வாயோடு வாய் வைத்து தன் குழந்தையின் உயிரை காப்பாற்றிய தந்தை!

Written By:
Subscribe to Boldsky

எந்த மருந்து பொருளும் இன்றி ஒருவரின் உயிரை காப்பாற்ற முடியுமா? நிச்சயமாக முடியும் ஒருவரின் அன்பும், நம்பிக்கையும் கட்டாயமாக ஒருவரின் உயிரை காப்பாற்றும் ஆற்றல் கொண்டது என்பதற்கு மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஆதாரமாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூச்சு திணறல்:

மூச்சு திணறல்:

பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை தீடிரென மூச்சு திணறாலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக அந்த குழந்தையின் தந்தை தனது வாயோடு குழந்தையின் வாயை வைத்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் குழந்தை உயிர் பிழைத்து விட்டது.

சுவாச கோளாறு

சுவாச கோளாறு

மும்பையை சேர்ந்த 45 நாட்களே ஆன குழந்தை ஒன்று சுவாச பிரச்சனை மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த குழந்தை திடீரென மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டுவிட்டது.

மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் குழந்தையின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிட்டது. இதனையடுத்து அந்த குழந்தையின் தந்தை வாயோடு வாய் வைத்து அந்த குழந்தையை முத்தமிட்டுள்ளார்.

கட்டி

கட்டி

பின்னர் மருத்துவர்கள் ஆராய்ந்து பார்த்ததில், குழந்தைக்கு இருதயத்தின் மேற்பகுதியில் கட்டி இருப்பது தெரியவந்தது. அந்த குழந்தை உடனடியாக ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையின் மூலம் கட்டியும் நீக்கப்பட்டது.

கருவில்..!

கருவில்..!

இந்த குழந்தைக்கு கருவில் இருக்கும் போதே கட்டி உருவாகியிருக்கக்கூடும் என்று மருத்துவர்களின் குழு தெரிவித்துள்ளது.

கார்டியோபூமோனேரி ரெசசிடிஷன்

கார்டியோபூமோனேரி ரெசசிடிஷன்

கார்டியோபூமோனேரி ரெசசிடிஷன் (Cardiopulmonary resuscitation) இது ஒரு அவசர சிகிச்சை முறையாகும். இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கவும், சுவாச கோளாறை சரி செய்யவும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. வாயிலிருந்து வாய்க்கு சுவாசத்தை கொடுப்பதன் மூலம் அவசர காலத்தில் ஒரு நபரை காப்பாற்ற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

man saves his baby life using mouth to mouth

man saves his baby life using mouth to mouth
Story first published: Monday, July 31, 2017, 17:33 [IST]