For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வர வர உடலுறவில் ஈடுபாடே இல்லாம இருக்கா? இது தான் காரணமாம்!

உடலுறவில் ஈடுபாடு குறைய காரணம் என்ன என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi
|

உடலுறவு என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அனைவருக்கும் உடலுறவு சம்பந்தப்பட்டவற்றை படிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். படித்தவற்றை முயன்று பார்ப்பதும், பல இடங்களுக்கு சென்று, புதுப்புது இடங்களில் புதுவித சுகத்தை அனுபவிப்பது அனைவருமே விரும்பும் ஒன்று தான். ஆனால் பலருக்கு நாட்கள் செல்ல செல்ல உடலுறவு மீதான நாட்டம் ஏனோ குறைந்து கொண்டே வருகிறது..! அது எதனால் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஆண்கள் மற்றும் பெண்களிடம் உடலுறவு சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் 4,839 ஆண்கள் மற்றும் 6,669 பெண்களும் கலந்து கொண்டனர். இவர்களது வயது வரம்பானது 18 முதல் 74 வயது வரை ஆகும். இவர்கள் ஒரு வருடமாக உடலுறவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ஆய்வு முடிவு

ஆய்வு முடிவு

இந்த ஆய்வின் முடிவானது மிகவும் அதிர்ச்சிகரமான ஒன்றாக இருந்தது. அது என்னவென்றால், ஆண்களில் 15 சதவீதத்தினரும், பெண்களில் 34 சதவீதத்தினரும் உடலுறவு மீது ஈடுபாடு இல்லாமல் இருக்கின்றனர் என்பது தெரியவந்தது.

காரணம்

காரணம்

முக்கிய காரணம் என்னவென்றால், உடலுறவில் உள்ள ஈடுபாடு குறைய காரணமாக இருப்பது வயது, உடல் மற்றும் மன ஆரோக்கியம் தான்.

பாலியல் நோய்கள்

பாலியல் நோய்கள்

மேலும் பாலியல் நோய்கள் கூட உடலுறவில் விருப்பம் இல்லாமல் போவதற்கு காரணமாக இருக்கின்றன. உடலுறவு மூலம் பரவும் நோய்களும், முன்னர் ஏற்பட்ட பாலியல் வற்புறுத்தல்களும் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போவதற்கு முக்கிய காரணமாம்.

உணர்வுகள்

உணர்வுகள்

கடந்த காலங்களில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்தவர்களுக்கும், பாலியலில் கசப்பான அனுபவத்தை கொண்டவர்களுக்கும் தனது துணையுடன் உடலுறவு ரீதியாக இணைவதில் சிக்கல் உண்டாகிறதாம்.

அறிவுரை

அறிவுரை

உடலுறவில் நாட்டம் குறைந்தவர்களுக்கு, வல்லுனர்கள் சுயஇன்பம் மற்றும் உடலுறவுக்கு முன் விளையாட்டுகள் ஆர்வத்தை படிப்படியாக தூண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அடிப்படை ஆரம்பம்!

அடிப்படை ஆரம்பம்!

சில அடிப்படை விஷயங்களை உங்களது துணையிடம் செய்வது நல்ல தொடக்கமாக இருக்கும். கைகளை பிடித்துக்கொள்ளுதல், தொடுதல்கள் மூலம் காதலுடன் பேசிக்கொள்வது ஆகியவை உடலுறவு மீது ஆர்வம் வருவதற்கு அடிப்படையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

why people lose interest in sex

why people lose interest in sex
Story first published: Saturday, October 7, 2017, 12:13 [IST]
Desktop Bottom Promotion