எனக்கு உடலுறவு என்றாலே பயம்! - காரணம் எனது முன்னால் காதலன்!

Written By:
Subscribe to Boldsky

உடலுறவு என்பது வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்ல. இது மனம் சார்ந்ததும் கூட தான். உடலுறவில் மனதின் பங்கு அதிகம் என்று கூட சொல்லலாம். தாம்பத்திய உறவின் மீது நாட்டம் இல்லாமல் போனால், வாழ்க்கையின் கோணமே மாறிவிடும். இந்த பகுதியில் இது சம்பந்தப்பட்ட ஒருவரின் வாழ்வில் நடந்த உண்மை கதையை பற்றி காணலாம்.

எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகப்பெரிய பிரச்சனை இது.. இது ஒரு பிரச்சனை என்று அறியாமலே கூட என் வாழ்வின் சில வருடங்களை நான் கழித்துவிட்டேன். என்னை போலவே வேறு யாருக்கும் இது போன்ற நிலை இருந்தால் அதிலிருந்து அவர்கள் விரைவில் மீண்டு வர வேண்டும் என்பதற்காக மட்டுமே இதனை நான் எழுதுகிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடும்பம்

குடும்பம்

எங்களுடைய குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பமாகும். அம்மா, அப்பா, அண்ணன், தாத்தா, பாட்டி இவர்களுடன் நான் வசித்து வருகிறேன். எனக்கு உடலுறவு பற்றிய அறிவு எல்லாம் அவ்வளவாக இல்லை. நான் பாலியல் பலாத்காரம் என்ற வார்த்தையையே எனது 13 வயதில் தான் கேட்டேன். அப்போது கூட இதனை பற்றிய முழு விவரம் தெரியாது. உடைகளை கிழித்து எறிவது என்பது மட்டும் தான் தெரியும்.

உடலுறவு

உடலுறவு

எனது காதில் இந்த உடலுறவு என்ற வார்த்தையே முதன்முதலில் எனது உயிரியல் பாடத்தின் போது தான் காதில் விழுந்தது. இதுவரையில் நான் உடலுறவு பற்றி எல்லாம் எனது பெற்றோர்களிடம் பேசியது கிடையாது. இது ஒரு தவறான வார்த்தை.. இது உபயோகப்படுத்தக் கூடாத ஒரு வார்த்தை என்று தான் நினைத்திருந்தேன்.

கல்லூரி பருவம்

கல்லூரி பருவம்

நான் பள்ளிப்பருவத்தை முடித்துவிட்டு, கல்லூரிக்கு சென்ற காலம் அது.. எனக்கு காதலிக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லாம் ஒன்றும் இல்லை... என்னை எல்லாம் யாரும் காதலிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் என் மனதில் இருந்தது. ஒரு நல்ல உடை அணிந்து கூட பள்ளிக்கு செல்ல மாட்டேன். எனது உருவத்தை கண்ணாடியில் பார்க்க கூட எனக்கு பிடிக்காது. நான் அழகானவள் இல்லை என்ற எண்ணம் எனது மனதில் இருந்தது.

புது வார்த்தைகள்

புது வார்த்தைகள்

எனது கல்லூரி பருவத்தில், எனது உடன் படிப்பவர்களின் பேச்சில் இருந்து தான், உடலுறவை பற்றிய சில விஷயங்கள் மற்றும் சில வார்த்தைகளையே அறிந்து கொண்டேன். நாட்கள் நகர்ந்தன. எனது கல்லூரி இறுதி ஆண்டு வந்தது, நானும் காதலில் விழுந்தேன்.

கனவு காதலன்

கனவு காதலன்

என் கனவிலும் அவன் என்னை எல்லாம் பார்ப்பான் என்று கூட நினைத்ததில்லை. அவன் எனக்கு சீனியர். எங்களது தொடர்பு பேஸ் புக் வாயிலானதாக இருந்தது. அவனே என்னிடம் பேசினான். நாங்கள் இருவரும் அடிக்கடி காபி ஷாப் செல்வது, சினிமாவிற்கு செல்வது என்றிருந்தோம். பிறகு நான் கண்ட கனவு பலித்தது.

அவனே என்னிடம் ஒரு நாள் வந்து தன் காதலை தெரிவித்தான். என் மேல் கூட ஒருவருக்கு காதல் வருமா என்று ஆச்சரியமாக இருந்தது. எனக்கு வானத்தில் மிதப்பது போல இருந்தது. நான் அவனிடம் உடனடியாக மெய்மறந்து ஓகே சொல்லிவிட்டேன். அதன் பின்னர் தான் நான் என்ன சொன்னேன் என்பதையே உணர்ந்தேன்

தனிமையில் செய்த தவறு

தனிமையில் செய்த தவறு

ஒரு நாள் மாலை, எனது வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரு திருமணத்திற்காக ஊருக்கு சென்றுவிட்டார்கள். எனக்கு அடுத்த நாள் எக்ஸாம் இருந்ததால் நான் வீட்டில் இருந்தேன். நாங்கள் இருவரும் எங்களது வீட்டில் சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம். எனக்கு மிகவும் கூச்சமாகவும், பயம் மற்றும் பதட்டமாகவும் இருந்ததால், நான் ஒரு முழு பீரையும் குடித்தேன். அவனும் குடித்தான். நாங்கள் உடலுறவு கொண்டோம். அந்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஒரு வாரம் கடந்த பிறகு தான் எனக்கு அவனுக்கு இன்னொருவருடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அவன் என்னை கண்டுகொள்ளவே இல்லை. எனது அழைப்புகளுக்கு எல்லாம் பதில் வரவே இல்லை. அவன் என்னை ஏமாற்றியதை உணர்ந்தேன்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

நான் கர்ப்பமாக இருந்தேன். அந்த கர்ப்பத்தை கலைக்க எனது சேமிப்புகள் அனைத்தையும் செலவழித்தேன். மூன்று மாத காலம் சிகிச்சையும் எடுத்துக்கொண்டேன். அந்த மூன்று கால வாழ்க்கை எனக்கு இருட்டானதாக இருந்தது. எனக்கு பல வலிகளை உணர்த்தியது. நான் உடைந்து போனேன்..! எனது வலிகளை பகிரவும், எனக்கு உதவவும் எனதருகில் யாருமே இல்லை.. அப்போது தான் எனக்கு உடலுறவின் மீது வெறுப்பு உண்டாக தொடங்கியது..

மீண்டும் ஒரு காதல்

மீண்டும் ஒரு காதல்

முதல் காதல் முடிந்த ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் ஒருவரை காதலிக்க தொடங்கினேன். அந்த காதல் முழுதாக ஒரு மூன்று மாதங்கள் கூட நீடிக்கவில்லை. நான் ஆண்கள், காதல், காதல் படங்கள், காதல் பாடங்கள், காதலிப்பவர்கள், காதலை பற்றி பேசுபவர்கள் என அனைத்தையும் வெறுத்து, அதிலிருந்து ஒதுங்கியே இருந்தேன். எனக்கு மீண்டும் என் தோற்றம் மற்றும் என் மீது நம்பிக்கை இல்லாமல் போனது. எனக்கு உடலுறவை வெறுக்கும் மனநோய் உள்ளதை உணர ஆரம்பித்தேன்.

புதிய தோழி..!

புதிய தோழி..!

பிறகு, நான் எனது கல்லூரி ஃபுராஜெக்ட் மற்றும் புது அலுவலகம், புது வேலை என்று பிஸியாகிவிட்டேன். எனக்கு அலுவலகத்தில் ஒரு நல்ல தோழி கிடைத்தாள். அவள் என்னுடன் மிக நெருக்கமாக பழகினாள். அவளது தனிப்பட்ட வாழ்க்கை, கஷ்டம், மகிழ்ச்சி என அனைத்தையும் பற்றி என்னிடம் பகிர்ந்து கொள்வாள். அவளுடனான ஆறு மாத நட்பிற்கு பிறகு நான் எனது கல்லூரி காதல், கருக்கலைப்பு, எனக்கு இருக்கும் உடலுறவின் மீதான வெறுப்பு என அனைத்தையும் பற்றி அவளிடம் கூறினேன்.

நான் இருக்கிறேன்

நான் இருக்கிறேன்

நான் எனது கஷ்டங்களை எல்லாம் அவளிடம் கூறியவுடன் அவள் என்னை புரிந்து கொண்டாள். அவளது கண்கள் நான் உனக்காக இருக்கிறேன் என்று கூறின. எனக்கு இருப்பது மன ரீதியான பிரச்சனை என்று கூறி, என்னை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்தாள். சில மாதங்களிலேயே நான் இயல்பு நிலைக்கு திரும்பினேன்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

மகிழ்ச்சியான வாழ்க்கை

நான் நினைத்து பார்க்க முடியாது அளவிலான ஒரு கணவர் எனக்கு கிடைத்தார். எங்களது தாம்பத்திய வாழ்க்கையும் சிறப்பாக உள்ளது. நான் முழுமையான மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எனக்கு எதிலும் குறைவில்லை...

சிகிச்சை

சிகிச்சை

உடலுறவின் மீது ஈடுபாடு இல்லாத நிலை மற்றும் பயம் ஆகியவை மன ரீதியான நோய்கள் ஆகும். இவை anorexia or asexuality என்று அழைக்கப்படுகின்றன. இதற்கு மனநில மருத்துவரிடம் சென்றால் எளிதில் தீர்வு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

treatment for afraid of having intercourse

treatment for afraid of having intercourse
Story first published: Monday, October 9, 2017, 15:06 [IST]