For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கஞ்சா பயன்படுத்துவதால் ஆண்களின் ஆண்மையில் ஏற்படும் மாற்றங்கள்..!

புகை பிடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல; இந்த பதிப்பில் கஞ்சா பயன்படுத்துவதால் ஆண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி படித்து அறியலாம்.

|

புகை பிடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல; அதிலும் கஞ்சாவை பயன்படுத்தி புகை பிடிப்பது கண்டிப்பாக ஆரோக்கிய சீர் கேடை ஏற்படுத்தும். இந்த பதிப்பில் கஞ்சா பயன்படுத்துவதால் ஆண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், ஆண்களின் ஆண்மையை கஞ்சா எப்படி பாதிக்கிறது மற்றும் கஞ்சாவால் ஆண்களின் விந்து அணு வடிவம் எப்படி மாறுபாடடைகிறது போன்றவை பற்றி படித்து அறியலாம்.

Smoking Marijuana May Affect Fertility In Men

ஆண்கள் கஞ்சாவை அதிகம் பயன்படுத்துவைத்து ஏற்படுத்தும் ஆபத்தான விளைவுகளை பற்றி அறிய வாருங்கள் பதிப்பிற்குள் செல்வோம்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகை கெடுதி!

புகை கெடுதி!

பொதுவாக புகை பிடித்தல் பழக்கமே உடலுக்கு கெடுதி என்பத்து போன்ற செய்திகளை பிரச்சாரம் செய்து வரும் நிலையில், கஞ்சாவை பயன்படுத்துவது என்றால் இதனால் ஏற்படப்போகும் விளைவுகளை என்ன என்று கூறுவது. தற்காலத்தில் கஞ்சாவை மிஞ்சிய பற்பல போதை மருந்துகள் சந்தையில் விற்பனை ஆக ஆரம்பித்து விட்டன. இருப்பினும் நம் தமிழக பகுதிகளில் கஞ்சா, போதை காளான் போன்றவை தான் பரவலாக பயன்பாட்டில் உள்ளன.

கஞ்சா என்பது..

கஞ்சா என்பது..

கஞ்சா என்பது ஒரு செடி வகை தான்; இந்த செடியை நுகர்ந்தால் ஒரு வித போதை மயக்கம் உண்டாகும். இந்த போதை நிலையை அடையவே பல ஆண்களும் பெண்களும் இதை பயன்படுத்தி வருகின்றன. இது உடலுக்கு நல்லது அல்ல என்பதால், கஞ்சா பயன்பாட்டை அரசு பல தடைகள் விதித்து கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது.

யோசனை முதல் பிரச்சனை வரை!

யோசனை முதல் பிரச்சனை வரை!

கஞ்சா பயன்படுத்துவது உணர்வுகளை முடுக்கி விட்டு ஒரு வித மயக்க உணர்வை ஏற்படுத்தும். இதனை பல கணினி மென்பொருள் பொறியியலாளர்கள் யோசனை நன்கு மேலோங்கி வருவதற்காக பயன்படுத்துவது உண்டு; பல சாதாரண மனிதர்கள் இதை பயன்படுத்தி விட்டு பிரச்சனைகள் பலவற்றை ஏற்படுத்துவது உண்டு. இது மேல்மட்ட மக்கள், கீழ்மட்ட மக்கள் என அனைவரும் பயன்படுத்தும் ஒரு போதை பொருளாக உள்ளது.

எப்படி பயன்படுத்துவது.?

எப்படி பயன்படுத்துவது.?

இந்த கஞ்சாவை எப்படி பயன்படுத்துவது என்றால், கஞ்சா செடியின் இலைகளை, கஞ்சா செடியை நன்றாக கசக்கி நசுக்கி சிகரெட் போல் ஒரு பேப்பரில் போட்டு சுருட்டி கொள்ள வேண்டும். பேப்பரை கஞ்சா செடி நிரப்பி சுருட்டு போல் செய்து கொண்டு, அதை பற்ற வைத்து புகை பிடிப்பர்.

பொதுவாக புகை பிடித்தால், அந்த புகை பிடிக்கும் நபருக்கு மட்டும் தான் போதை ஏறும்; ஆனால், இந்த கஞ்சாவை பயன்படுத்தும் நபருக்கு அருகில் இருப்பவருக்கும் கூட போதை ஏறுமாம். இந்த கஞ்சா புகையை நுகர்ந்தால் உடலில் ஒரு வித மயக்கம் ஏற்பட்டு விடும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: 650 கன்னி பெண்களை கொன்று அவர்களின் இரத்தத்தில் குளித்த பெண்ணை பற்றி தெரியுமா?

ஆண்களின் உடல்..

ஆண்களின் உடல்..

ஆண்களின் உடலில் என்ன தான் நோய் எதிர்ப்பு மண்டலம் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், அவர்கள் மேற்கொள்ளும் தீய பழக்க வழக்கங்கள் எளிதாக இந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை தகர்த்து விடும். பெண்களின் உடலில் மாதவிடாய், கர்ப்பம், பிரசவம், தாய்ப்பால் சுரப்பு போன்ற மாற்றங்கள் நடைபெறுவதால் பெண்களின் உடலில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் இல்லை என்று கூறலாம்.

ஆண்களின் ஆண்மை..

ஆண்களின் ஆண்மை..

ஆண்களின் உடலில் கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமாக ஆண்மையை பாதிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கஞ்சாவை அதிகம் பயன்படுத்தும் ஆண்களின் உடலில் விந்து அணுக்களின் வடிவமும், அளவும் மாற்றம் அடைந்து அதன் செயல்பாடு அதிகம் பாதிப்பு அடைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்ந்த மாற்றம்..

தொடர்ந்த மாற்றம்..

கணினி அல்லது மொபைல் வீடியோ விளையாட்டுகளில், அனிமேஷன் முறையில் பொம்மைகள் தொடர்ந்து மாற்றம் அடைவது போல, ஆண்கள் அளவுக்கு அதிகமாக கஞ்சாவை பயன்படுத்துவதால், அவர்களின் உடலில் உள்ள விந்து அணுக்கள் கணினியில் வரும் அனிமேஷன் போல் மாறிக் கொண்டே இருக்கின்றனர். நிலைத்தன்மை இல்லாத விந்து அணுக்கள், இருந்தும் வீணே; இவற்றால் எந்த ஒரு பிரயோஜமான பயனும் ஏற்பட போவது இல்லை.

கருவுறுதல் கஷ்டம்!

கருவுறுதல் கஷ்டம்!

ஆண்களின் உடலில் இருக்கும் விந்து அணுக்கள் கஞ்சா பயன்பட்டால் அதீத மாற்றத்தை அடிக்கடி அடைவதாகவும், இதனால் ஆண்களால் அப்பாவாக முடியாத நிலை ஏற்படலாம் என்றும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. ஆண்களின் உடலில் விந்து அணுக்கள் மாறுபாடு அடைவது, அவர்க்ளின் ஆண்மை தன்மையை குறைத்து, அவர்களால் - அவர்தம் பாதிக்கப்பட்ட விந்து அணுக்களால் ஒரு பெண்ணை கருத்தரிக்க வைக்க முடியாத நிலை கண்டிப்பாக உருவாவதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க: குழந்தைகள் கருவறையில் அழுக, தந்தையர் செய்யும் இந்த செயல் தான் காரணமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Smoking Marijuana May Affect Fertility In Men

Smoking Marijuana May Affect Fertility In Men
Story first published: Friday, September 28, 2018, 15:27 [IST]
Desktop Bottom Promotion