For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்கள் தள்ளிப் போகிறது? கர்ப்ப பரிசோதனை நெகடிவ்வா? சாப்பிடும் இது தான் காரணம்!

நாட்கள் தள்ளிப் போகிறது? கர்ப்ப பரிசோதனை நெகடிவ்வா? சாப்பிடும் இது தான் காரணம்!

By Lakshmi
|

Recommended Video

கர்ப்பம் தரிக்காமல் இருக்க இதுவும் காரணமாக இருக்கலாம் !!- வீடியோ

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும்.. ஏனென்றால் கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே இருக்கும் அந்த உணர்வுகளை ஆண்களால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.. குழந்தை கருவில் இருக்கும் போதே தாயுக்கும் சேய்க்கும் உண்டான உரையாடல்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன..

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொள்ள சில பரிசோதனைகள் தேவைப்படுகின்றது. முதலில் எல்லாம் பெண்கள் கர்ப்பமாக இருக்கிறோமா என்பதை உறுதி செய்து கொள்ள நாட்கள் தள்ளிப் போகும் போது எல்லாம் மருத்துவரை நாடி சென்றார்கள்.. ஆனால் இப்போது பெண்கள் கர்ப்பமாக இருக்கிறோமா என்ற சந்தேகம் வந்த உடனேயே கர்ப்பத்தை பரிசோதிக்கும் கருவியை பயன்படுத்தி தனது கர்ப்பத்தை உறுதி செய்து கொள்கின்றனர்..

இந்த கர்ப்பத்தை கண்டறிய உதவும் கருவியானது 1976-ல் தான் கண்டறியப்பட்டது. இது விலை மலிவானதும் கூட.. ஆனால் சிலருக்கு நாட்கள் தள்ளிப் போகும் காரணத்தினால் அவர்கள் கர்ப்ப பரிசோதனை செய்யும் போது ரிசல்ட் நெகட்டிவ்வாக வருகிறது.. நாட்கள் தள்ளிப்போகிறது ஆனால் கர்ப்ப பரிசோதனையில் நெகட்டிவ் என காட்டுகிறது என்றால் அதன் பின்னனியில் என்ன காரணம் இருக்கும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. குறைவான ஹார்மோன் அளவு

1. குறைவான ஹார்மோன் அளவு

சில சமயங்களில் நீங்கள் கர்ப்பமாக இருந்தாலும் கூட, உங்களுடையை கர்ப்பத்திற்கான ஹார்மோன் (HCG) குறைவாக இருந்தால் அதனை வீட்டில் செய்யப்படும் கர்ப்ப பரிசோதனை கருவியின் மூலமாக கண்டறிய முடியாது.

முதல் மாதத்தில் நாட்கள் தள்ளிப் போனால், நீங்கள் ஒரு மாத கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட முடியாது. நீங்கள் மாதவிடாய் முடிந்த 13 நாட்களில் கூட கர்ப்பமாகி இருக்கலாம்.. அப்படி இருக்கும் போது நீங்கள் இரண்டு வார கர்ப்பமாக தான் இருக்க முடியும். இப்படி நீங்கள் முந்தைய மாதவிடாய்க்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து கர்ப்பமாகியிருந்தால் உங்களது HCG ஹார்மோன் குறைவாக தான் இருக்கும் இதன் காரணமாக ரிசல்ட் நெகட்டிவாக வரலாம்.

2. இடம் மாறிய கர்ப்பம்

2. இடம் மாறிய கர்ப்பம்

இடம் மாறிய கர்ப்பம் நிகழ்ந்திருந்தாலும் உங்களுக்கு கர்ப்ப பரிசோதனை கருவியில் நெகட்டிவ் என்று தான் காட்டும். ஆனால் இது போன்ற கர்ப்பமானது 3% மட்டுமே நிகழக் கூடியது.

கீழ்க்காணும் அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் மருத்துவரின் உதவியை நாட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

1. ஒரு புற அடிவயிறு வலி, அல்லது அடிவயிற்றில் வலி

2. அதிக சோர்வு

3. உதிரப்போக்கு உண்டாதல் அல்லது இரத்தம் துளித்துளியாக வெளியேறுதல்

4. தலைசுற்றல் மற்றும் வாந்தி

3. வாழ்க்கை முறை

3. வாழ்க்கை முறை

உங்களது தினசரி வாழ்க்கை முறையானது உங்களது மாதவிடாய் சுழற்சியை தள்ளிப் போடலாம். உதாரணமாக மன அழுத்தம் கூட உங்களது மாதவிடாய் சுழற்ச்சியை தள்ளிப் போடும். உணவு விஷயங்களும் கூட உங்களது மாதவிடாய் சுழற்சியை தள்ளிப் போட காரணமாக அமையலாம்.. உதாரணமாக நீங்கள் அதிகப்படியான காபி அல்லது காபின் பொருட்களை உட்க் கொள்வது அல்லது போதுமான அளவு உணவு உட்க்கொள்ளாமல் இருப்பது போன்றவை.

4. தாய்ப்பால் கொடுப்பது

4. தாய்ப்பால் கொடுப்பது

தாய்ப்பால் கொடுப்பது கூட உங்களது ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு ஒரு காரணமாக இருக்கலாம். உங்களுக்கு குழந்தை பிறந்ததும் மாதவிடாய் வந்தாலும் கூட, அது முன்பை போல முறையான மாதவிடாய் சுழற்சியாக மாற சிறிது காலம் எடுத்துக் கொள்ளும்.

குழந்தையின் வளர்ச்சியும் கூட மாதவிடாய் தள்ளிப் போக ஒரு காரணமாக அமையலாம். உதாரணமாக, குழந்தை வளரும் போது தாய்ப்பால் அதிகமாக உட்க்கொள்ளலாம்.. இதனால் உங்களது மாதவிடாய் ஒழுங்கின்மையாக இருக்கும்.

5. உடல் பிரச்சனைகள்

5. உடல் பிரச்சனைகள்

சில உடல் நல பிரச்சனைகளும் கூட உங்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போக காரணமாக இருக்கலாம். இது PCOS அல்லது தைராய்டு பிரச்சனைகளாலும் கூட தள்ளிப் போகலாம். இந்த பிரச்சனைகளால் தான் பெரும்பான்மையான பெண்களுக்கு நாட்கள் தள்ளி போதல், சீக்கிரமாகவே மாதவிடாய் உண்டாதல், அதிகமான உதிரப்போக்கு, குறைவான உதிரப்போக்கு, சில மாதங்களுக்கு மாதவிடாய் வராமலே இருப்பது போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

 6. மெனோபாஸ்

6. மெனோபாஸ்

மெனோபாஸ் என்பது பொதுவாக 50 வயதுகளில் பெண்களுக்கு வரக்கூடிய ஒன்று. இந்த கால கட்டத்திற்கு பிறகு பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி ஏற்படாது. ஆனால் சிலருக்கு 40 வயதிற்கு முன்னரே இந்த மெனோபாஸ் வந்துவிடுகிறது. இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். உங்களுக்கு 90 நாட்களாக மாதவிடாய் சுழற்சி ஏற்படாமலும், நீங்கள் கர்ப்பமாக இல்லாமலும் இருந்தால் நீங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.

7. மருந்துகள்

7. மருந்துகள்

கர்ப்பத்தடை கூட மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் மற்ற வகையான மருந்துகள் சிலவும் மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று அமைவதற்கு காரணமாக உள்ளது. உதாரணமாக, இரத்த சர்க்கரைக்கான மாத்திரைகள் மற்றும் அலர்ஜிக்கான சில மருந்துகளும் கூட மாதவிடாய் ஒழுகின்மைக்கு காரணமாக அமைகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes of Negative Pregnancy Test with No Periods

Causes of Negative Pregnancy Test with No Periods
Story first published: Wednesday, January 3, 2018, 18:24 [IST]
Desktop Bottom Promotion