Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
உடலுறவு கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ள உதவும் சில விசித்திர வழிகள்!
ஒரு குழந்தையை பெற்று எடுத்து தாய்மையை உணர விரும்பும் பெண்களுக்காக இந்த காலகட்டம் பல வழிகளை, பலவிதமான வாய்ப்புகளை நல்குகிறது. இந்த பதிப்பினில் உடலுறவு கொள்ளாமலே குழந்தை பெற்றுக் கொள்வது எப்படி என்று இங
அன்றைய நாட்களில் வாழ்ந்த மக்கள் குழந்தை பெற்றுக்கொள்ள உதவும் வழிகள் இரண்டே இரண்டு தான் என்று நம்பினர்; அதில் ஒன்று கலவி கொள்தல், மற்றொன்று கோவில் - குளம் சென்று குழந்தை வரம் வேண்டி வழிபட்டு காத்திருத்தல். இந்த இரண்டு முறைகளும் அந்தக் காலம் தொடங்கி இந்தக் காலம் வரை இன்னமும் மக்களால் பின்பற்றப்பட்டு வழக்கில் இருந்து வருகிறது.

குழந்தை பெற்றுக்கொள்ள உதவும் முதல் மற்றும் முக்கிய வழிமுறை உடலுறவு அதாவது கலவி தான். ஆனால், மனைவிக்கோ கணவருக்கோ ஏதேனும் உடல் குறைபாடு இருக்கும் பட்சத்தில், தம்பதியருக்கு அல்லது தம்பதியரில் ஒருவருக்கு உடலுறவில் அதிக நாட்டம் இல்லாத பட்சத்தில், திருமணமே செய்யாமல், கலவியே கொள்ளாமல் ஒரு குழந்தையை பெற்று எடுத்து தாய்மையை உணர விரும்பும் பெண்களுக்காக இந்த காலகட்டம் பல வழிகளை, பலவிதமான வாய்ப்புகளை நல்குகிறது.
இந்த பதிப்பினில் உடலுறவு கொள்ளாமலே குழந்தை பெற்றுக் கொள்வது எப்படி என்று இங்கு படிக்கலாம்!

சரோகசி முறை - வாடகைத்தாய்
சரோகசி என்று கூறப்படும் வாடகைத்தாய் முறையில், உடலுறவு கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். வாடகை தாய் முறை என்பது தங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத தம்பதியர் மருத்துவர் உதவியுடன் வேறு ஒரு பெண்ணை கண்டுபிடித்து, அந்த பெண்ணிடம் குழந்தை பெற்றுக் கொடுக்க சம்மதமா என்று கேட்கப்படும்; வாடகைத் தாய்க்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண் கண்டிப்பாக தன் சுய நினைவோடு விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

விருப்பம் தெரிந்த பின்..?
அப்பெண் சம்மதம் தெரிவித்தால் பின்பு குழந்தையை கருத்தரிக்க செய்ய கணவன் மற்றும் மனைவி உடலில் இருந்து விந்து மற்றும் அண்டம் முட்டைகள் எடுக்கப்பட்டு, அந்த பெண்ணின் கருவறையில் செலுத்தப்படும். இந்த முறை ஒரே முறையில் வெற்றி அடைவது கடினம். ஓரிரு முறைகள் இது போல் முயன்றால், குழந்தையை வாடகை தாயின் வயிற்றில் கருத்தரிக்க செய்து விடலாம்.
இந்த முறையில் ஈடுபடும் பெண்கள் பணத்தேவை, சேவை மனப்பான்மை - உதவும் மனப்பான்மை அல்லது வேறு ஏதேனும் ஆதாயம் போன்ற காரணங்களுக்காக தம்பதியர்களின் வாரிசை உருவாக்க சரோகசியாக இருக்கலாம். இந்த முறையில் குழந்தையை பெற்று எடுக்க போகும் அந்த வாடகைத்தாய் எந்தவித உடலுறவு நிகழ்விலும் ஈடுபடுவதில்லை.

குழாய் குழந்தை
குழந்தையை ஒரு சோதனைக் குழாயில் கருத்தரிக்க செய்வதை குழாய் குழந்தை கருத்தரிப்பு அல்லது சோதனைக்குழாய் குழந்தை கருத்தரிப்பு என்கிறோம்; அந்த முறையில் பிறந்த குழந்தைகளும் குழாய் குழந்தைகள் அல்லது சோதனைக்குழாய் குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த முறையில் உடலுறவு என்பதற்கு துளி அளவு கூட அவகாசமோ, அவசியமோ இல்லை.
இந்த முறையை கருப்பை பலவீனமாக உள்ள பெண்களுக்கு, அதாவது கருத்தரித்தல் அதிக முறை தடைபட்டு, கருக்கலைப்பு ஆன பெண்களின் குறையை தீர்க்க கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கருக்கலைப்பு உருவாக மட்டும் பிரச்னை இருந்து, கரு உருவான பின் பெண்ணின் கருப்பையில் ஆரோக்கியமான வளர்ச்சியை கருவிற்கு அளிக்க முடியுமானால் இந்த முறையை பின்பற்றலாம்.

எப்படி கருத்தரித்தல் நிகழ்கிறது?
சோதனைக் குழாய் கருத்தரிப்பில், ஆண் மற்றும் பெண்ணின் உடலில் இருந்து விந்து மற்றும் அண்ட முட்டைகள் பெறப்பட்டு, ஒரு சோதனைக் குழாயில் இடப்படுகின்றன. அந்தக் குழாயினுள் முட்டைகள் இரண்டும் ஒன்றொரு ஒன்று சேர்ந்து குழந்தை கருத்தரிப்பு உண்டாகிறது. ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை கரு முட்டைகள் அடைந்தவுடன், அம்முட்டைகளை மீண்டும் தாயின் அதாவது தம்பதியரில் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் விடப்பட்டு, சாதாரண குழந்தை கருத்தரித்து வளர்வது போல் வளர்க்கப்படுகிறது.

விந்து தானம்
ஆண்களில் விந்துக்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை, ஆண்மைக்குறைவு, வளமற்ற விந்துக்கள், விந்துக்களின் குறைந்த வாழ்நாள், விந்துகளின் குன்றிய செயல்பாடு போன்ற பிரச்சனைகள் இருந்து, பெண்ணின் உடல் ஆரோக்கியமாக இருந்தால், விந்துக்களை சேகரித்து வைத்திருக்கும் விந்து வங்கியில் இருந்து, மருத்துவர்களின் உதவுடன் விந்து தானம் பெற்று கருத்தரிக்க முயலலாம்.
ஆனால், இதற்கு தம்பதியரில் கணவன் மற்றும் மனைவி இருவரின் சம்மதமும் மிகவும் முக்கியம்; ஏனெனில் விந்து வேறொரு நபருடையது என்பதால், குழந்தையின் குணாதிசயங்களில் எந்த நபர் மற்றும் மனைவி இவர்களின் குணம் மட்டுமே வெளிப்படும்; வளர்ப்பின் மூலம் உங்களுக்கேற்றவாறு குழந்தையின் குணத்தை உங்களால் மாற்ற முடியும்.

எப்படி நிகழும்?
இந்த முறையில் அனைவரின் சம்மதமும் கிடைத்த பின், தானமாக பெறப்பட்ட விந்துகள் பெண்ணின் பிறப்புறுப்பில் சரியாக கருப்பையை நோக்கி செல்லுமாறு உள் செலுத்தப்படும். அந்த சமயத்தில், பெண்ணின் கருப்பையில் அண்டம் தயார் நிலையில் இருந்தால் உடனே கருத்தரிப்பு நிகழும். இதை சரியாக கருப்பை மற்றும் அண்டம் இவற்றின் நிலை சரியானதாக இருக்கும் பொழுது, நிகழ்த்தினால் 100 சதவிகித வெற்றியை அடையலாம்.

கருப்பை உட்செலுத்துதல்
இது மற்றொரு கருத்தரித்தல் முறை. இந்த முறையில் ஆணின் வளம் குன்றிய விந்துக்கள் வெளியில் எடுக்கப்பட்டு, ஒரு சோதனைக்குழாயில் போடப்படும். பின் அந்தக் குழாயில் விந்துக்கள் சுகாதாரமாக, ஆரோக்கியமாக கருத்தரிப்பை நிகழ்த்தும் பலம் பெரும் வரை வளர்க்கப்படும்.
பின் பெண்ணின் மாதவிடாய் நாட்களை அனுசரித்து, பெண்ணின் கருப்பையில் கருமுட்டை தயார் நிலையில் இருக்கும் நாளினை கணித்து, குழாயில் ஆரோக்கியமான வளர்ச்சி பெற்ற ஆண்களின் விந்துக்களை நேரடியாக பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி, கருத்தரிப்பு நிகழ்வை ஊக்குவிக்கலாம். அனைத்தும் சரியாக நடத்தப்பட்டால், இந்த முறையிலும் நல்ல வெற்றி வாய்ப்பை பெற முடியும்.

உள்நுழைத்தல் இல்லாத கருத்தரிப்பு
தம்பதியர் இருவரில் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ உடலுறவு மீது நாட்டம் இல்லாமல் இருந்தால், உடலுறவின் உள் நுழைத்தல் நிகழ்வில் பிரச்சனை இருந்தால், பெண்ணினால் உள் நுழைத்தலை தாங்கி கொள்ள முடியவில்லை எனில் அல்லது ஆணின் பிறப்புறுப்பு மிகவும் சிறிதாக இருந்தால் - இந்த மாதிரியான காரணங்கள் அல்லது பிரச்சனைகள் இருந்தால், தம்பதியர் ஸ்பிளாஷ் உடலுறவு முறையை மேற்கொள்ளலாம்.

ஸ்பிளாஷ் உடலுறவு
ஸ்பிளாஷ் உடலுறவு முறை என்பது உள் நுழைத்தல் இல்லாமல் நடைபெறும் கலவி முறையாகும். இந்த முறையில் ஆணும் பெண்ணும் கலவி கொள்வதில் இருக்கும் அனைத்து செயல்பாடுகளிலும் ஈடுபடுவர்; ஆனால், உள்நுழைத்தல் மட்டும் செய்ய மாட்டார்கள். அதற்கு பதிலாக, உடலுறவு உணர்வால் ஆணின் உடலில் இருந்து வெளியேற்றப்படும் விந்தணுக்கள் நிறைந்த திரவம் நேரடியாக பெண்ணின் பிறப்புறுப்பு வாயில் விடப்படும். இது சாதாரண முறையில், உள்நுழைத்தலால் நிகழும் கருத்தரிப்பை போலவே கருத்தரித்தல் நிகழ்வை ஏற்படுத்தும்.
இந்த முறை மற்ற அனைத்து முறைகளை காட்டிலும் மிகச்சிறந்தது. வேறு ஏதேனும் முறையை மேற்கொள்ள எண்ணும் முன், இந்த முறையை ஒருசில முறை முயற்சித்து பார்த்து, பலன் அளிக்கவில்லை எனில் வேறு முறையை முயற்சிக்க எண்ணலாம்.



Click it and Unblock the Notifications











