Latest Updates
-
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
தன்னுள் உருவாகி கலைந்து போன குழந்தைக்காக தாய் எழுதிய கடிதம்!
உணர்வுகள் மிகவும் உயர்ந்தவை மற்றும் விலை மதிப்பற்றவை; இந்த பதிப்பில் தன்னுள் உருவாகி கலைந்து போன குழந்தைக்காக தாய் எழுதிய கடிதம் பற்றி படித்து பாருங்கள்!
பெண்கள் தங்கள் வாழ்வில் மிகவும் பெரிய விஷயமாக கருதுவது தாய்மையை தான். தான் ஒரு குழந்தைக்கு அன்னையாகி, தன்னுள் உருவாகும் உயிரை உணர்ந்து, உருவாக்கி, பெற்று எடுத்து வளர்க்க வேண்டும் என்பது பெண்களின் வாழ்க்கை கனவு ஆகும். உணர்வுகள் மிகவும் உயர்ந்தவை மற்றும் விலை மதிப்பற்றவை என்று கூறுவர்; தன்னுள் வளர்ந்த தான் வாழ்க்கையாய் நினைத்த கரு, எதிர்பாராத விதமாய் கலைந்து போகும் பொழுது பெண்கள் அடையும் உணர்வுகளை வர்ணிக்க வார்த்தையும் உண்டோ?!

இந்த பதிப்பில் தன்னுள் உருவாகி கலைந்து போன குழந்தைக்காக தாய் எழுதிய கடிதம் பற்றி படித்து பாருங்கள்!

அன்பு குழந்தையே!
என் அருமை அன்புக் குழந்தையே! நீ எனக்குள் உருவான நொடி, அந்த வானத்தையே தொட்டு விட்டு வந்தது போன்ற சந்தோஷத்தை, மகிழ்ச்சியை உணர்ந்தேன். உன் அப்பாவிடம் நீ எனக்குள் உருவான செய்தியை கூறிய தருணம் என் நெஞ்சில் பசுமரத்தாணி போல பதிந்து இருக்கிறது. நான் கூறிய செய்தியை கேட்டு உன் தந்தை எத்துணை மகிழ்ச்சி அடைந்தார் தெரியுமா?

தீர்மானித்து விட்டோம்!
மகிழ்ச்சியின் சுவையை உணர்ந்து கொண்டு இருந்த எங்களுக்கு அடுத்த நிமிடமே பொறுப்பும், எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டது. உனக்கான பொருட்களை, உனக்கு கதை சொல்ல புத்தகம், நீ விளையாட பொம்மைகள் என அனைத்தையும் வாங்க தொடங்கி விட்டோம். நீ எனக்குள் வளர்வதால், என்னை தரை மேல் கூட பாதம் பட விடாமல் பார்த்து பார்த்து கவனித்து கொண்டார், உன் தந்தை!

எதிர்பாராத ஏமாற்றம்!
எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருக்கும் தருணத்தில், திடீரென என் வயிற்றில் உயிர் போவது போன்ற வலி ஏற்பட்டது; அச்சமயம் நான் எத்தனை கடவுள்களிடம் உனக்காக பிரார்த்தித்தேன் என்று நீ அறிவாயா? ஆனால், விதியின் சதி உன்னை என்னில் விட்டு வைக்காமல் அழித்து விட்டது.
நீ உருவான பொழுது எத்துணை சந்தோஷத்தை அடைந்தேனோ, அதை விட பல மடங்கு சோகமும், வருத்தமும், உன்னை இழந்த உணர்வும் என்னை பீடித்து கொண்டது.

நடமாடும் பிணம் ஆனோம்!
நீ எங்களை விட்டு பிரிந்த பின், நானும் உன் தந்தையும் உயிருடன் இருக்கும் ஜடங்கள் ஆனோம். உன்னை அத்தனை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த எங்களுக்கு எதிர்பாராமல் நடந்த அந்த நிகழ்வு பெரும் அடியாய் அமைந்தது. அதன் பின் எவ்வளவு முயன்றும் உன்னை இழந்ததால் ஏற்பட்ட காயத்தின் வீரியம் குறையவோ, ஆறவோ இல்லை; மாறாக உன் நினைவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே சென்றது.

முயற்சி மேற்கொண்டோம்!
உன்னை இழந்த பல மாதங்களுக்கு பின் மீண்டும் உன்னை போன்ற கரு உருவாக முயற்சி மேற்கொண்டோம்; முதன் முறை மாதிரியே உன்னை போலவே உருவாகியது கரு. உருவான கரு நன்றாகவே வளர்ந்து கொண்டு இருந்தது; இருப்பினும் உன்னை இழந்தது போல், உன் தம்பி அல்லது தங்கையையும் இழந்து விடுவேனோ என்ற பயம் மனதில் நீடித்து கொண்டே இருந்தது.

கடவுள் கருணை!
நல்ல வேளையாக உன்னை இழந்தது போல், உன் உடன் பிறப்பை நான் இழக்கவில்லை. உனக்கு தம்பி பிறந்தது; உன் தம்பி நல்லபடியாக உருவாகி, பிறந்து என் கையில் அளிக்கப்பட்ட போது, அவன் பிறந்ததற்கு எத்துணை சந்தோசம் அடைந்தேனோ, அதை விட அதிகம் உன்னை இப்படி கையில் ஏந்தாமல் போனேனே என்ற வருத்தம் மனதில் இருந்தது.

நினைவுகள்!
உனக்கு என்று பார்த்து பார்த்து வாங்கிய பொம்மைகள், ஆடைகளை தம்பிக்கு பயன்படுத்தும் பொழுதும், அவற்றை பார்க்கும் பொழுதும் உன்னை பற்றி எண்ணாமல் என்னால் இருக்க முடியுமா என்ன? உன் சகோதரன் வளர்ந்து என்னை அணைக்கும் பொழுதும், அவனுக்கு கதைகள் கூறும் பொழுதும், நீ வயிற்றில் இருக்கையில் ஏற்பட்ட தொடுதலும், உனக்காக நான் கூறிய கதைகளும் என் நினைவுக்கு வந்து என்னை பாடாய் படுத்துவதை நீ அறிவாயா?

உனக்கு தெரியுமா?
நீ வயிற்றில் கருவாக உருவான தருணம், என் இதயத்தில் உனக்கென ஒரு இடம் ஒதுக்கப்பட்டது; அதை இன்று வரை யாரும் நிரப்பவில்லை. தம்பி பிறந்த பொழுது அவனுக்கு என்று தனி இடம் கொடுத்தேனே தவிர, உன் இடத்தை அப்படியே சேமித்து வைத்து இருக்கிறேன். இதயத்தில் இருக்கும் நீ இல்லாத அந்த வெற்று இடம் எனக்கு தரும் வேதனையை நீ அறிவாயா?! என் இனிய செல்வமே!

மறக்கவில்லை!
உன்னை கண்ணால் காணாமல் போய்விட்டேன்; ஆனால், உன்னை உணர்ந்த அந்த மூன்று மாதங்கள் என்றும் மறவாது. உன்னை என்றும் மறவேன் கண்மணி; உன் தந்தையும் உன்னை மறக்கவில்லை. உன்னை பற்றிய எண்ணமும், உன் மீதான எங்கள் பாசமும் என்றும் மாறாது; என்றும் மறையாது. உன் ஆத்மா சாந்தி அடைய வேண்டும். என்றும் நீ எங்களுடன் அதிர்ஷ்ட தேவதையாக, எங்களுக்கு வழி காட்டும் ஒளியாக இருக்க வேண்டும்.
என்றும் அன்புடன் - உன்னை கருவில் சுமந்து, உன்னை காண கொடுத்து வைக்காத அபாக்கியசாலி, உன் அம்மா.!



Click it and Unblock the Notifications