For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடனடியாக கருத்தரிக்க எந்த நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும்?

கருத்தரிப்பதற்காக எப்படி, எந்த நேரத்தில் உறவு கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் உங்களுக்காக விளக்குகிறோம். பெண்ணின் மாதவிடாய் சுழற்சி மற்றும் கருமுட்டை வலுப்பெற செய்ய வேண்டிய விஷயங்களின்

|

குழந்தை செல்வம் - எத்தனை செல்வங்கள் இருந்தாலும் அதற்கு ஈடு இல்லை. ஆகவே, அதற்காக தம்பதியர் பலர் ஏங்குகின்றனர். பெண்கள் தாய்மையடைவதில் சினை முட்டைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Will I Ovulate

சினைப் பையிலிருந்து சினை முட்டைகள் வெளிப்படும் நாள்களில் தாம்பத்ய உறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். ஆண்களின் விந்தணுக்கள் நான்கு நாள்கள் வரை உயிரோடு இருக்கும். ஆகவே, சினை முட்டை வெளிப்படும்போது, வெளிப்பட்ட உடன் தாம்பத்ய உறவு கொள்வது சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சினைமுட்டை எப்போது வெளிப்படும்?

சினைமுட்டை எப்போது வெளிப்படும்?

முறையான மாதவிடாய் சுழற்சியான 28 நாள்களை கொண்டிருக்கும் பெண்கள், மாதவிடாய் சுழற்சி காலகட்டத்தின் மத்தியில் சினை முட்டை வெளிப்படுவதாக எண்ணி, அதற்கேற்றாற்போல கருத்தரிப்பு முயற்சிகளை மேற்கொள்ளுகிறார்கள்.

சினை முட்டை வெளிப்படுவதில் பல்வேறு வகைகள் இருப்பதால், இந்தக் கணக்கு அனைத்துப் பெண்களுக்கும் பொருந்துவதில்லை.

MOST READ: கொத்துற மாதிரி தலைவலிக்குதா? அது எதோட அறிகுறி? உடனே சரியாக கை வைத்தியம் என்ன?

கருமுட்டை நிலை

கருமுட்டை நிலை

சினை முட்டை என்னும் கரு முட்டை வெளிப்படுவதற்கும் அடுத்த மாதவிடாய் தொடங்கும் நாளுக்கும் இடையே உள்ள நாள்கள், அதாவது மாதவிடாய் சுழற்சியின் மூன்றாவது நிலையான லூடியல் நிலை பெரும்பாலான பெண்களுக்கு ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால், சினை முட்டை வெளிப்படுவதற்கு முன்பான காலம் மாதத்திற்கு மாதம் வேறுபடக்கூடும்.

அறிந்து கொள்ளும் முறை

அறிந்து கொள்ளும் முறை

சினைமுட்டை வெளியே வருவதற்கு முன்பு செர்விகல் மியூகஸ் எனப்படும் கருப்பை சளி உருவாகிறது. விந்தணு சினை முட்டையை அடைவதற்கு இது உதவி செய்வதால், கருப்பை சளி உருவானால் அது சினை முட்டை வெளிவரக்கூடிய காலம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சினை முட்டை வெளிவருவதற்கு ஐந்து அல்லது ஆறு நாள் முன்னதாக கருப்பை சளி வெளிவரக்கூடும். ஆகவே, சில நேரங்களில் அது வெகு சீக்கிரமே வந்த அறிகுறியாவதற்கு வாய்ப்பு உள்ளது. சிலர், கருப்பை சளி வெளியாவதை புரிந்து கொள்ளாமல்கூட போய்விடக்கூடும்.

சினைமுட்டை சளி

சினைமுட்டை சளி

கண்டுகொள்ளும் அளவுக்கு கருப்பை சளி வரவில்லையென்றால் ஈவினிங் ப்ரைம்ரோஸ் ஆயில் போன்றவற்றை பயன்படுத்தலாம். மாதவிடாய் சுழற்சியின் பத்தாம் நாள் முதல் பன்னிரண்டாம் நாள் வரைக்கும் இதை பயன்படுத்தலாம்.

இது கை வைத்தியமே அன்றி மருத்துவ ரீதியான ஒன்றல்ல. மாதவிடாய் சுழற்சியின் இரண்டாம் பாகத்தில் ஈவினிங் ப்ரைம்ரோஸ் எண்ணெய் எடுப்பது தசைப்பிடிப்புக்கு வழிவகுத்து, கருத்தரிப்பதை தடுக்கக்கூடும் என்பதால் சினை முட்டை உருவாகிறதற்கு முன்பு மட்டுமே இதை எடுத்துக் கொள்ளலாம்.

பப்ளிமாஸ் பழச்சாறு

பப்ளிமாஸ் பழச்சாறு

செயற்கையான கருப்பை சளி போன்ற கருத்தரிப்பு உயவு பொருளையும் (லூபிரிகண்ட்) பயன்படுத்தலாம். சினை முட்டை வெளியாகும் காலம் நெருங்கும்போது பப்ளிமாஸ் பழச்சாறு பருகலாம்.

MOST READ: தூங்கி எழும்போது உங்க தொப்பை காணாம போனா எப்படியிருக்கும்? இத குடிங்க நிச்சயம் நடக்கும்...

கர்ப்பப்பை வாயின் நிலை

கர்ப்பப்பை வாயின் நிலை

சினை முட்டை வெளியாகும் மாதத்தில் விரல்களை கொண்டு கர்ப்பப்பை வாய் எந்த நிலையில் உள்ளது என்று சோதித்தால் மாற்றங்கள் தென்படுவதை கண்டுகொள்ளலாம். இது பெரும்பாலோனாருக்கு கடினமான ஒன்று.

சினைமுட்டைக்கான பரிசோதனை

சினைமுட்டைக்கான பரிசோதனை

சினை முட்டை வெளியேறுவதை சரியான முறையில் பரிசோதிக்க, சோதனை பட்டைகள் கிடைக்கிறது. சினை முட்டை வெளியாகும் முன்னர் உடல் லூட்டினைஸிங் என்ற ஹார்மோனை சுரக்கிறது. சினைப்பை 24 முதல் 48 மணி நேரத்திற்குள் முட்டையை வெளியேற்றுவதற்கு ஆயத்தமாகிறது என்பதற்கு இது அறிகுறியாகும்.

சுயசோதனை (ovulation test strips)

சுயசோதனை (ovulation test strips)

சினைமுட்டை வெளியேற்றத்தை சோதிப்பதற்கான பட்டைகளை வாங்கி (ovulation test strips) சிறுநீரில் லூட்டினைஸிங் ஹார்மோனின் அளவை சோதிக்கலாம். சிறுநீரில் இப்பட்டையினை வைத்ததும் குறியீடு கோடு (control line) ஒன்று தெரியும்.

மாதவிடாய் சுழற்சியின்போது லூட்டினைஸிங் ஹார்மோனின் அளவு அதிகமாக இருந்தால் இரண்டாவது கோடு ஒன்று தோன்றும். இந்த இரண்டாம் கோடு குறியீட்டு கோட்டைப்போன்றே அழுத்தமாக தெரியும். அது சினை முட்டை வெகுவிரைவில் வெளியாக இருப்பதை குறிக்கும்.

சிறுநீர் பரிசோதனை

சிறுநீர் பரிசோதனை

லூட்டினைஸிங் ஹார்மோன் சுரப்பு இரண்டு நாள்கள் தொடரக் கூடுமானதால் சினை முட்டை வெளியேறுவதை குறித்து தெரிந்து கொண்டு எச்சரிக்கையடையலாம். சோதனையில் இரண்டாவது கோடு தெரிந்தால் அது சினை முட்டை வெளியாவதற்கு நான்கு நாள்களுள் முந்தைய காலம் என்பதால் கருத்தரிப்புக்காக தாம்பத்திய உறவு கொள்வதற்கு ஏற்ற நேரம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இது செலவு குறைவான பரிசோதனையாகும். சினை முட்டை வெளியாவதை துல்லியமாக காணக்கூடிய சாதனங்களும் (ovulation predictor kits) உள்ளன. காலையில் முதன்முதலாக கழிக்கும் சிறுநீரை பரிசோதிக்கவேண்டும் என்று சிலர் கூறுவார்கள்.

MOST READ: இந்த ஆறு மசாலா வீட்ல இருந்தா போதும்... வாழ்நாள் முழுக்க டாக்டர்கிட்டயே போக வேண்டாம்...

மருத்துவர் ஆலோசனை

மருத்துவர் ஆலோசனை

சோதனை பட்டை பரிசோதனையில் கோடு அழுத்தமாக தெரியவில்லையென்றால் சினை முட்டை வெளியேறும் நிலையில் இல்லையென்று பொருளல்ல. ஆனால், குறியீட்டு கோட்டின் வண்ணத்திற்கு நெருக்கமாக தோன்றவில்லையென்றால் மருத்துவரிடம் பரிசோதனை செய்யும்படி ஆலோசனை கேட்கலாம்.

உடல் வெப்பநிலை பரிசோதனை

உடல் வெப்பநிலை பரிசோதனை

மாதவிடாய் சுழற்சியின்போது உடலிலுள்ள ஹார்மோன்களின் அளவு மாறிக்கொண்டே இருப்பதால் உடலின் வெப்பநிலை அதிகமாகக் காணப்படும். சினைமுட்டை வெளியேற்றத்திற்கு பிறகு உடல் வெப்பநிலை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை பரிசோதித்து அதைக்கொண்டு சினை முட்டை வெளியேறும் காலத்தை கண்டறியமுடியும். தினமும் காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழும்பும் முன்னர் குறிப்பிட்ட நேரத்தில் உடல் வெப்பநிலை அளவை குறித்து வரவேண்டும்.

உடல் வெப்பநிலையில் உயர்வு மற்றும் சோதனை பட்டி, கர்ப்பப்பை வாய் நிலை, கருப்பை வாய் சளி உள்ளிட்ட அனைத்து அறிகுறிகளையும் கொண்டு சினை முட்டை வெளியேறும் காலத்தை கண்டுகொண்டு தாம்பத்ய உறவு கொண்டால் குழந்தை பாக்கியத்தை பெற்றுக்கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is Ovulation? And When Will I Ovulate?

Understanding female health is at the core of what we do here at Natural Cycles. So naturally, we know quite a bit about ovulation and its role in fertility. Get ready to learn “what is ovulation?” and more about your body as we take a look at this important phase in the menstrual cycle and where it fits into the larger picture of planning or preventing pregnancy.
Desktop Bottom Promotion