For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மார்பு, மார்பு காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும்? பெண்களுக்கும் சீம்பால் வருமா? எப்போது வரும்?

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களுடைய மார்பு மற்றும் மார்புக் காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

|

ஒரு பெண் கர்ப்பம் அடைந்ததும் அவள் உடம்பில் ஏராளமான மாற்றங்களை நிகழும். கருவில் வளரும் குழந்தைக்கு தகுந்த மாதிரி அவளின் வயிறு, மார்பகங்கள் எல்லாம் பெரிதாகும். இந்த மாதிரியான சமயங்களில் மார்பகத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் அப்பொழுது தான் பிறக்கின்ற குழந்தைக்கு ஆரோக்கியமான தாய்ப்பால் கிடைக்கும்.

breast and nipple care during pregnancy

மார்பகத்தை எந்தவித தொற்று இல்லாமல் சுத்தமாக பராமரிப்பது மிகவும் அவசியம். தாய்ப்பால் சுரப்பிற்கு தகுந்த மாதிரி மார்பகங்கள் வளர்ச்சி அடையும், மார்பக திசுக்கள் மாற்றமடையும், புரோஜெஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு பால் சுரப்பு ஏற்படும். எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதை கீழ்க்கண்டவாறு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்கள்

மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்கள்

கர்ப்ப காலத்தில் பெண்களின் மார்பகம் முதலில் பெரிதாகும். மார்பக காம்புகளில் சுருக்கென்று குத்துவது போன்ற உணர்வை பெறுவார்கள். சில நேரம் எரிச்சல் கூட ஏற்படும். மார்பகம் கனமாக இருப்பது போன்று உணர்வார்கள்.

மார்பகத்தில் உள்ள தோல் விரிவடைந்து, இதனால் அந்த இடத்தில் அரிப்பு மற்றும் தழும்புகள் ஏற்படும்.

அந்த பகுதியில் நீல மற்றும் பச்சை நிற இரத்த நாளங்கள் வெளியே தெரியும்.

சிறிய மார்பக தோற்றம் மாறி பெரிதாக காட்சியளிக்கும்.

குழந்தை பிறப்பதற்கு முன் சீம்பால் வரும்.

மார்பக கட்டிகள் சில இட‌ங்க‌ளி‌ல் தென்படும், பெரிதாக கவலை கொள்ள வேண்டாம்

என்றாலும் மருத்துவரை அணுகி ஆலோசித்து கொள்வது நல்லது.

இந்த சிவந்த கட்டிகள் பெரும்பாலும் பால் கட்டுவதால் ஏற்படுகிறது. மெதுவாக வெதுவெதுப்பான மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரித்து கட்டிகளை கரைத்து விடும். மிகுந்த வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுகி விடுங்கள்.

MOST READ: ஷில்பா ஷெட்டி சொல்லும் பெட்ரூம் ரகசியங்கள்... இத ட்ரை பண்ணினா சண்டையே வராதாம்

மார்பக காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள்

மார்பக காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள்

மார்பக காம்புகள் மிகவும் சென்ஸ்டிவ் ஆன பகுதி. அதிலும் சூடான மற்றும் குளிர் நிலையில் மிகுந்த சென்ஸ்டிவ் ஆக இருக்கும்.

மார்பக காம்புகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி கருப்பாகும்.அதைச் சுற்றி முடி வளர ஆரம்பிக்கும்.

மார்பக காம்புகளை சுற்றி சின்ன சின்ன பருக்கள் தோன்றும். அது வலியை உண்டாக்கும்.

இதனுடைய வேலை குழந்தை பால் குடிக்க ஏதுவாக காம்புகளை வைக்க பயன்படுகிறது.

மார்பகங்களை எப்படி பராமரிப்பது

மார்பகங்களை எப்படி பராமரிப்பது

சரியான உள்ளாடை அணிதல்

கர்ப்ப காலத்தில் மார்பகம் பெரிதாக ஆரம்பித்ததும் சரியான பிராவை தேர்ந்தெடுக்க வேண்டும். இது உங்களுக்கு நல்ல சப்போர்ட் ஆக இருக்கும். காட்டன் வகை பிராக்கள், சாஃப்ட் பேடிங் பிராக்கள் சிறந்தது. புஷ் அப் பிராக்கள் அணிய வேண்டாம். இது மார்பகத்தில் பாலைக் கட்ட வைத்து முலையழற்சியை உண்டாக்கி விடும். எனவே பிராக்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.

வெதுவெதுப்பான மசாஜ்

வெதுவெதுப்பான மசாஜ்

மார்பகத்தில் உள்ள தோல் விரிவடைவதால் மார்பக காம்புகளில் பிளவு, வெடிப்பு உண்டாகும். எனவே வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை கொண்டு மெதுவாக விரல்களால் மசாஜ் செய்து விடலாம். இது உங்கள் மார்பகத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும்.

சுத்தமாக வைத்திருத்தல்

சுத்தமாக வைத்திருத்தல்

கர்ப்ப கால கடைசி மாதத்தில் சீம்பால் சுரக்க ஆரம்பிக்கும். அப்பொழுது வெட் டிஸ்யூ பேப்பர் கொண்டு துடைக்கலாம். சோப்பு போன்றவற்றை கொண்டு சுத்தப்படுத்த வேண்டாம். இது மார்பகங்களில் வெடிப்பை ஏற்படுத்தி விடும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி கொண்டு மார்பக காம்புகளை மசாஜ் செய்யலாம். இது மிருவாக்கி வெடிப்பில்லாமல் பார்த்துக் கொள்ளும். குளிக்கும் போது பெருவிரல் ஆள்காட்டி விரலால் மார்பக காம்புகளை இழுத்து விடலாம். இது பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

MOST READ: பூண்டுல தேன் கலந்து வெறும் வயிறுல சாப்பிட்டா டயர் மாதிரி இருக்கிற தொப்பையும் கரைஞ்சிடுமாம்

சோப்பை தவிருங்கள்

சோப்பை தவிருங்கள்

சோப்பை பயன்படுத்தும் போது மார்பக சருமத்தில் அரிப்பு, வெடிப்பு, புண்கள் ஏற்பட்டு அவதியுற வாய்ப்புள்ளது. எனவே மாய்ஸ்சரைசர் க்ரீம் அப்ளே செய்யுங்கள்.

மார்பகத்தை மிருதுவாக்குதல்

மார்பகத்தை மிருதுவாக்குதல்

மார்பக சருமம் விரிவடையும் போது வறண்டு ஈரப்பதம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் மார்பக காம்புகளில் புண்கள், வெடிப்பு ஏற்படும், மேலும் குளிக்கும் போது அதிகமாக தேய்ப்பதால் மார்பக சருமத்தில் உள்ள எண்ணைப் பசை நீங்கி வறண்டு போகும். இதை போக்க பெட்ரோலியம் ஜெல்லி, பிரிட்ஜ் வைத்த கற்றாழை ஜெல் போன்றவற்றை அப்ளே செய்யலாம். வறட்சியை போக்கி குளுகுளுப்பையும், ஈரப்பதத்தையும் தக்க வைக்கும்.

ஓட்ஸ் மீல் பாத்

ஓட்ஸ் மீல் பாத்

ரெம்ப சூடான நீரில் குளிக்கும் பபோது சருமம் எளிதில் வறண்டு விடும். எனவே வெதுவெதுப்பான நீரில் ஓட்ஸ் மீல் போட்டு குளியுங்கள். பிறகு சாதாரண நீரில் மார்பகத்தை கழுவி விடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

மார்பக காம்பு பாதுகாப்பு

மார்பக காம்பு பாதுகாப்பு

நாம் அணியும் உள்ளாடைகள் மார்பக காம்புகளில் உரசும் போது ஒரு வித வலியும் அசெளகரியமும் ஏற்படுகிறது. எனவே மார்பக காம்புகளை பாதுகாக்க கடைகளில் நிப்பிள் ப்ரக்டக்ரர்ஸ் கிடைக்கிறது. இதை வாங்கி உபயோகிக்கலாம். இது தடுப்பான் மாதிரி செயல்பட்டு ஆடை உரசாமல் பார்த்துக் கொள்கிறது.

ப்ரஸ்ட் பேடு அல்லது ஐஸ் பேடு

ப்ரஸ்ட் பேடு அல்லது ஐஸ் பேடு

கர்ப்ப காலத்தில் மால் காம்புகளில் இருந்து பால் கசிய ஆரம்பிக்கும். இதை அப்படியே விட்டால் தொற்றுகள் உண்டாகலாம். எனவே ப்ரீஸ்ட் பேடு களை பிராவில் வைத்து பயன்படுத்தும் போது ஈரப்பதத்தை உறிஞ்சி மார்பக காம்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும். ஐஸ் பேடுகள் மார்பகத்தில் பால் கட்டுவதால் ஏற்படும் வலியை குறைக்கவும், ரிலாக்ஸ் தரவும் உதவுகிறது.

MOST READ: 10 வருஷமா பொம்பளங்க ஓட்ற ஸ்கூட்டி மட்டும் திருடிய விநோத திருடன்... ஏன்னு தெரியுமா?

கவனத்தில் வைக்க வேண்டியவை

கவனத்தில் வைக்க வேண்டியவை

சருமத்தை கழுவ வெதுவெதுப்பான நீரை மட்டும் உபயோகிங்கள். இல்லையென்றால் சருமம் வறண்டு போய் விடும்.

தினமு‌ம் பிராவை மாற்றி விடுங்கள். இல்லையென்றால் வியர்வை அழுக்கால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விடும்.

மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கவனியுங்கள். எதாவது மாற்றம் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

தாய்ப்பாலை நிறுத்திய பிறகு சிறிய உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். கைகளை சுற்றுதல் போன்றவை மார்பகம் தொங்காமல் இருக்க உதவும். பிரசவத்திற்கு பிறகு நடைபயிற்சி, சிறிய உடற்பயிற்சி உங்கள் உடம்பை கட்டுக்கோப்பாக வைக்க உதவும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். மேலும் தகவல்களை அறிய எங்கள் இணையதளத்தை நாடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

breast and nipple care during pregnancy

Changes in the breasts and the areolas, or the area around the nipples, are a definitive part of pregnancy. However, if proper care is not taken, these changes may cause discomfort and also alter the shape of your breasts significantly after pregnancy.
Desktop Bottom Promotion