14 வயதிலேயே கர்ப்பமான சிறுமி..! ஒரே இரவில் வாழ்க்கையே மாறிப்போன சோகம்!

Written By:
Subscribe to Boldsky

நான் எனது 14 வயதில் கர்ப்பமானேன்.. எனக்கு எனது 15 வயதில் பெண் குழந்தை பிறந்தது..! ஒரு இரவில் எனக்கும் என் காதலுனுக்கும் இடையே உண்டான உடலுறவு நடந்தது. அந்த இரவிற்கு பிறகு எனது வாழ்க்கையே மாறிப்போனது. 3 முதல் 4 வாரங்களில் தான் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற உண்மை எனக்கு தெரியவந்தது.

நான் இது பற்றி என் நம்பிக்கைக்குரிய அத்தை ஒருவரிடம் தெரிவித்தேன். அவர் என்னை அழைத்து சென்று பரிசோதனை செய்தார். எனது சிறுநீர் அந்த பரிசோதனை கருவிக்குள் சென்றதும் இரண்டு கோடுகள் தென்பட்டது. நான் என் அத்தையை பார்த்தேன்.. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. என் அத்தை எல்லாம் நல்லபடியாக அமையும் என்று கூறினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பத்தை பற்றி கூறினேன்

கர்ப்பத்தை பற்றி கூறினேன்

அந்த சமயத்தில் நான் என் காதலனுடன் இல்லை.. ஆனால் நாம் இருவரும் பேச வேண்டும் என்று அவனிடம் தெரிவித்தேன். அதனால் நான் அவனது வீட்டிற்கு சென்று, எனது கர்ப்பம் பற்றி அவனிடம் தெரிவித்தேன். அவன் என்னை கட்டி அணைத்து அழுக ஆரம்பித்துவிட்டான். அவன் செய்த தவறுக்காக என்னிடம் மன்னிப்பு கேட்டான். கர்ப்ப காலத்தில் நான் உனக்கு உதவியாக இருப்பேன் என்றும் கூறினான்.

அதன் பிறகு நாங்கள் இருவரும் எனது பெற்றோர்களிடம் சென்று இது பற்றி பேசினோம். என் பெற்றோர்கள் எங்களுக்கு ஏற்கனவே இது பற்றி தெரியும் என்று கூறினார்கள். எங்களது ஆதரவு உனக்கு இருக்கும் என்றும் தெரிவித்தார்கள்.

இந்த மாதிரி விஷயங்களை கர்ப்பிணி பெண்களிடம் மறந்து கூட பேசாதீங்க!

ஆணா? பெண்ணா?

ஆணா? பெண்ணா?

எனக்குள் வளரும் சின்னஞ்சிறு கருவை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனக்குள் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாக இருந்தது. எனக்கு பெண் குழந்தை வேண்டும் என்று தோன்றியது. அதே போல எனக்கு பெண் குழந்தை தான் பிறந்தது. எனக்கு கர்ப்ப காலத்தில் காலையில் வரும் காய்ச்சல் எதுவும் வரவில்லை. ஆனால் அந்த 9 மாதங்கள் மிகவும் மெதுவாக நகர்ந்தது. எனக்கு என் குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் எனக்கு பிரசவம் பற்றிய பயமும் இருந்தது.

வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா - எப்படி அறிவது? இதோ! 10 வழிகள்!

நாளைக்கே பார்க்கணுமா?

நாளைக்கே பார்க்கணுமா?

அப்போது மருத்துவர் "உன் குழந்தையை நாளையே பார்க்க வேண்டுமா? " என்று கேட்டார். எனக்கு அவர் கேட்டது மகிழ்ச்சியை கொடுத்தது. என் குழந்தையை பார்க்க போகிறோம் என்ற ஒரு உற்சாகம் எனக்கு தோற்றிக் கொண்டது!

நான் வீட்டிற்கு சென்று, எனக்கான உடைகள், குழந்தைகான உடைகள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டேன். இரவு 12 மணிக்கு மருத்துவமனையை அடைந்தேன். நர்ஸ்கள் என்னை பிரசவத்திற்காக தயார் செய்தார்கள். அதன் பிறகு நான் காத்திருந்தேன்... காத்திருந்தேன்... காலை 6.30 மணிக்கு தான் எனது பனிக்குடம் உடைந்தது. அது எனக்கு விசித்திரமாக இருந்தது.

குழந்தை வர போகிறது

குழந்தை வர போகிறது

பனிக்குடம் உடைந்த பிறகு, எனக்கு வலி அதிகரித்தது நான் மருத்துவர்களிடம் எபிடோரல் (இடுப்பிற்கு கீழ் வலி தெரியாமல் கொடுக்கப்படுவது) கேட்டேன். எனக்கு 15 நிமிடங்களுக்கு பிறகு தான் அதை கொடுத்தார்கள். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு எனக்கு குழந்தை வெளியே வருவதற்காக அழுத்துவது தெரிந்தது...! அதனால் எனது அம்மா, நர்ஸ்களை அழைத்தார். அவர்கள் செக் செய்து பார்த்துவிட்டு, வாவ்..! குழந்தை வெளியே வரப்போகிறது. தலை தெரிகிறது. புஷ் செய்ய வேண்டாம். ஏனென்றால் என்னால் பிரசவம் பார்க்க இயலாது.. ஒரு 15 நிமிடங்கள் பொருத்துக் கொள்ளுங்கள்.. என்று மருத்துவரை அழைக்க ஓடினாள் அந்த பெண்..!

குழந்தை பிறந்தது!

குழந்தை பிறந்தது!

எனக்கு அழுத்தம் அதிகமாக இருந்தது...! மருத்துவர் வந்து குழந்தைகள் கைகள் முதலிலேயே வந்துவிட்டது என்று தெரிவித்தார். என் காதலனும் அருகில் தான் இருந்தான்.. அவன் முகத்தை பார்க்க இதை எல்லாம் இதற்கு முன்னால் நான் பார்த்ததில்லை என்பது போன்ற பிரம்மிப்பு தெரிந்தது. நான் புஷ் செய்வதற்கான நேரம் வந்தது..! இரண்டே புஷ் தான் செய்தேன்.. என் குழந்தை வெளியே வந்துவிட்டது. எனது குழந்தை காலை 9.34 மணிக்கு பிறந்தது.

தொப்புள் கொடி உறவு

தொப்புள் கொடி உறவு

எனது காதலன் தான் குழந்தையின் தொப்புள் கொடியை கட் செய்தான்..! அதன் பிறகு நர்ஸ்கள் குழந்தையை சுத்தம் செய்து என்னிடம் கொடுத்தார்கள். பிறகு என் குழந்தையை பரிசோதனைக்காக எடுத்து சென்றுவிட்டார்கள். அதன் பிறகு 4-5 மணிநேரங்கள் கழித்து என் குழந்தையை என்னிடம் திரும்ப கொடுத்தார்கள்.

மகிழ்ச்சியான நாள்

மகிழ்ச்சியான நாள்

எனக்கு உற்சாகமாக இருந்தது..! நான் அழுதேன்..! ஏன் என்றால் அந்த குழந்தை நானும் என் காதலனும் சேர்ந்து உருவாக்கிய ஒரு உயிர்..! நாங்கள் வீட்டிற்கு செல்லும் போது மிகவும் மகிழ்ச்சியாக சென்றோம். நான் என் குழந்தைக்கு அழகிய ஆடை அணிவித்துவிட்டிருந்தேன்..! அவள் எங்கள் வீட்டிற்கு வந்த அந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று தான் சொல்ல வேண்டும். அவள் அழுகவே மாட்டாள்.. தூங்கிக் கொண்டே தான் இருந்தாள். அவள் தூங்கும் போது மிகவும் அழகாக இருக்கும்.

கடினமாக தெரியவில்லை

கடினமாக தெரியவில்லை

என் குழந்தைக்கு இப்போது இரண்டு மாதங்கள் ஆகிறது. அவள் தான் என் வாழ்க்கையை நான் வாழ்வதற்கான ஒரு ஆதாரமாக இருக்கிறாள். எனக்கு அவள் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி..! எனக்கு உண்மையில் தாயாவது கடினமான ஒன்றாக இல்லை..! வீடு, கார் என்று செட்டில் ஆகிவிட்டு தான் குழந்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்களை நான் தவறாக சொல்லவில்லை..! ஆனால் நானும் என் காதலனும் எங்களது குழந்தைக்கு தேவையான அனைத்தையும் நிச்சயம் எந்த குறையும் இல்லாமல் செய்வோம்...!!!

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pregnancy Story : I Got Pregnant at fourteen

Pregnancy Story : I Got Pregnant at fourteen
Subscribe Newsletter