆலோசனைக்கு அடிக்கடி வந்து செல்ல வேண்டும்.

* பிரசவத்திற்கு முன்பே தாய் தனது உடல் நலனை பேணிக்காப்பது அவசியம். அதற்கு கருத்தரிப்பதற்கு முன்பாக மூன்று மாதங்களுக்கு முன்னரே ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் போடுவது என்று செயல்பட வேண்டும். மேலும் அவ்வப்போது உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவுகளை உண்பது போன்றவை இன்றியமையாதவை.

* இவ்வாறு ஆரம்பத்திலேயே உடல் நல ஆலோசகரை பார்த்து, பேசினால், பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து, ஆரோக்கியமான முறையில் குழந்தையை பெற்றெடுத்து, ஒரு நல்ல ஆரோக்கியமான தாயாக இருக்க முடியும்.

English summary

What Is Prenatal Care? | பிரசவத்திற்கு முந்தைய கவனத்திற்கான அவசியம் என்ன?

Prenatal care is the health care, education, counseling and resources provided for a mother and her unborn child during pregnancy. Prenatal care is critical to the health and safety of mother and baby.
Story first published: Thursday, February 7, 2013, 17:42 [IST]
Desktop Bottom Promotion