Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம் -
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்க எல்லோரும் ஆசைப்படுவார்களாம் - நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா? -
எச்சரிக்கை! இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா முகப்பரு அதிகமா வந்துடும்..
பெற்றோர்களே! உங்க குழந்தை கெட்ட வார்த்தை பேசுறாங்களா? அப்ப இந்த விஷயங்கள பண்ணுங்க..இனிமே பேச மாட்டாங்க!
குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நடத்தைகளை பெற்றோர்கள் அன்றாடம் கண்காணிக்க வேண்டும். ஏனெனில், இவை குழந்தைகளின் எதிர்காலத்தோடும் அவர்களின் நல்ல குணம் மற்றும் நடத்தைகளோடும் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. தொலைக்காட்சியிலோ அல்லது வீட்டிலோ நீங்கள் பேசும் விஷயங்கள், நடந்துகொள்ளும் விதம் என அனைத்தையும் உங்கள் குழந்தைகள் உற்றுநோக்குகிறார்கள்.
பெற்றோர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் இருந்துதான் பெரும்பலான விஷயங்களை குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். உங்கள் குழந்தை பள்ளி, வீடு, விளையாட்டு மைதானம் அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமானலும் கெட்ட வார்த்தைகளை கற்றுக்கொண்டிருக்க முடியும்.

இந்த வார்த்தைகளைக் கற்றுக்கொள்வதிலிருந்து நீங்கள் அவர்களைத் தடுக்க முடியாது என்றாலும், "கெட்ட வார்த்தைகள்" என்ற கருத்தை ஆரம்பத்திலேயே கற்பிப்பது உங்கள் குழந்தை இந்த சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதைப் புரிந்துகொள்ள உதவும். பெற்றோர்களாகிய நீங்கள் அதை எவ்வாறு செய்யலாம் என்பதற்கான குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
நிதானமாக கையாளுங்கள்
உங்கள் குழந்தை முதன்முதலில் ஒரு மோசமான வார்த்தை அல்லது ஏதேனும் புண்படுத்தும் வார்த்தையை பேசுவதை நீங்கள் கேட்டால், அதிர்ச்சியாகி ஆத்திரமடையலாம். இருப்பினும், இந்த நிகழ்விற்கு அதிக கவனம் செலுத்துவது உங்கள் குழந்தையை குழப்பமடையச் செய்யலாம் அல்லது பயமுறுத்தலாம்.
இந்த செயலை செய்யக்கூடாது என்பதைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, சில குழந்தைகள் எதிர்காலத்தில் கவனத்தை ஈர்க்க இந்த வார்த்தைகளை மனதிற்குள்ளே வைத்திருக்கலாம். எனவே, உங்கள் குழந்தை கெட்ட வார்த்தைகளை பேசும்போது, அதை நிதானமாக கையாள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதன் பொருள் என்ன என்று அவர்களுக்குத் தெரியுமா?
பெரியவர்கள் பேசும் மோசமான அல்லது தவறான வார்த்தைகளை கேட்டு, குழந்தைகளும் அவ்வாறே பேசலாம். பெரும்பாலான சமயங்களில் குழந்தைகளுக்கு தாங்கள் பேசிய இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாது. மேலும் வார்த்தைகளை புரிந்து கொள்ள அவர்களுக்கு வயது பக்குவமும் தேவைப்படும்.
உங்கள் குழந்தையின் வயதின் அடிப்படையில், அந்த வார்த்தையின் அர்த்தம் என்னவென்று தெரியுமா? என்று அவர்களிடம் கேளுங்கள். அது ஏன் கெட்ட வார்த்தை என்று கூறுகிறோம் என்பதை பற்றி உங்கள் குழந்தைக்கு சொல்லி புரிய வையுங்கள். இதன் பின்னர், அவர்கள் மோசமான கெட்ட வார்த்தைகளை பேச மாட்டார்கள்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தையை விளக்குங்கள்
உங்கள் பிள்ளை வேறொருவரிடம் மோசமான அல்லது கெட்ட வார்த்தையைச் சொன்னால், அவர்களுக்கு அர்த்தம் தெரிந்தாலும் இல்லாவிட்டாலும், இது தவறானது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். உங்கள் குழந்தையின் இந்த மோசமான நடத்தையை ஒருபோதும் நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
குழந்தைகள் அவர்களின் கோபத்தை வெளிப்படுத்த கெட்ட வார்த்தைகளை பேசினால், அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த இன்னும் பொருத்தமான வழிகளைக் கண்டறிய அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். வன்முறை அல்லது தவறான வார்த்தைகளை பேச ஒருபோதும் நீங்கள் ஊக்கப்படுத்தக் கூடாது.
மன்னிப்பு கேட்க கற்றுக் கொடுங்கள்
சிறு வயதிலேயே குழந்தைகள் தங்கள் எல்லா உணர்ச்சிகளையும் சரியாக வெளிப்படுத்த முடியாது. அவர்கள் தவறுகளைச் செய்து, அதன் மூலமாக விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். உங்கள் குழந்தையின் குணத்தையும் ஆளுமையையும் கண்டுபிடிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.
இருப்பினும், உங்கள் குழந்தை தற்செயலாக கெட்ட வார்த்தை பேசும்போது, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்தால், அது அவர்கள் மேலும் பேச ஊக்குவிக்கும். உங்கள் குழந்தை வேறு யாரையாவது பெரியவர் அல்லது சிரியவர்களை என யாராக இருந்தாலும், தவறாக பேசி இருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கேட்கக் கூறுங்கள்.
நல்ல நடத்தைகளை கற்றுக்கொடுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நடத்தைகளை கற்றுக்கொடுங்கள். பெரும்பாலும் எல்லா குழந்தைகளும் பெற்றோர்களிடம் இருந்துதான், பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். அந்த வகையில், நீங்கள் மற்றவர்களிடமோ அல்லது உங்கள் குழந்தைகளிடமோ தவறான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், உங்கள் குழந்தை உங்களிடமிருந்து இந்த வார்த்தைகளை கற்றுக்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications

