Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
பெண்களுக்கும் காண்டம் இருக்கா? அதை அணிந்து உறவு கொண்டால் சுகம் கூடுமா குறையுமா?
பெண்களுக்கு உரிய காண்டம் பயன்படுத்தும் போது உண்டாகிற பிரச்சினைகளைப் பற்றி இந்த பகுதியில் விரிவாகப் பார்க்கலாம். அது பற்றிய விளக்கமான பதிவு தான் இது.
பெண்களுக்கான காண்டம் பயன்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும், அது கருத்தடுப்பு என்ற முறையில் அதிகமாக பயன்படுத்தப்படுவது இல்லை. ஏனெனில் பெண்களுக்கான காண்டம் பயன்படுத்துவதால் ஏற்படும் சில சிக்கல்கள், மிகவும் மோசமானவை ஆகும். இந்த வகையில், ஒரு கருத்தடுப்பு முறையை நீங்கள் தேர்ந்தெடுக்கும் முன், அதில் உள்ள நன்மைகள் மற்றும் சிக்கல்களை குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டியுள்ளது.

விலை
ஆண்களுக்கான காண்டம் உடன் ஒப்பிடும் போது, பெண்களுக்கான காண்டத்தின் விலை அதிகம் ஆகும். பெண்களுக்கான காண்டம் தயாரிப்பில் அதிக பொருட்கள் பயன்படுத்தப்படுவதே இதற்கான முக்கிய காரணம் ஆகும்.

தோல்வி விகிதம் அதிகம்
ஆண்களுக்கான காண்டம் உடன் ஒப்பிடும் போது, பெண்களுக்கான காண்டத்தின் தோல்வி விகிதம் அதிகம் ஆகும். உடலுறவின் போது, தொடர்ந்து அதை சீர்ப்படுத்தி கொண்டே இருக்க வேண்டியுள்ளது. பெண்களுக்கான காண்டத்தின் திறனை மேம்படுத்த, இரண்டாவது வகை கருத்தடுப்பு முறையை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதில் ஸ்பேர்மிசிடல் நுரை, டையஃபிரம் அல்லது விந்து வெளியேறும் முன் வெளியே எடுப்பது உள்ளிட்ட கருத்தடுப்பு முறைகளை கூறலாம்.

செக்ஸ் உணர்வில் குறுக்கீடு
ஆண்களுக்கான காண்டம்களில் ஏற்படுவது போல, பெண்களுக்கான காண்டத்தை பயன்படுத்தும் போதும், கலவி இன்பத்திற்கு குறுக்கீடாக அமைகிறது. குழந்தை கட்டுப்பாடு அல்லது பாதுகாப்பான உடலுறவிற்கு உதவுவதாக இந்த முறையை பழக்கப்படுத்தி கொள்வது, பெரிய கஷ்டமான ஒன்றாக ஆண்களுக்கு தெரிய வாய்ப்புள்ளது. இவையெல்லாம் சேர்ந்து செக்ஸ் உணர்வுகளுக்கு குறுக்கீடாக அமைந்து விடுகிறது.

கிடைக்கும் தன்மை
ஆண்களுக்கான காண்டம் கிடைப்பது போல, பெண்களுக்கான காண்டத்தை அவ்வளவு எளிதாக பெற முடிவதில்லை. எல்லா மருந்து கடைகளிலும் இவற்றை விற்பனை வைப்பது இல்லை. ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து ஒன்றை வாங்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.

பழக்கம் இல்லாத ஒன்று
ஆண்களுக்கான காண்டத்தை பயன்படுத்தி பழகியது போல, பெரும்பாலான பெண்களுக்கு இதை பயன்படுத்தி பழக்கம் இல்லை. இதை பயன்படுத்தும் போது ஏற்படும் அதிக வெப்பத்தை பழக்க வேண்டியுள்ளது. உண்மைான உடலுறவில் பயன்படுத்தும் முன், இதை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

தோற்றம்
பெண்களுக்கான காண்டத்தின் தோற்றம் சிலருக்கு பெரியதாக இருப்பது போல தெரிகிறது. உடலுறவு கொள்ள தயாராகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, பெண்ணுறுப்பு அல்லது மலத்துவாரத்தின் வெளியே பெரிய அளவிலான பிளாஸ்டிக் வட்டம் தொங்கி கொண்டிருப்பதை அவர்கள் விரும்புவது இல்லை. பெண்களுக்கான காண்டத்தின் அளவு மற்றொரு பிரச்சனையாக உள்ளது. இதனால் இதை பொதுவாக எடுத்து செல்லவோ, அப்புறப்படுத்துவதோ சிரமமாக உள்ளது.

பயன்படுத்தும் முறை
இதை பயன்படுத்துவதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், இதை பெண்ணுறுப்பிற்கு சொருக வேண்டியுள்ளது. இதை சரியாக செய்யும் வகையில், உடலுறுப்புகளைக் குறித்த தெளிவு பெண்களுக்கு இருப்பதில்லை. இதனால் பெண்ணுறுப்பிற்குள் சொருகுவதும், அதை பராமரிப்பதும் மிகப்பெரிய சவாலான காரியமாக உள்ளது. இது தவிர, இந்த காண்டம் பெண்ணுறுப்பிற்குள் சென்று விடவும் வாய்ப்புகள் அதிகம். இது மிகவும் அசவுகரியமான ஒன்றாக தெரிகிறது.
பெண்களுக்கான காண்டம் பயன்படுத்துவதில் மேற்கண்ட பாதகங்கள் மிகவும் சிக்கலானவை என்பதோடு, அதை பயன்படுத்தும் போது, மிகவும் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. இதை வாங்கி பயன்படுத்தும் முன், அதை குறித்து நன்கு அறிந்து வைத்திருப்பது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
