Latest Updates
-
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...!
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும்...
குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் உணவு தாய்ப்பால் தான். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம். அதுவும் குறைந்தபட்சம் ஓர் ஆண்டு தாய்ப்பால் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் பெண்களும் பலரும் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்ப்பதையே விரும்புகிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
தாய்ப்பால் கொடுப்பதை பெண்கள் விரும்பாததற்கு, அதிலுள்ள சில பல சிக்கல்கள் கூட காரணமாக இருக்கலாம். பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதை முன்கூட்டியே நிறுத்துவதற்கான பொதுவான காரணங்கள்: பாலூட்டுதல் அல்லது குழந்தையை பிடிப்பதில் பயம், குழந்தையின் எடை பற்றிய கவலைகள், குடும்பம், அலுவலக வேலை அல்லது சுகாதாரப் பாதுகாப்பு இல்லாதது போன்றவையும் காரணங்களாக இருக்கலாம்.

தாய்ப்பால் ஊட்டும் பெண்களில் 50 சதவிகிதத்தினர், 6 மாதங்களில் தாய்ப்பால் கொடுப்பதை விட்டுவிடுகின்றனர் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், 3ல் ஒரு பங்கு தாய்மார்கள் மட்டுமே ஒரு வருடம் வரை தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அவற்றைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.
போதுமான பால் இல்லாதது
பால் கொடுக்கும் தாய்மார்களில் பலரும் தங்களுக்கு போதுமான பால் சுரப்பது கிடையாது என்று மருத்துவர்களிடம் சொல்வதாக கூறப்படுகிறது. ஆனால், அது உண்மை கிடையாது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்காதது தான் பால் உற்பத்தியைப் பாதிப்பதாகவும், அடிக்கடி பாலூட்டுவது ஹார்மோன், ப்ரோலாக்டின் மற்றும் ஆக்ஸிடாஸின் ஆகியவற்றை இயக்குவதன் மூலம் அதிக பால் உற்பத்தி செய்ய மார்பகங்கள் தூண்டுகிறது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சில சமயங்களில், போதுமான அளவு பால் இருந்தாலும், குழந்தைக்கு பாலை கொடுப்பதில் சிரமம் இருக்கும். இது மோசமான மார்பக காம்புகளில் இருக்கக்கூடிய அடைப்புகள் கூட காரணமாக இருக்கலாம். மேலும், குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் அல்லது குழந்தையின் சிறிய வாய் போன்ற பிரச்சனைகளும் காரணமாக அதிகமாக இருக்கலாம்.
மார்பக காம்பு புண்
தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கிய தாய்மார்களின் பொதுவான பிரச்சனை காம்புகளில் வரக்கூடிய புண்கள் தான். மார்பின் காம்பு பகுதியின் உணர்திறன் பொதுவாக 30 வினாடிகளுக்குப் பிறகு மறைந்துவிடும். அதுவே சில காயங்களால் காம்பு பகுதியில் வலி நீடித்து, மேற்கொண்டு பால் கொடுக்கும் போது மோசமாகிவிடும். குழந்தைக்கு சரியாக பால் குடிக்க தெரியாமல் இருப்பது அல்லது நீங்கள் சரியாக கொடுக்காமல் இருப்பது போன்ற காரணங்கள் காயம் உண்டாகக்கூடும்.
குழந்தையின் வாய் முழுவதும் காம்பு பகுதியில் பரவி பால் குடிக்க வேண்டும். அப்படி இல்லாமல் காம்பின் நுனி பகுதியை மட்டும் கடித்து குடிக்கும் போது அதிக காயம் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மார்பக காம்பின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை பராமரிப்பதற்கான மற்ற வழிகள் என்றால், அவை வறட்சி அடையாமல் பார்த்து கொள்வது மற்றும் கடுமையான சோப்புகளை தவிர்ப்பது.
தட்டையான மார்பக காம்புகள்
கர்ப்ப காலத்திலேயே தட்டையான மார்பக காம்புகளைக் கண்டறிவது, தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னதாகவே அவற்றைத் தயாரிக்க பெரிதும் உதவிடும். அதற்கு மார்பக காம்பை கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே பிடித்து உருட்டினால், அது வர உதவும். மேலும், காம்பை வெளிப்புறமாகத் தள்ள மார்பகத்தை விரல்களால் 'வி' அல்லது 'சி' வடிவத்தில் அழுத்துவது உதவிகரமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குழந்தையின் வாய் மிகவும் சிறிதாக இருப்பது
குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் அல்லது இயல்பாகவே வாய் மிகவும் சிறிதாக இருக்கும் குழந்தைகளுக்கு பால் குடிப்பது மிகவும் கடினமாக இருக்கும். இதனால், மார்பக காம்பின் நுனி பகுதியில் அதிகமாக கடித்து காயம் ஏற்படக்கூடும். இத்தகைய காயங்களைத் தவிர்க்க, மார்பக காம்பிற்கான ஷீல்டுகளை பயன்படுத்துவது மிகவும் உதவக்கூடும்.
மார்பக இறுக்கம்
பெரும்பாலானவர்கள் மார்பகம் தொங்குவதற்கு தாய்ப்பால் கொடுப்பது மட்டுமே காரணமாக கருதுகின்றனர். அது தவறு. தாய்ப்பாலூட்டுவது, மார்பகங்களை தொங்கவிடுவதில் முக்கிய பங்களிப்பாக இருக்காது. மரபியல், தசை அமைப்பு, எடை அதிகரிப்பு போன்றவையும் அதற்கு முக்கிய பங்கு காரணங்களாக இருக்கக்கூடும்.
மார்பகத்தின் வடிவத்தையும் அதன் உறுதியையும் பராமரிக்க உதவும் சில வழிகள் என்றால், சப்போர்ட்டிவ் ப்ரா அணிதல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், உட்காரும் போது சரியான தோரணையில் உட்காருதல், புகைப்பழக்கத்தைத் தவிர்த்தல் என அதற்கான தீர்வுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதிகமான பால் சுரப்பு
அளவிற்கு அதிகமாக பால் சுரந்து, மார்பகங்களில் பால் கட்டுவது என்பது பெண்களுக்கு மிகவும் வேதனையான ஒன்றாக இருக்கக்கூடும். அப்படி அதிகப்படியான பால் சுரக்கும் தாய்மார்களுக்கு, திடீரென பால் தானாக சுரக்கக்கூடும், இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் அல்லது இருமலும் ஏற்படலாம். மேலும், அப்படிப்பட்ட சூழலில் குழந்தைகளுக்கு கடைசியாக சுரக்கும் அதிக கலோரிகளைக் கொண்ட பால் கிடைக்காது.
பெரும்பாலான சூழலில் இந்த பிரச்சனை காலப்போக்கில் மறைந்துவிடும். பாலும் தேவைக்கேற்ப சமநிலையில் சுரக்கும். இதுமட்டுமின்றி, பாலூட்டுவதற்கு குழந்தையை நிமிர்ந்த நிலையில் வைத்திருப்பது மற்றும் பால் ஓட்டத்தை சீராக்க விரல்களைப் பயன்படுத்துவது மற்றும் இடைவேளை விட்டு பால் கொடுப்பது போன்றவை இந்த சிக்கலைச் சமாளிக்க உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
குறிப்பு
பாலூட்டும் தாய்மார்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகளைத் தவிர மற்ற சில சவால்களையும் எதிர்கொள்ள நேரிடலாம். அதே வேளையில், மகப்பேறு மருத்துவர், பாலூட்டுதல் ஆலோசகர் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும் போது எந்த பிரச்சனையையும் சமாளித்து குழந்தைக்கு எந்த தடங்களும் இல்லாமல் ஓராண்டு காலத்திற்கு பாலூட்ட முடியும்.
பிறந்த குழந்தைக்கான முழு நோயெதிர்ப்பு சக்தியும் தாய்ப்பாலில் இருந்து தான் கிடைக்கும் என்பதால் அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைக்கு தவறாமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications











