For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜங்க் உணவுகள் உட்கொள்வது கருத்தரிப்பை பாதிக்குமா?

ஜங்க் உணவுகள் இன்றைய வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாகி விட்டன; இந்த பதிப்பில் ஜங்க் உணவுகள் உட்கொள்வது கருத்தரிப்பை பாதிக்குமா என்று படித்து அறியலாம்.

|

ஜங்க் உணவுகள் இன்றைய வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாகி விட்டன; ஜங்க் உணவுகள் என்பது பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் எல்லாம் அத்தனை பிரசித்தி பெறவில்லை. சில வருடங்களாக இந்த துரித உணவு முறை பழக்கம் பரவ ஆரம்பித்து இப்பொழுது மூலை முடுக்கெங்கும் நிறைந்து காணப்படுகிறது.

eating more junk food causes less chance in conceiving a baby

இந்த பதிப்பில் அளவுக்கு அதிகமாக ஜங்க் உணவுகள் உட்கொள்வது கருத்தரிப்பை பாதிக்குமா என்று படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Recommended Video

பிரசவத்திற்கு பிறகும் வயிறு சிக்கென்று இருக்க வேண்டுமா?- வீடியோ
துரித உணவுகள்!

துரித உணவுகள்!

காலம் காலமாக உண்டு வந்த உணவு முறைகள் முதலில் மாற தொடங்கின; அதன் பின்னே பழக்க வழக்கம் மற்றும் கலாச்சாரம் போன்ற விஷயங்கள் மாற தொடங்கி, இப்பொழுது எது நம் திடமான உணவு முறை, எது நம் கலாச்சாரம், பண்பாடு என்ற கேள்விக்கே பதில் இல்லாமல் போய் விட்டது. எல்லாவற்றையும் முயன்று பார்க்க வேண்டும் என்று முன்னோர் கூறி சென்று உள்ளனர்.

வாழ்க்கையின் அங்கம்!

வாழ்க்கையின் அங்கம்!

அதே போல் இந்த உணவுகளையும் முயன்று பார்த்து விட்டு உடலுக்கு நல்லது இல்லை என அறிந்தவுடன் விட்டு விட்டிருக்க வேண்டும். ஆனால், அதையே ஒரு டிரண்டாக மாற்றி பாஸ்ட் புட், ஜங்க் புட் என்று மாடர்ன் பெயர் மூலம் இந்த உணவுகளுக்கு அந்தஸ்து அளித்து, நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் ஆக்கி விட்டோம். இதை நம்முடைய இளைய தலைமுறையினர் வாழ்க்கை முறையில் இருந்து பிரித்து வைப்பது மிகவும் கடினம் ஆகி விட்டது.

விளைவு என்ன?

விளைவு என்ன?

இந்த துரித உணவுகளை மேற்கொண்டதன் விளைவு என்ன தெரியுமா? முன்னோர்கள் நூறு வயதை தாண்டியும் நோய் நொடியின்றி வாழ்ந்தனர்; ஆனால், நாம் 50 வயதிற்கு உள்ளாகவே அனைத்து நோய்களையும் பெற்று அழிந்து போய் விடுகிறோம். சாதாரணமாக ஏற்படும் உணவு விஷம் அதாவது புட் பாய்சன் என்பதில் இருந்து தொடங்கி புற்றுநோய் வரை அனைத்து வகை நோய்களையும் அளவில்லாமல் நம் உடலில் ஏற்படுத்துகின்றன இந்த துரித உணவுகள்!

அறியப்படாத விளைவு!

அறியப்படாத விளைவு!

துரித உணவுகளால் வரும் பாதிப்புகளை ஓரளவுக்கு அறிந்தும் அவற்றை பின்பற்றி கொண்டு இருக்கும் நமக்கு தெரியாத ஒரு விஷயம் உண்டு. அது தான் துரித உணவுகளால் ஏற்படும் முக்கிய விளைவு; இந்த விளைவை பற்றி பெரும்பாலானோர் அறிந்து இருப்பது இல்லை.

இந்த ஜங்க் உணவுகளை அதிகமாக உண்டு வருவது நாளைய தலைமுறை என்ற ஒரு விஷயத்தையே முற்றிலுமாக அழித்து, மனித இனம் என்பதையே முற்றிலும் அழிக்க வல்லதாக திகழ்கிறது.

மேலும் படிக்க: கணவருடன் கலவுதலின் பொழுதே குழந்தையை பிரசவித்த பெண்ணின் கதை!

தாய்மையை தடுக்கும்!

தாய்மையை தடுக்கும்!

பெண்கள் அளவுக்கு அதிகமாக துரித உணவுகளை உட்கொள்வது அவர்களின் கருப்பையை பாதிக்கும் என்றும், இந்த துரித உணவுகளை அன்றாடம் உண்பது அவர்களின் கருத்தரிக்கும் திறனையே முற்றிலும் அழித்து விடும் என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வில் கூறியது இப்பொழுது கண்கூடாகவே நடைபெற ஆரம்பித்து விட்டதாக மருத்துவர்களும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஆண்மையை அழிக்கும்!

ஆண்மையை அழிக்கும்!

பெண்களின் உடலில் கருத்தரிக்கும் திறனை அளிப்பது போல, ஆண்களின் உடலில் ஆண்மையின் அடையாளத்தையே அழித்து ஒழித்து விடும் அளவுக்கு ஜங்க் உணவுகள் சக்தி வாய்ந்த அழிவு ஊக்கியாக விளங்குகின்றன. இந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டு வரும் ஆண்கள் தங்கள் சந்ததியை உண்டு செய்ய இயலாத ஒரு நிலை உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆணித்தனமாக கூறி உள்ளனர்.

நமது பொறுப்பு!

நமது பொறுப்பு!

ஆகவே நண்பர்களே! துரித உணவுகளை உண்பதனால் ஏற்படும் விளைவுகளை தெளிவாக அறிந்த பின்னும் கூட நாம் அந்த பழக்கத்தை விடாது மேற்கொண்டு வருகிறோம். நம்மை பார்த்து நம்முடைய குழந்தைகளும் இந்த உணவு வகைகளுக்கு அடிமையாகி வருகின்றனர். இதை தடுத்தி நிறுத்தி, அழிந்து கொண்டு இருக்கும் நம் மனித சமுதாயத்தை, நம்முடைய சந்ததியை காக்க வேண்டியது நமது பொறுப்பு ஆகும்.

செய்ய வேண்டியது என்ன?

செய்ய வேண்டியது என்ன?

இனி மேலாவது துரித உணவுகளை உண்ணாமல், நம்முடைய பாரம்பரிய இயற்கை உணவுகளை, பச்சை காய்களை மற்றும் பழங்களை உண்டு பலன் பெற பாடுபடுவோமாக! இத்தனை நாட்கள் நம்முடைய தவறான உணவு பழக்கத்தால் ஏற்பட்ட கேடு விளைவிக்கும் மாற்றங்களையும், துரிதமாக இயற்கை உணவு பழக்க முறைக்கு மாறுவதன் மூலம் விரைவில் சரி செய்து நலமுடன் வாழ்வோமாக என்று கேட்டுக் கொண்டு உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்! நன்றி! வாழ்க வளமுடன்!

மேலும் படிக்க: நான் கருப்பி, குண்டு.., அதனால என்ன இப்போ? 37 வயசாகியும் கல்யாணம் ஆகல... - My Story #306

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eating More Junk Food Causes Less Chance In Conceiving A Baby

Eating More Junk Food Causes Less Chance In Conceiving A Baby
Desktop Bottom Promotion