Just In
- 1 hr ago
ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா?
- 2 hrs ago
இந்த நேரத்தில் உடலுறவு வைச்சுகிட்டா கர்ப்பமாவதற்கு 99% வாய்ப்பிருக்காம் தெரியுமா?
- 4 hrs ago
ஃபிட்டா இருக்கணுமா? அப்ப இத வாரத்துக்கு 6 நாள் ஃபாலோ பண்ணுங்க..
- 5 hrs ago
வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உங்களுக்கு இந்த மோசமான நோய் வராதாம்...!
Don't Miss
- Movies
காதலியை கரம் பிடிக்கிறார்.. வரும் 24 ஆம் தேதி பிரபல ஹீரோ திருமணம்.. உறுதி செய்த நடிகர்!
- News
10 அமைச்சர்கள் ஜம்பாகிறாங்க... அவருகூட விசாரிச்சார்....இவரும்தான்....அடேங்கப்பா அதிமுக கிசுகிசுக்கள்
- Education
டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா?
- Finance
ரயில் கட்டண விலையில் விமான பயணம்.. இண்டிகோவின் அட்டகாசமான சலுகை.. ரூ.877 சலுகை நீட்டிப்பு..!
- Sports
1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி
- Automobiles
அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விந்து வங்கிக்கு போகாம வீட்லயே உங்க விந்துவை சேகரிச்சு வெக்கணுமா? அது ரொம்ப ஈஸிதான்...
உங்களுக்கு விந்து வங்கி பற்றி எதாவது தெரியுமா? அதைப்பற்றி பிரபல தனியார் மருத்துவருமான அசோக் அகர்வால், பிஎச்டி, ஆன்ட்ரோலஜி ஆய்வக இயக்குனர் மற்றும் ஸ்பெர்ம் பாங்க் பொறுப்பாளர் கூறுகிறார்.
ஆண்களுக்கு இளம் வயதில் வெளிப்படும் விந்தணுக்களின் திறன் வலிமை வாய்ந்ததாக இருக்கும். காலப்போக்கில் வயதாக வயதாக மன அழுத்தம், உணவுப் பழக்கம், கெட்ட பழக்க வழக்கங்களால் ஆண்மைக் குறைவு பிரச்சினையை நிறைய பேர் சந்தித்து வருகின்றனர்.

விந்து சேமிப்பது
எனவே இளமையான கால கட்டத்திலேயே விந்தணுவை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் விந்தணு குறைபாடு உள்ளவர்கள் கூட குழந்தை பேற்றை பெற இயலும். அதிலும் குறிப்பாக 18-24 வயதை அடைந்த ஆண்கள் விந்தணுவை வங்கிகளில் சேமித்து வைப்பது நல்லது. திருமணம் தாமதமாக அமைபவர்களுக்கு, குழந்தை பேற்றை தள்ளிப் போடுபவர்களுக்கு இது சிறந்த தீர்வளிக்கும்.
காலப்போக்கில் ஏற்படும் கருவுறாத பிரச்சினைகள், இராணுவத்திற்கு செல்லுதல், வெளிநாடு செல்லுதல் போன்று திட்டமிட்டால் உங்கள் எதிர்காலத்தில் குழந்தை பேற்றை காப்பாற்ற இந்த விந்தணு வங்கி உதவும் என்கிறார். அது குறித்து ஆச்சரியமூட்டும் விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அவர்.
MOST READ: மட்டன் வாங்கப் போறீங்களா? நல்லதா எப்படி பார்த்து வாங்கணும்னு இத படிச்சிட்டு போங்க...

வீட்டிலேயே விந்தணுவை சேகரிக்கலாமா?
சில ஆண்கள் மருத்துவமனைக்கு சென்று விந்தணுவை சேகரிக்க சங்கோஜப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கென்று வீட்டிலேயே சேகரிக்க விந்தணு கிட் கிடைக்கிறது. இந்த கிட்டை ஆன்லைனில் மூலமாக வாங்கி கூட விந்தணுவை நீங்கள் சேகரிக்கலாம். அதில் சேகரிப்பதற்கான வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு கூடுதல் தகவல்கள் வேண்டும் என்றால் மருத்துவரையோ விந்தணு வங்கியையோ நாடிக் கொள்ளலாம்.

நோய்களிலிருந்து விந்தணுவை காப்பாற்றுதல்
நோய்கள் நம்மை எப்போ தாக்கும் என்று சொல்லவே முடியாது. எனவே முன்னரே திட்டமிடுவது நல்லது. ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்று நோய், டெஸ்டிகுலார் கேன்சர், நீரிழிவு நோய் போன்ற தாக்குதலில் இருந்து உங்கள் விந்தணுவை காக்க விந்தணு வங்கி உதவியாக இருக்கும். கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை செய்வதற்கு முன் கூட இதை நீங்கள் செய்யலாம். ஆண்கள் கருத்தடை சிகிச்சை வாசெக்டமி பண்ணுவதற்கு முன் கூட இதைச் செய்து கொள்வது நல்லது. இது உங்கள் விந்தணுவை பாதுகாப்பாக வைத்து எப்பொழுது வேண்டுமானாலும் மகப்பேற்றை தருகிறது.

ஆரோக்கியமான குழந்தை பிறப்பு சாத்தியம்
இந்த சேகரிக்கப்பட்ட விந்தணுவை பாதுகாக்க க்ரையோப்ரிஷர்வேஷன் (உறைதல்) முறை செய்யப்படுகிறது. குளிர் சாதன பெட்டிகளில் வைத்துப் போதுமான தட்ப வெப்ப நிலையில் வைத்து பாதுகாக்கின்றனர். எனவே இந்த விந்தணுக்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக வீரியமிக்கதாக இருக்கின்றன. இதனால் இதன் மூலம் பிறக்கின்ற குழந்தைகளும் ஆரோக்கியமாக எந்த வித பிறப்பு குறைபாடும் இல்லாமல் பிறக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
MOST READ: இந்த மூனு ராசிக்காரங்களும் எப்பவுமே ஒரே இம்சை தான்... கொஞ்சம் தள்ளியே இருங்க

எப்போது வேண்டுமானாலும்
எப்பொழுது வேண்டுமானாலும் விருப்பங்கள் நிறைவேறும். நீண்ட காலத்திற்கு பிறகு கூட நீங்கள் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒரு ஆணுக்கு லுகோமியா என்ற இரத்த புற்றுநோய் ஏற்படுவதற்கு முன் 1986 ல் அவரது விந்தணு சேகரிக்கப்பட்டால் 2008 ல் கூட அந்த தம்பதிகளால் குழந்தை பேற்றை அடைய முடியும். 22 வருடங்கள் கழித்து கூட சேகரிக்கப்பட்ட விந்தணுவின் மூலம் குழந்தை பேற்றை அடையலாம்.

பாதுகாப்பு முறைகள்
இந்த விந்தணுவை பாதுகாக்க க்ரையோப்ரிஷர்வேஷன் முறையை பயன்படுத்துகின்றனர். அதாவது 196 டிகிரி செல்சியஸில் அதிக குளிர்விப்பானை பயன்படுத்தி பாதுகாக்கிறார்கள். ஏன் வீட்டில் சேகரிக்கப்படும் விந்தணு கிட்டில் கூட குளிர்விப்பான்கள் பொருத்தப்பட்டு இருக்கும். எனவே இதை எளிதாக விந்தணு வங்கிக்கு அனுப்பி விடலாம். விந்தணு வங்கிக்கு போகும் வரை பாதுகாப்பாக இருக்கும்.

பரிசோதித்து கொள்ளுங்கள்
விந்தணு வங்கியில் உள்ள மருத்துவர்கள் கூட உங்கள் விந்தணுவை ஆராய்ந்து அதன் திறன் வீரியம் எல்லாவற்றையும் பரிசோதித்து சொல்லி விடுவார்கள். இது உங்கள் எதிர்கால கருவுறுதலுக்கு உதவியாக இருக்கும்.
MOST READ: பொறந்தா இந்த ராசியில பொறக்கணும்... நினைக்கறிதெல்லாம் டான் டான்னு நடக்குமாம்...

ஆரோக்கியமான ஆண்களுக்கும் நல்ல வாய்ப்பு
உடல் நலம் ஆரோக்கியமான ஆண்கள் கூட இந்த விந்தணு வங்கியை பயன்படுத்திக் கொள்வது நல்லது. எல்லா விஞ்ஞான அறிக்கைகளும் தற்போது உலகளவில் விந்தணு எண்ணிக்கைகளின் சரிவை உறிபடுத்துகின்றனர். ஆண்கள் 40 வயதை கடந்து விட்டாலே விந்தணுக்களின் மரபணு ஆன டி. என். ஏ சேதமாக ஆரம்பித்து விடுகிறது. இது உங்கள் எதிர்கால குழந்தை பேற்றை கேள்விக்குறி ஆக்கி விடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
எனவே விந்தணு வங்கிகள் உங்களுக்கு நிறைய வகைகளில் உங்கள் எதிர்காலத்திற்கும் உதவியாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.