Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
பெண்களில் குழந்தை பாக்கியத்தை தடுக்கும் முக்கிய விஷயங்கள் என்னென்ன?
குழந்தை பாக்கியம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கை கனவு ஆகும்; பெண்களில் குழந்தை பாக்கியத்தை தடுக்கும் முக்கிய விஷயங்கள் என்னென்ன என்று இங்கு படிக்கலாம்.
பெண்களின் வாழ்வில் மிகப்பெரிய கனவு மற்றும் இலட்சியமாக இருக்கும் ஒரு விஷயம் தாய்மை என்பது தான். இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் தான் ஒரு உயிரை சுமந்து, அதை இவ்வுலகில் நல்ல முறையில் பெற்று எடுத்து, வளர்த்து ஆளாக்கி ஊர் மெச்ச குழந்தை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

இந்த ஆசை ஒரு மிகப்பெரியதாக படிப்போருக்கு தோன்றினாலும், எல்லா பெண்களின் மனதில் எழும் நியாயமான ஒரு ஆசை.

ஆசையின் அடித்தளம்
இந்த முழு ஆசையும் நிறைவேற அடித்தளமாக இருப்பது குழந்தை கருத்தரிப்பு மற்றும் பிறப்பு. பெண் ஆனவள் தனக்குள் ஒரு உயிரை சுமந்து பெற்று எடுத்து வளர்க்க, கரு முதலில் உருவாக வேண்டும். ஆனால், பூமியில் பிறந்த எல்லா பெண்களும் இந்த வரத்தை பெறுவதில்லை; பல பெண்களுக்கு ஒரு குழந்தையை கருத்தரிக்க முடியாத நிலை, சிலருக்கு கரு உருவாகி வயிற்றில் தங்காத நிலை போன்ற சூழல்கள் ஏற்படுகின்றன.
இந்த பதிப்பில் பெண்களில் கருத்தரிப்பை பாதிக்கும் விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து படித்து அறியலாம்.

மாதவிடாய் சுழற்சி
பெண்கள் கருத்தரிக்க அடிப்படை விஷயமாக இருப்பது மாதவிடாய் தான்; மாதவிடாய் சுழற்சியில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் அது பெண்களின் கருத்தரிக்கும் நிகழ்வை பாதிக்கலாம். பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் சுழற்சி, தாமதமான மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது போன்ற நிலைகளின் காரணமாக கருத்தரிப்பு ஏற்படுவதில் பிரச்சனை மற்றும் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.

கருப்பையில் பிரச்சனை!
பெண்களின் கருப்பையில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலோ, வலி, கட்டி, வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலோ, கருப்பையின் சுவர்களில் இருந்து உதிரப்போக்கு நிகழ்ந்தாலோ அது அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாவதில்லை சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே, வயிற்றில் தொடர்ந்த வலி மற்றும் கருப்பையில் பிரச்சனையில் இருந்தால் அதன் விளைவு மாதவிடாய் சுழற்சியில் தென்படும். இந்த மாதிரியான காரணிகள் பெண்களின் கருத்தரிப்பை தடுக்கும் காரணங்களாக விளங்குகின்றன.

வருத்தம் மற்றும் பலவீனம்
பெண்கள் அதிகம் வருத்தம் மற்றும் மனஅழுத்தம் கொள்ளும் நபர்களாக இருந்தால், அவர்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் பலவீனமாக இருந்தால் அவர்களுக்கு கருத்தரிப்பில் பிரச்சனைகள் ஏற்படலாம். ஏனெனில் சரியான உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் மிகச்சிறப்பான மற்றும் மிகச்சரியான வாழ்க்கை முறைக்கு அவசியம். எனவே வருத்தங்கள் உடலிலோ மனதிலோ எங்கு இடம் பெற்றாலும் பாதிப்பு நமக்கு தான் என்பதை நாம் உணர வேண்டும்.

பிறப்புறுப்பு திரவம்!
பெண்ணின் பிறப்புறுப்பில் வெளிப்படும் திரவத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அது பெண்ணில் கருத்தரிப்பை தடுக்கலாம். மாதவிடாய் என்பது கருமுட்டை மற்றும் கருப்பையின் ஆரோக்கிய நிலையை குறிக்கிறது; அது போல் பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து வெளிப்படும் வெள்ளித்திரவம் பெண்களின் உடலில் உருவாகும் அண்ட முட்டைகளின் ஆரோக்கியம் மற்றும் எண்ணிக்கையை குறிக்கும் மற்றும் பிறப்புறுப்பின் சரியான செயல்பாட்டை குறிக்கும். இந்த விஷயங்களில் ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் கண்டிப்பாக அது கருத்தரிப்பை பாதிக்கும்.

பருக்கள்..!
முகத்தில் மற்றும் உடல் பாகங்களில் மிக அதிகமான அளவு மற்றும் அடிக்கடி பருக்கள் தோன்றினால், அது உடலின் சீரற்ற நிலையை குறிக்கிறது. உடலின் சீரற்ற நிலை என்பது கருப்பையில் பாளி சிஸ்டிக் ஓவரி எனும் நோய் ஏற்பட்டு இருப்பது தான். அந்த நோய் உடலில் ஏற்பட்டிருப்பதை வெளிக்காட்டும் கண்ணாடியாக தான் உடலில் அடிக்கடி அதிகப்படியான பருக்கள் தோன்றுகின்றன. இந்த பாலி சிஸ்டிக் நோயும் கருத்தரிப்பை தடுக்கும் ஒரு காரணியாகும்.

முகத்தில் அதிகம் முடி வளர்தல்!
பெண்களின் முகத்தில் மிகவும் அதிகமான முடிகள் வளர்ந்தால் அது கருத்தரிப்பில் ஏதோ பிரச்னை என்பதை காட்டுகிறது. பெண்களின் முகத்தில் அதிகம் முடி வளர்தல் ஹார்மோன் மாற்றத்தால் நிகழக்கூடியது; இதற்கு டெஸ்டோஸ்டிரான் எனும் ஹார்மோன் காரண கர்த்தாவாக இருக்கும். இந்த ஹார்மோன் மாற்றத்தால் முகத்தில் அதிகம் முடி வளர்வது போல, தலையின் முன்புறத்தில் முடி கொட்டுதல் நிகழும். இந்த மாற்றங்கள் பெண்களின் உடலில் கருத்தரிப்பில் உள்ள பிரச்சனையை குறிக்கும்.

கலவி வலி!
பெண்களில் சிலருக்கு கலவியில் ஈடுபடும் பொழுதும், ஈடுபட்ட பின்னரும் மிகவும் அதிகப்படியான வலி உடலில் ஏற்பட்டால், அவர்தம் உள்ளுறுப்புகளில் ஏதோ பிரச்சனை என்று அறிந்து கொள்ள வேண்டும். பெண்களின் உடலில் பிரச்சனை இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இது போன்ற வலி உணர்வுகள் எல்லாம் ஏற்படும். இந்த மாற்றம் உடலில் ஏற்பட்ட உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.

மலட்டுத்தன்மை
பெண்களில் குழந்தை கருத்தரிப்பு நிகழாமல் இருந்தால், ஊர் உலகம் அவளுக்கு மலடி என்னும் பட்டத்தை வழங்கி பெண்ணினை கூனி குறுகி போய்விடச் செய்கிறது. பெண்களுக்கு மலடி என்ற பட்டம் கொடுப்பது போல், ஆண்களுக்கு இந்த கருத்தடை பிரச்சனை இருந்தால் உலகம் கண்டு கொள்வதில்லை; எந்த பட்டமும் வழங்குவதில்லை.

ஏன் இந்த பாரபட்சம்?
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இந்த பாரபட்சம் காட்டுவது ஏன்? ஏற்கனவே தனது வாழ்க்கைக் கனவை அடைய முடியாமல் வேதனையில் தவிக்கும் பெண்களை மீண்டும் வார்த்தைகளால் காயப்படுத்துவது சரி தானா? இந்த பதிப்பை படிக்கும் நண்பர்கள் பெண்களின் பிரச்சனையை போக்க பதிப்பை பகிர்கிறீரோ இல்லையோ, அவர்தம் அவமானத்தை அழிக்க தயவு செய்து பகிருங்கள்!
பதிப்பின் வாயிலாக பெண்களுக்கு தங்களுக்கு என்ன பிரச்சனை என்பதை புரியவைத்து அவர்கள் அக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து நிறைகளாக மற்ற உதவுங்கள்!



Click it and Unblock the Notifications











