Latest Updates
-
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கர்ப்ப காலத்தில் மல்லாந்து படுத்தால் குழந்தை இறந்து பிறக்குமாம் - வேறு எப்படி படுக்கவேண்டும்?
பெண்கள் மல்லாக்கப் படுத்திருந்தால் குழந்தை பிறப்பதில் சிரமம் உண்டாகும் என்ற ஆய்வு முடிவு மற்றும் அதுபற்றிய விவாதங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
கர்ப்ப காலத்தில் பெண்கள் மல்லாக்க படுப்பதால் குழந்தைக்கு ஏற்படும் அபாயம்
பெண்களுக்கு கர்ப்ப காலம் தொடங்கி விட்டாலே சேயுடன் சேர்ந்து தினசரி தாங்கள் செய்யும் நடவடிக்கைகளிலும் மிகுந்த கவனம் வேண்டும். கர்ப்ப காலத்தில் மல்லாக்க மற்றும் குப்புற படுத்து உறங்குவது என்பது முற்றிலும் தவறான விஷயம்.

இப்படி மல்லாக்க படுத்து உறங்குவது சில சமயங்களில் கருச்சிதைவை கூட ஏற்படுத்தக் கூடும். மேலும் குழந்தை குறை மாதத்திலேயே இறக்கக் கூட நேரிடலாம்.

ஆராய்ச்சி தகவல்கள்
மகப்பேறியல் மற்றும் பெண்ணோயாலஜி குறித்து பிரிட்டன் இதழில் வெளியிடப்பட்ட தகவல் படி கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் மல்லாக்க படுத்து உறங்குவது 28 வாரத்திற்குள் 2.3 மடங்கு அபாயத்தை விளைவிக்கிறது என்று கூறுகிறார்.

குழந்தைக்கு அழுத்தம்
இப்படி தாய்மார்கள் மல்லாக்க படுக்கின்ற சமயத்தில் குழந்தையின் மொத்த எடை இரத்த குழாய்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் மல்லாக்க படுக்கும் போது குழந்தைக்கு போதுமான இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் செல்வதில்லை. இதை கண்டிப்பாக தாய்மார்கள் புரிந்து கொள்வதோடு கவனமாக செயல்பட வேண்டும் என்று அலெக்சாண்டர் Heazell, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், ஒரு பிபிசி சேனல் பேட்டியில் கூறியுள்ளார். எனவே தூங்க போற நிலை மிகவும் முக்கியம் என்கிறார் அவர்.

தூங்கும் நிலை
இந்த ஆராய்ச்சி குறித்து கிட்டத்தட்ட 1000 தாய்மார்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் தூங்கும் நிலையை பகிர்ந்து கொண்டனர்.

அபாயம்
இதிலிருந்து தெரிய வந்தது என்னவென்றால் மல்லாக்க படுக்கும் தாய்மார்கள் மற்ற தாய்மார்களை காட்டிலும் இரு மடங்கு குழந்தை பிறப்பு அபாயத்தை கொண்டுள்ளனர். எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் இடது புறமாக ஒரு பக்கமாக சாய்ந்து படுக்க வேண்டும்.

குழந்தை பிறப்பு
அதுமட்டுமல்லாமல் பிரசவம் முடியும் வரை தாய்மார்கள் குறைந்த மற்றும் நீண்ட தூக்கத்தை பெறுகின்றனர். எப்பொழுதும் பாத்ரூமிலேயே இருக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதனால் அவர்களின் தூக்கம் இரவிலும் பகலிலும் கெடுகிறது.



Click it and Unblock the Notifications
