For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பரவும் இந்த மழைக்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

இந்த காலக்கட்டத்தில் பரவும் வைரஸ்களால் கர்ப்பிணி பெண்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைவதால் அவர்களிடையே ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.

|

மழைக்காலம் தொடங்கிவிட்டது. இந்த பருவகாலம் பெரும்பாலானோருக்கு பிடித்ததாக இருந்தாலும் இந்த காலகட்டத்தில் ஏற்படும் அசௌகரியங்கள் மிக அதிகம். மற்றவர்களை காட்டிலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மற்ற பருவக்காலங்களை விட இந்த காலக்கட்டத்தில் நோய்கள் பரவும் அபாயம் அதிகம்.

Important Pregnancy Care Tips During Monsoon

இந்த காலக்கட்டத்தில் பரவும் வைரஸ்களால் கர்ப்பிணி பெண்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைவதால் அவர்களிடையே ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் கடுமையான இரத்தப்போக்கு, குறைப்பிரசவம் போன்ற ஆபத்தான நிலைகளுக்கு வழிவகுக்கிறது. மழைக்காலத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க என்னென்ன செய்ய வேண்டுமென்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரேற்றம்

நீரேற்றம்

மழைக்காலத்தில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். வெப்பநிலையின் வீழ்ச்சி அதிக திரவங்களை குடிக்க உங்கள் விருப்பத்தை குறைக்கலாம், ஆனால் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ள போதுமான நீரேற்றத்தை பராமரிப்பது அவசியம். நீரிழப்பால் ஏற்படும் தலைவலி மற்றும் சோர்வை இதனைக் கொண்டு நீக்கலாம். கொதிக்கவைத்து ஆறவைக்கப்ட நீரை அதிகமாக குடிக்க வேண்டும். இதுதவிர, இளநீர், ஜூஸ், மோர் போன்ற நீர் பொருட்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

டயட்

டயட்

சுவையான உணவுக்காக கர்ப்ப காலத்தில் ஏங்குவது சாதாரணமானதுதான். ஆனால் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் நிறைய உள்ளது. பச்சை காய்கறிகள், அதிகளவு முட்டை மற்றும் மீன் உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. சாலையோர உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். கீரை மற்றும் முட்டைக்கோஸ் போன்ற இலை காய்கறிகள் நிறைய மாசுக்களை கொண்டிருக்கும். எனவே அவற்றை சமைப்பதற்கு முன் நன்கு கழுவ வேண்டும். ஆரோக்கியமாக இருக்க நார் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். எந்தவொரு உணவையும் சாப்பிடும் முன் அதன் சுகாதாரத்தை தெரிந்து கோலா வேண்டியது அவசியம்.

கொசு அச்சுறுத்தல்

கொசு அச்சுறுத்தல்

மலேரியா மற்றும் டெங்கு பரப்பும் கொசுக்களை இனப்பெருக்கம் செய்ய உதவுவதால் உங்கள் வீடுகளிலும் தோட்டத்திலும் தேங்கி நிற்கும் நீரைத் தவிர்க்கவும். கொசு அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்த கொசு வலைகள், விரட்டிகளை பயன்படுத்துங்கள். உங்கள் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் பெரும்பாலும் மூடியிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

MOST READ: எடையை வேகமாக குறைக்க வெறும் 5 நிமிடத்தில் நீங்களே செய்யக்கூடிய இந்த ஜூஸ்களில் ஒன்றை குடிக்கவும்...!

ஆடைகள்

ஆடைகள்

தளர்வான முழு கை பருத்தி ஆடைகள் கொசுக்களிடமிருந்து பாதுகாப்பை வழங்கும் மற்றும் ஈரப்பதத்தை வெல்ல உதவும். செயற்கை நூலிழைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை அசௌகரியம் மற்றும் தடிப்புகளை ஏற்படுத்தும்.

காலணிகள்

காலணிகள்

இனிமையான வானிலை உங்களை வெளியில் அழைக்கும். எனவே பாதுகாப்பாக இருக்க தட்டையான பாதணிகளை அணியவும். வழுக்கச்செய்யும் மற்றும் பாதத்தில் வலியை ஏற்படுத்தும் செருப்புகள் அணியாமல் இருப்பது நல்லது. ஹை ஹீல்ஸ் அணிவதை அறவே தவிர்க்க வேண்டும்.

சுகாதாரம்

சுகாதாரம்

கை சுகாதாரம் மற்றும் சுத்தமான குடிநீர் ஆகியவை ஹெபடைடிஸ் ஏ, ஈ மற்றும் டைபாய்டு போன்ற தண்ணீர் மூலம் வரும் நோய்களைத் தடுக்கிறது. வற்றில் சில கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆபத்தானவை. ஒரு நாளைக்கு பல முறை கைகளை கழுவுதல், ஒவ்வொரு உணவிற்கும் முன்பும், கழிவறைகளை பயன்படுத்திய பிறகு நீரைக் கொண்டு கைகளை சுத்தப்படுத்துவது போன்றவை சுகாதாரத்தை பராமரிக்கும்.

MOST READ: கல்லீரலில் இருக்கும் அதிக கொழுப்பை கரைத்து கல்லீரலை பாதுகாக்க இந்த ஜூஸை தினமும் குடிங்க போதும்...!

கிருமிகளை நீக்க குளியல்

கிருமிகளை நீக்க குளியல்

ஒரு நாளைக்கு ஒரு முறை, கிருமிநாசினிகள் கலந்து குளிப்பதை உறுதி செய்ய வேண்டும். இது நுண்ணுயிரிகள் மற்றும் நோய்த்தொற்றுகள் உங்கள் உடலில் நீண்ட நேரம் தங்குவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. சூடான நீரில் வேப்பிலைகளை போட்டு அதனுடன் சில துளிகள் கிருமி நாசினி கலந்து குடிப்பது உங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் உணரச்செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips for Pregnancy Care during Monsoon

Check out the important things need to know about pregnancy in monsoon.
Desktop Bottom Promotion